என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் வழங்க வேண்டும்"

    • இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருகிறது.
    • குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

     மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பஞ்சாயத்து உட்பட்ட இலக்கம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்க வில்லை எனவும், மேலும் இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருவதாகவும் அவற்றையே நம்பி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களை உரிய நேரத்துக்கு அனுப்பி வைப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது.

    கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பழுதான மின் மோட்டாரை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும், அவற்றை உடனே சீர் செய்து அனைத்து வீதிகளிலும் சிறிய அளவு குடிநீர் டேங்க் பொருத்தி முறையான குடிநீர் வழங்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக காட்டேரி பஞ்சாயத்து தலைவரை தொடர்பு கொண்டபோது மின்மோட்டார் காயில் பகுதி பழுதானதாகும். அதனால் அதை சீர் செய்ய ஒரு சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தினால் இன்று சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று மோட்டாரை பொருத்தி முறையாக குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக கூறினார்.

    • ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை.
    • சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலு வலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடந்தது.

    இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை வழங்கினர்.

    அப்போது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த அவல்பூந்துறை, பூந்துறை சேமூர் பஞ்சா யத்தை சேர்ந்த 9-வது வார்டு மக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் மேற்கண்ட பகுதியில் 20 குடும்பங்களுடன் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 3 மாதங்களாக ஊர் பொது குடிநீர் குழாய் பழுதாகி சரியாக குடிநீர் வினியோகம் இல்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

    பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய வலி யுறுத்தி யூனியன் அலு வலகத்திலும் மனு கொடு த்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டி உள்ளது.

    எனவே தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு பழுதான குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுத்து சீரான குடிநீர் வினியோகம் செய்ய வழி வகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதேப்போல் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒரு ங்கிணைப்பாளர், மகளிர் பாசறை சீதாலட்சுமி தலை மையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டு வந்து மனு கொடு த்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக அறி வுறுத்து கிறோம். சமுதாய த்தில் நடக்கும் பல இழிவான செயல்களுக்கு , பண்பாட்டு சீரழிவிற்கும் மூல காரணமாக அமைவது மது தான்.

    எனவே நடுத்தர மற்றும் அடித்தட்டு உழைக்கும் மக்களின் குடும்பங்களை சீரழிக்கும் அயல்நாட்டு மது வகைகளை விற்கும் தமிழக அரசு உடனடியாக அதை கைவிட்டு நம்முடைய பாரம்பரிய பானங்கள், தென்னங்கள் இறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    ×