என் மலர்
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலூர்:
நடுவீரப்பட்டு அருகே உள்ள சாத்தமாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் பஞ்சன் (வயது 47). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள முந்திரிதோப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகன் விஜய் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் பஞ்சனுக்கும், அவரது உறவினர் சசிக்குமார் என்பவருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படுவதும், பின்னர் சமாதானம் ஆவதுமாக இருந்துள்ளனர்.
சம்பவத்தன்று பஞ்சன், சசிக்குமார், ஜெய்பிரகாஷ், நந்தகுமார் ஆகியோர் சேர்ந்து மது குடித்துள்ளனர். பின்னர், முன்விரோதத்தில் ஆத்திரத்தில் இருந்த சசிக்குமார், தனது நண்பர்களுடன் சேர்ந்து கயிற்றால் பஞ்சனின் கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார். இதையடுத்து, பஞ்சன் தூக்குப்போட்டு கொண்டதாக நம்ப வைக்கும் வகையில் அங்குள்ள மரத்தில் அவரை தூக்கில் தொங்க போட்டு விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து மாசிலாமணி மகன் சசிக்குமார்(28), செஞ்சிவேல் மகன் ஜெயபிரகாஷ் என்கிற பிரகாஷ்(25) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான 2 பேர் மீதும் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியல் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர்களது தொடர் குற்ற செய்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு, 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டார். அதன் பேரில் சிறையில் உள்ள சசிக்குமார், பிரகாஷ் ஆகியோரிடம் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.
இதேபோல் தூக்கணாம்பாக்கம் அடுத்த நல்லாத்தூரை சேர்ந்தவர் தனசேகரன் (37). இரும்பு வியாபாரி. கரிக்கலாம்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மதன்(26) மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனசேகரனை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய வில்லியனூரை சேர்ந்த ஜாக் என்கிற ஜெகனை (32) புதுச்சேரி மாநில போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சிறுபாக்கம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள பெரியாயி அம்மன் கோவில் அருகே சித்தேரியை சேர்ந்த ராயபிள்ளை மகன் மருதமுத்து(27), சாராயத்தை பதுக்கி வைத்து விற்றுக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து, மருதமுத்துவை கைது செய்தனர். இவர் மீது 4 வழக்குகள் உள்ளன.
இதனால் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஜெகனை குண்டர் சட்டத்திலும், மருதமுத்துவை தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி, ஜெகனை குண்டர் சட்டத்திலும், மருதமுத்துவை தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி சிறையில் உள்ள ஜெகனிடம், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகலும், மருதமுத்துவிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான நகலும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் அருகே சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே தே.கோபுராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கதுரை, (வயது 20). கூலி தொழிலாளியான இவர் கடந்த 16-ந் தேதி, அதேபகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை, கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில், அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தங்கதுரையை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம் அருகே மருந்து கடை அதிபர் வீட்டில் 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சிவபுரியை சேர்ந்தவர் கல்யாணராமன் (வயது 50). இவர் சிதம்பரம் அருகே முட்லூர் பகுதியில் மருந்துகடை நடத்தி வருகிறார். நேற்று ஆயுதபூஜையையொட்டி குடும்பத்துடன் சிவபுரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டுக்கு சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம மனிதர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை திருடி சென்றனர்.
நேற்று மாலை கல்யாணராமன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போய் இருப்பதை பார்த்து பதறிபோனார்.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசில் கல்யாணராமன் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி ஆகியோர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கைரேகை நிபுணர்களும் ரேகையை பதிவு செய்து கொள்ளையர்களை பற்றி துப்புதுலக்கி வருகின்றனர்.

நெய்வேலி அருகே கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:
நெய்வேலி அருகே உள்ள வடக்குத்து தில்லை நகரை சேர்ந்தவர் ஆறுமுக வேலன்(வயது 46). இவர் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே ஆவின்பால் நிலையமும் டீக்கடையும் நடத்தி வருகிறார். நேற்று காலை இவர் கடையில் இருந்தபோது கடைக்கு வந்த 3 பேர், ஆறுமுகவேலனிடம் கத்தியை காட்டி ஆயிரம் ரூபாய் கொடு இல்லையென்றால் கத்தியால் குத்தி விடுவோம் என்று மிரட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஆறுமுகவேலன் திருடன், திருடன்... என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.
