என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோட்டில் 8 மையங்களில் பிளஸ்-2 துணைத்தேர்வு
    X

    ஈரோட்டில் 8 மையங்களில் பிளஸ்-2 துணைத்தேர்வு

    • ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.
    • துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு வருகிற 19-ந் தேதி முதல் தொடங்கி 26-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்தேர்வானது ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு மேல்நிலைப்பள்ளி, பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோபி பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, கோபி வைர விழா மேல்நிலை ப்பள்ளி உள்ளிட்ட 8 மையங்களில் தேர்வு நடை பெற உள்ளது.

    இதில் 4 மையங்கள் பிளஸ் -2 தேர்வினை ஏற்கனவே எழுதி தோல்வியுற்றவர்களுக்கும், புதிதாக பிளஸ்-2 தேர்வும் தனித்தேர்வர்களுக்கு 4 மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், பிளஸ்-1 துணைத்தேர்வு வரும் 27-ந் தேதி தொடங்கி ஜூலை மாதம் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதற்கான வினாத்தாள்கள் ஈரோடு காந்திஜி சாலை அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த விடைத்தாள் மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த துணை த்தேர்வுக்கான ஏற்பாடுகளை அரசு தேர்வுகள் துறை மற்றும் பள்ளிக்க ல்வித்துறை செய்து வருகிறது.

    Next Story
    ×