என் மலர்tooltip icon

    திண்டுக்கல்

    • செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது.
    • 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் வாரம் தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடு, கோழிகள், சேவல்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இதனை வாங்குவதற்காகவும் பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை தருகின்றனர். வருகிற 29-ந்தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று சந்தைக்கு ஏராளமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    இதனை வாங்குவதற்கும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகாலையிலேயே சந்தையில் குவிந்தனர். செம்மறி ஆடு 1 ஜோடி ரூ.80 ஆயிரம் வரை விற்கப்பட்டது. 10 கிலோ கொண்ட வெள்ளாடு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்பனையானது.

    மருக்கை ஆடுகளையும் விவசாயிகள் வளர்ப்புக்காக அதிக அளவில் வாங்கிச் சென்றனர். நாட்டுக்கோழி ரூ.380 முதல் ரூ.450 வரை விற்கப்பட்டது. கட்டுச்சேவல்கள் ரூ.3000 முதல் ரூ.30,000 வரை விற்பனையானது. சேவல்களை சந்தையிலேயே விளையாட வைத்து அதன் தரத்தை ஆய்வு செய்து வாங்கிச் சென்றனர்.

    வழக்கமாக காலை 5 மணிக்கே ஆடு, கோழிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். இன்று சந்தை தொடங்கிய 2 மணி நேரத்தில் ரூ.2 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது பல்வேறு கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால் அதற்காகவும் ஆடுகள் வாங்கிச் செல்லப்பட்டன.

    மதுரையைச் சேர்ந்த ஒரு கிராமத்தினர் 100 ஆடுகளை மொத்தமாக வாங்கிச் சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை தங்கள் வீட்டில் ஒரு வாரத்துக்கு முன்பே வளர்த்து பண்டிகை நாளில் அதன் இறைச்சியை 3 கூறுகளாக பிரிப்பார்கள். ஒரு பகுதியை இயலாதவர்களுக்கும், மற்றொரு பகுதியை தங்கள் உறவினர்களுக்கும், மீதமுள்ள பகுதியை தங்கள் குடும்பத்துக்கும் பயன்படுத்திக் கொள்வார்கள்.

    வருடத்தில் ஒரு முறை குர்பானி கொடுக்க வேண்டும் என்ற இஸ்லாமியர்களின் கடமையை நிறைவேற்றும் வகையில் இந்த நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் அய்யலூர் சந்தைக்கு ஏராளமான இஸ்லாமியர்கள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்தனர்.

    வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது மட்டுமே இது போன்ற விற்பனை நடைபெறும் நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகைக்கும் விற்பனை அதிகரித்துள்ளது என்றனர்.

    • 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.
    • ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது கோவை கிங்ஸ் அணி.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்ற 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன.

    அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார்.

    இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார்.

    திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது. கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக சுஜய் அரை சதம் அடித்து 72 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். தொடர்ந்து, அதீக் 13 ரன்களும், முகிலேஷ்- சுரேஷ் குமார் தலா 9 ரன்களும், சாய் சுதர்ஷன் 7 ரன்களும், ராம் அரவிந்த் 2 ரன்களும் எடுத்தனர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து கோவை கிங்ஸ் அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.

    • அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ 58 ரன்கள் சேர்த்தார்.
    • கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெற்றுவரும் 12வது லீக் ஆட்டத்தில் பால்சி திருச்சி, லைக்கா கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கோவை கிங்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த பால்சி திருச்சி அணி துவக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. அக்சய் சீனிவாசன், மணிபாரதி, டேரில் பெராரியோ ஆகியோர் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய கேப்டன் கங்கா ஸ்ரீதர் ராஜூ, 58 ரன்கள் சேர்த்து ஆறுதல் அளித்தார். இதேபோல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜ்குமார் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். திருச்சி அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்தது.

    கோவை கிங்ஸ் தரப்பில் மணிமாறன் சித்தார்த் 3 விக்கெட்டுகளும், ஷாருக் கான் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    இதையடுத்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கோவை கிங்ஸ் களமிறங்கியது.

    • சேப்பாக் அணியின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.
    • அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.

     குறிப்பாக பாபா அபராஜித் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஆனால் கடைசி ஓவர் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ராமலிங்கம் ரோகித் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராஜ் 3வது பந்தில் பவுண்டரியும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும் அடித்தார். 5வது பந்தை எதிர்கொண்ட சசிதேவ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை எதிர்கொண்ட ரகில் ஷா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    கடைசி வரை போராடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    • திண்டுக்கல் அணியில் அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார்.
    • சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ரகில் ஷா 3 விக்கெட், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் டாஸ் வென்று பீல்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார். சுபோத் 31 ரன், சரத் குமார் 25 ரன், சிவம் சிங் 21 ரன், ராகுல் 20 ரன்கள் அடித்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் தரப்பில் ரகில் ஷா 3 விக்கெட், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி களமிறங்குகிறது.

    • கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவி குழு மூலம் வங்கியில் பெற்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
    • வங்கி நிர்வாகம் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி மற்றும் 13 உறுப்பினர்களை தேடிச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பெஞ்சமின் காலனியை சேர்ந்த அமுதேஸ்வரி என்பவர் அப்பகுதி பெண்களுடன் இணைந்து மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி உள்ளனர்.

    இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மகளிர் சுய உதவி குழு மூலம் வங்கியில் பெற்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடனை திருப்பி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இதனால் வங்கி நிர்வாகம் மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகி மற்றும் 13 உறுப்பினர்களை தேடிச்சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

    அப்போது வங்கி ஊழியரிடம் அமுதேஸ்வரி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கடன் தொகையை திருப்பி செலுத்தியதாகவும், வங்கியில் கடன் தொகையை செலுத்தாததற்கு குழு தலைவர் தமிழ்செல்வி தான் காரணம் என கூறியதாக கூறப்படுகிறது.

    இதனைத்தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு தலைவர் தமிழ்ச்செல்விக்கும், அமுதேஸ்வரி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை காரணமாக மனமுடைந்த அமுதேஸ்வரி (42), அவரது மகன் ஆறுமுகம் (20) மற்றும் அவர்களுடன் வீட்டில் வசித்துவந்த அண்ணி மாரியம்மாள் (60), கணவரின் தங்கை மகள் சினேகா (16) ஆகிய 4 பேரும் நேற்று இரவு உணவில் விஷத்தை கலந்து சாப்பிட்டனர். வீட்டில் மயங்கி கிடந்தவர்களை அருகிருந்தவர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக திருச்செந்தூர் கோவில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை.
    • விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    திண்டுக்கல்:

    தமிழகம் முழுவதும் அ.தி.மு.க சார்பில் இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் இரா.விசுவநாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    தி.மு.க.வின் கருவூலமாக செந்தில்பாலாஜி செயல்பட்டு வருகிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் கைது செய்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர அவசரமாக பதட்டத்துடன் அவரை சென்று சந்தித்தார். உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி அமலாக்கத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    ஆனால் ஒரு அமைச்சரை விசாரணையில் இருந்து காப்பாற்ற தி.மு.க அரசு முயல்வது வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒன்றாகும். அமலாக்கத்துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர்களை அம்மாநில அரசு பதவியில் இருந்து நீக்கிவிடும். ஆனால் தமிழக அரசு அதுபோல் செய்யவில்லை. கனிமொழி கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த போது அவரை சென்று மு.க.ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டபோது சென்று பார்த்து தனது கருத்துகளை பதிவு செய்திருப்பது முதலமைச்சர் பதவிக்கு அழகல்ல.

    தற்போது 3-ம் தர பேச்சாளர் போல அவர் பேசி வருகிறார். ரூ.30ஆயிரம் கோடி ஊழல் தொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைதொடர்ந்து அவர் வேறு இலாகாவிற்கு மாற்றப்பட்டார். அதனைதொடர்ந்து பொன்முடியும் தற்போது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார். விரைவில் தமிழக மந்திரிகள் அனைவரும் குற்றவாளிகள் கூடாரத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • டி.என்.பி.எல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
    • நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    திண்டுக்கல்:

    7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கோவையில் கடந்த 12-ந் தேதி தொடங்கியது . 16-ந் தேதி வரை அங்கு 6 ஆட்டங்கள் நடத்தப்பட்டது. ஒருநாள் ஓய்வுக்கு பிறகு திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் 18-ந் தேதி முதல் போட்டிகள் நடை பெற்று வருகின்றன.

    நேற்று நடந்த 10 வது லீக் ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்சை வீழ்த்தியது. 2 போட்டியில் தோற்ற அந்த அணிக்கு முதல் வெற்றி கிடைத்தது. 2 போட்டியில் வென்ற நெல்லை அணிக்கு முதல் தோல்வி ஏற்பட்டது.

    டி.என்.பி.எல் போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 3.15 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதுகின்றன.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு இது 4-வது ஆட்டமாகும். முதல் போட்டியில் சேலம் ஸ்பார் டன்சை 52 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்சை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. 3-வது போட்டியில் கோவை கிங்சிடம் 8 விக்கெட்டில் தோல்வியை தழுவியது.