இதற்கிடையே இதுபற்றி அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்கள் 3 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வடக்கு மேலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கலை என்கிற கலைச்செல்வன்(27), வடக்கு மேலூரை சேர்ந்த தெய்வசிகாமணி மகன் கமல் என்கிற கமலக்கண்ணன்(38), நெய்வேலி 28-வது வட்டத்தை சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் குமார்(39) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து கலைச்செல்வன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கடலூரில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தில் தரைக்காத்த காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும் குருக்கள் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வழக்கம்போல் கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த குருக்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது கோவிலுக்குள் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்த பணத்தை காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் இரவு குருக்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து, அதிலிருந்த காணிக்கை பணத்தை திருடி விட்டு சென்றது தெரியவந்தது.
உண்டியலில் சுமார் ரூ.3 ஆயிரம் இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூரில் சாலையோரம் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர்:
தமிழ்நாட்டின் இரண்டாவது நீளமான கடற்கரையாக கருதப்படுவது கடலூர் சில்வர் பீச்சாகும். கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் இந்த சில்வர் பீச், குதிரையேற்றம், படகு சவாரி உள்பட பல பொழுதுபோக்குகளை தரும் இடமாக விளங்குகிறது. சிறுவர்களின் மனதை கவரும் வகையில் ஒரு படகு கூடமும், பூங்காவும் இந்த கடற்கரையோரம் அமைந்துள்ளது.
இந்த கடற்கரைக்கு செல்லும் சாலையின் ஓரங்களில் சில சமூக விரோதிகள் இரவு நேரத்தில் தேவையற்ற கட்டிட கழிவுகள், மரக்கழிவுகள் மற்றும் குப்பைகள் போன்றவற்றை கொட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி கடலூர் சில்வர் பீச் பகுதியில் ஆய்வு பணி மேற்கொண்டார். அப்போது அங்கு சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டிருந்ததை பார்த்த கலெக்டர், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் சாலையோரங்களில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றிட நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து சில்வர் பீச் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அவ்வப்போது கண்காணித்து, பராமரிக்கும்படி அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது, துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி, நகராட்சி ஆணையர் அரவிந்த்ஜோதி, தாசில்தார் பலராமன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
விருத்தாசலம் அருகே பெண்களை இழிவுபடுத்திவரும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனுதர்ம நூலின் நகலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதற்கு மாநில துணை செயலாளர் நீதிவள்ளல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் திருஞானம், சுப்பு ஜோதி, மாநில துணை செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி வருபவரை கைது செய்ய வேண்டும்,
பெண்களை இழிவுபடுத்திவரும் மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதையடுத்து மனுதர்ம நூலின் நகல்களை நடுரோட்டில் எரிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தீயை அணைத்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதில் ஒன்றிய பொருளாளர் எழில்வான்சிறப்பு, வக்கீல் தன்ராஜ், மேட்டு காலனி முருகன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மருதையன், வக்கீல் வைரமுத்து, கம்மாபுரம் ஒன்றிய துணை செயலாளர் வீரச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நெய்வேலியில் பணத் தகராறில் செவிலியரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெய்வேலி:
நெய்வேலி வட்டம் 6 என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 53). இவர் என்.எல்.சி. மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார்.
இந்த நிலையில் ராஜேந்திரன் உயிரோடு இருந்தபோது, அவருக்கு கார் ஓட்டிய வகையில் பாக்கி இருப்பதாக சொல்லி சொரத்தூர் புது தெருவை சேர்ந்த அய்யப்பன் (28) என்பவர் பத்மாவதியிடம் பணம் கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பத்மாவதி என்.எல்.சி. மருத்துவமனையில் பணியில் இருந்தார். அப்போது அங்கு சென்ற அய்யப்பன், பத்மாவதியிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த பத்மாவதி சிகிச்சைக்காக என்.எல்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
வேப்பூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேப்பூர்:
மதுரை ஆத்திக்குளம் இந்தியன் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜாமுகமது (வயது 33). இவரது மாமனார் ரத்தினசேகர் (60), மாமியார் தனசெல்வி (55). இவர்கள் 3 பேரும் சொந்த வேலை காரணமாக நேற்று காரில் சென்னைக்கு புறப்பட்டனர். காரை ராஜாமுகமது ஓட்டினார். கடலூர் மாவட்டம் வேப்பூர் கூட்டுரோடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, காரின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் ராஜாமுகமதுவின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி முன்னாள் சென்ற லாரி மீது மோதியது.
