search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம்.. திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி
    X

    கடைசி பந்து வரை பரபரப்பான ஆட்டம்.. திண்டுக்கல் டிராகன்ஸ் த்ரில் வெற்றி

    • சேப்பாக் அணியின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.
    • அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    திண்டுக்கல்:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று திண்டுக்கலில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஆதித்ய கணேஷ் 44 ரன்கள் அடித்தார்.

    இதையடுத்து 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 15 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் கேப்டன் ஜெகதீசன், பாபா அபராஜித் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தது.

    குறிப்பாக பாபா அபராஜித் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். ஜெகதீசன் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அபராஜித் 40 பந்துகளில் 2 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    ஆனால் கடைசி ஓவர் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ராமலிங்கம் ரோகித் இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய லோகேஷ் ராஜ் 3வது பந்தில் பவுண்டரியும், நான்காவது பந்தில் ஒரு ரன்னும் அடித்தார். 5வது பந்தை எதிர்கொண்ட சசிதேவ் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், அந்த பந்தை எதிர்கொண்ட ரகில் ஷா ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

    கடைசி வரை போராடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஒவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் திண்டுக்கல் அணி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.

    Next Story
    ×