    2 வெற்றி, 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று இருக்கும் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் இன்றைய ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை தோற்கடித்து 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. அதில் இருந்து மீண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. திருச்சி அணியை 6 விக்கெட் வித்தியாசத்திலும், மதுரை அணியை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தி இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சம பலத்துடன் திகழும் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது.

    இரவு 7.15 மணிக்கு நடைபெறும் 2-வது போட்டியில் கங்கா ஸ்ரீதர் ராஜூ தலைமையிலான பால்சி திருச்சி- ஷாருக்கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. திருச்சி அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது. அந்த அணி முதல் 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    கோவை கிங்ஸ் அணி 3 ஆட்டத்தில் இரண்டில் வெற்றி பெற்று ஒன்றில் தோற்றது. அந்தஅணி 3-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    • ஜோஸ்வாவின் மாமியாரிடம் அதேபகுதியை சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர்.
    • ஆற்றுப்பாலம் அருகே அமர்ந்திருந்த அவர்களிடம் ஜோஸ்வா தனது மாமியாரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் உண்டாரபட்டி அருகே உள்ள பிறகரை ஸ்டெல்லா நகரை சேர்ந்தவர் எட்வின்ஜோஸ்வா(28) கூலித்தொழிலாளி. இவருக்கு கிறிஸ்டி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். ஜோஸ்வாவின் மாமியாரிடம் அதேபகுதியை சேர்ந்த சிலர் பணம் கேட்டு தகராறு செய்து வந்தனர்.

    நேற்றும் அவரது மாமியாரிடம் தகராறுசெய்த கும்பல் அந்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்றுவிட்டனர். இதுகுறித்து ஜோஸ்வாவிடம் அவரது மாமியார் தெரிவித்தார். இதனையடுத்து சந்தானவர்த்தினி ஆற்றுப்பாலம் அருகே அமர்ந்திருந்த அவர்களிடம் ஜோஸ்வா தனது மாமியாரின் செல்போனை தருமாறு கேட்டுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஜோஸ்வாவை சரமாரியாக தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி கிறிஸ்டி வேடசந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வேல்மணி வழக்குபதிவு செய்து தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர்.

    • பணியாளர் பற்றாக்குறையால் காலை உணவு தயாரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
    • சுக்காம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தமிழக அரசின் காலை உணவு திட்ட சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி பணியாட்களை நியமிக்க வேண்டும்.

    அய்யலூர் பேரூராட்சியில் காலை உணவு திட்ட சமையலர் பணிக்கு லஞ்சம் பெற்று வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காலை உணவு திட்ட சமையலர் பணியில் மாணவர்களின் பெற்றோருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். பணியாளர் பற்றாக்குறையால் காலை உணவு தயாரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது என அதில் தெரிவித்திருந்தது.

    இதனையடுத்து சுக்காம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர். சுக்காம்பட்டி, பூசாரிபட்டி, குரும்பபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாணவர்களை மந்தையில் அமரவைத்து நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

    • 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது.
    • திருப்பூர் தமிழன்ஸ் அணியை சேர்ந்த அதிகபட்சமாக துஷார் ரகேஜா 49 ரன்கள் எடுத்தார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் (35), குருஸ்வாமி அஜிதேஷ் (20) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது.

    திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    கணேசன் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்கியது.

    இதில் அதிகபட்சமாக துஷார் ரகேஜா 49 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து, ராதாகிருஷ்ணன் 34 ரன்களும், ராஜேந்திரன் விவேக் 21 ரன்களும், கணேஷ் 3 ரன்களும் எடுத்தனர்.

    இந்நிலையில், 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு எளிதில் 128 ரன்கள் எடுத்து திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றனர்.

    • நெல்லை அணியில் அதிகபட்சமாக சோனு யாதவ் 35 ரன்கள் எடுத்தார்.
    • திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கல்லில் நடைபெறும் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற திருப்பூர் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட்டிங் செய்த நெல்லை அணி திருப்பூர் அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சோனு யாதவ் (35), குருஸ்வாமி அஜிதேஷ் (20) தவிர மற்ற வீரர்கள் குறைந்த ரன்களில் அவுட் ஆகினர். 18.2 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த அந்த அணி 124 ரன்களில் சுருண்டது. திருப்பூர் அணி தரப்பில் புவனேஸ்வரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். கணேசன் 2 விக்கெட் எடுத்தார்.

    இதையடுத்து 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் தமிழன்ஸ் அணி களமிறங்குகிறது.

    ×