இந்த விபத்தில் கார் பலத்த சேதமடைந்தது. இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி ராஜாமுகமது, தனசெல்வி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ரத்தினசேகர் படுகாயம் அடைந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரத்தினசேகரை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜாமுகமது, தனசெல்வி ஆகியோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்தில் சிக்கிய வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஆண் ஒருவர் பலியானார். டாக்டர் உள்பட 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 22 ஆயிரத்து 796 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 3 பேர் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பிற மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டனர். இதன் மூலம் 22 ஆயிரத்து 793 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியானதில் புதிதாக 54 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து என்.எல்.சி. வந்த ஒருவர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டையை சேர்ந்த 2 கர்ப்பிணிகள், சிதம்பரத்தை சேர்ந்த டாக்டர், அரசு செவிலியருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நோய் தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 17 பேர், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 32 பேருக்கும் நோய் தொற்று உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 21 ஆயிரத்து 661 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 139 பேர் குணமடைந்து சென்றனர். இதுவரை 21 ஆயிரத்து 800 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 264 பேர் உயிரிழந்த நிலையில், நேற்று ஒருவர் உயிரிழந்தார். இதன் விவரம் வருமாறு:-
நெய்வேலியை சேர்ந்த 49 வயது ஆண் ஒருவர் சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய் தொற்று அறிகுறிகளுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய் தொற்று உறுதியானது. இருப்பினும் அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதித்த 712 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், 70 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 759 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.

பெண்ணாடம் அருகே பக்கத்து வீட்டை பூட்டிவிட்டு சர்க்கரை ஆலை ஊழியர் வீட்டில் மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர்.
பெண்ணாடம்:
பெண்ணாடம் அருகே இறையூர் தனியார் சர்க்கரை ஆலை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சிநாதன். சர்க்கரை ஆலை ஊழியரான இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது சொந்த ஊரான பெண்ணாடத்துக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் கொளஞ்சிநாதனின் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடினர்.
பின்னர் அருகில் உள்ள கவியரசு என்பவரின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.
ஆனால் அங்கு பணம், நகை ஏதும் இல்லாததால், மர்மநபர்கள் அங்கிருந்து சென்றனர். முன்னதாக திருடுவதற்கு முன் மர்மநபர்கள் யாரிடமும் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக முன்னெச்சரிக்கையாக கொளஞ்சிநாதன், கவியரசு ஆகியோரின் பக்கத்து வீட்டை சேர்ந்த சிக்கந்தர் சிங், பைசல் ராஜ் ஆகியோரின் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.
அதன் பின்னர் மர்மநபர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை சிக்கந்தர் சிங், பைசல் ராஜ் ஆகியோர் எழுந்து வந்து பார்த்தபோது, தங்களது வீட்டின் கதவு வெளிப்புறமாக பூட்டு போட்டு பூட்டப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டுகள் உடைக்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இது குறித்த தகவலின் பேரில் பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் இது குறித்து தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
வடலூர் அருகே பஸ் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடலூர்:
தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி அருகே மணப்படை வீடு கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் மனைவி சுந்தரி (வயது 52). உடல்நலம் பாதிக்கப்பட்ட இவரை, அதே ஊரைச்சேர்ந்த உறவினரான டிரைவர் பிரேம்குமார்(38) என்பவர் சிகிச்சைக்காக காரில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அவர்களுடன் உறவினரான பூமிநாதன் மகள் ஜீவிதா (21) என்பவரும் சென்றார். இந்நிலையில் சிகிச்சை முடிந்ததும் 3 பேரும் அதே காரில் ஊருக்கு புறப்பட்டனர். கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆண்டிக்குப்பம் பகுதியில் சென்றபோது பிரேம்குமாரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த வழியாக வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி பிரேம்குமாரும், ஜீவிதாவும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
சுந்தரி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே விபத்து குறித்து தகவல் அறிந்த வடலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பலியான பிரேம்குமார், ஜீவிதா ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விபத்தில் சிக்கிய வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.