என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பழுதான மின்மோட்டாரை சரிசெய்து  முறையாக குடிநீர் வழங்க வேண்டும்
    X

    பழுதான மின்மோட்டாரை சரிசெய்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும்

    • இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருகிறது.
    • குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரி பஞ்சாயத்து உட்பட்ட இலக்கம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்த பகுதியில் முறையாக குடிநீர் குழாய்கள் அமைக்க வில்லை எனவும், மேலும் இப்பகுதியில் 7 நாட்களுக்கு ஒரு முறை காவிரி கூட்டுக் குடிநீர் வருவதாகவும் அவற்றையே நம்பி இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    குடிநீருக்காக அருகே உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களை உரிய நேரத்துக்கு அனுப்பி வைப்பது மிகுந்த சிரமமாக இருக்கிறது.

    கடந்த ஒரு வாரங்களுக்கு முன்பு பழுதான மின் மோட்டாரை சீர் செய்யாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும், அவற்றை உடனே சீர் செய்து அனைத்து வீதிகளிலும் சிறிய அளவு குடிநீர் டேங்க் பொருத்தி முறையான குடிநீர் வழங்கிட வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது தொடர்பாக காட்டேரி பஞ்சாயத்து தலைவரை தொடர்பு கொண்டபோது மின்மோட்டார் காயில் பகுதி பழுதானதாகும். அதனால் அதை சீர் செய்ய ஒரு சில நாட்கள் ஆகிவிட்ட காரணத்தினால் இன்று சரி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று மோட்டாரை பொருத்தி முறையாக குடிநீர் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்வதாக கூறினார்.

    Next Story
    ×