என் மலர்
கடலூர்
கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த 5ந் தேதியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது.
மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வந்தனர். இதில் இன்று காலை முதல் பெய்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து குள்ளஞ்சாவடிக்கு ஏ. ஆண்டிக்குப்பம் வழியாக அரசு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சில் கண்டக்டராக பாலன் இருந்தார்.
இந்த பஸ் ஆண்டிக்குப்பம் பஸ் நிறுத்தம் பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு இருந்தது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது.
அதன்பின்னர் கண்டக்டர் பாலன் கீழே இறங்கி வந்து மோட்டார் சைக்கிளை வேறு இடத்தில் நிறுத்தினார். இதனை பார்த்த 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டக்டர் பாலனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
படுகாயம் அடைந்த பாலன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று விட்டு காடாம்புலியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கண்டக்டரை தாக்கியது ஆண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவமணி (வயது 35), பிரபு (25) என தெரிய வந்தது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். அவரது மனைவி ரம்யா (27). இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 6-ந்தேதி காதல் திருமணம் செய்தனர்.
இந்த நிலையில் கணவர் வீட்டில் இருந்த ரம்யா திடீர் என தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ரம்யாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். விசாரணையில் கார்த்திகேயன் வீ ட்டில் கழிவறை இல்லாததால் ரம்யா அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்தார். வேறு இடத்தில் வீடு பார்த்து விட்டு அழைத்துச்செல்வதாக ரம்யாவிடம்அவர் கூறினார். ஆனால் வீடு பார்க்கவில்லை.
இது தொடர்பாக தம்பதி இடையே மொபைலில் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ரம்யா துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததது. இருப்பினும், திருமணமாகி ஒரு மாதமே ஆவதால் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து ஆர்.டி.ஓ., விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி பகுதியை சேர்ந்தவர் லூர்துசாமி. இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. இவரது மூத்த மகன் ஜான்சன் (வயது 39), மற்ற இரு மகன்களும் படித்துவிட்டு வேலை செய்து வருகின்றனர்.
ஆனால் ஜான்சன் படிக்காமலும், வேலைக்கு செல்லாமலும் இருந்தார். குடிபழக்கத்திற்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து தாய், தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி தகராறில் ஈடுபட்டார்.
நேற்றும் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை லூர்துசாமியிடம் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி ஜான்சன் கேட்டு உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரம் அடைந்த ஜான்சன் தந்தை என்று கூட பாராமல் கருங்கல்லால் லூர்துசாமியை தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்தவெள்ளத்தில் சுருண்டு விழுந்தார். இதனை பார்த்த ஜான்சன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
படுகாயம் அடைந்த லூர்துசாமியை உறவினர்கள், சிதம்பரம் ராஜா அண்ணாமலை மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லூர்துசாமி இறந்தார்.
இதுகுறித்து சோழத்தரம் போலீசார் வழக்குபதிவு செய்து ஜான்சனை தேடி வருகிறார்கள்.






