கோவையில் விபத்தில் வாலிபர் பலி

விபத்தில் பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார். காயம் அடைந்த ஹரிகரன் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகிறார்.
கோவையில் விபத்தில் வாலிபர் பலி
Published on

கோவை,

நீலகிரி மாவட்டம், எமரால்டு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (27) கூலித் தொழிலாளி. இவரது மகன் பவிஸ் (23), சம்பவத்தன்று பவிஸ் மற்றும் அவரது நண்பர் ஹரிகரன் தங்கள் நண்பர் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு மோட்டார் சைக்கிளில் புட்டுவிக்கியில் இருந்து கோவைப்புதூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளை ஹரிகரன் ஓட்டி வந்தார். அப்போது, மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பவிஸ் சம்பவ இடத்திலயே பலியானார்.

இதில் படுகாயமடைந்த ஹரிகரனை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து விபத்து குறித்து பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com