என் மலர்
நீங்கள் தேடியது "தூய்மைப்பணி செய்த"
- பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.
- பொதுமக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பைகளை அப்புறப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் கவுன்சிலர்களாக உள்ளனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் வார்டு களில் துப்புரவு பணி செய்வதில் பாகுபாடு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
அந்தியூர் பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சரஸ்வதி விஸ்வநாதன். அ.தி.மு.க. கவுன்சிலரான இவரது பகுதியில் அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் முறையாக துப்புரவு பணிகளை செய்வ தில்லை என குற்றம் சாட்டினார்.
இந்த நிலையில் அ.தி.மு.க. கவுன்சிலர் சரஸ்வதி விஸ்வநாதன் தலைமையில் 1-வது வார்டு பகுதியை சேர்ந்த பொது மக்கள் அந்த பகுதியில் உள்ள குப்பை களை அப்பு றப்படுத்தி வீதிகளை சுத்தம் செய்தனர்.






