என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி
கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
பெற்றோர் காதலை ஏற்க மறுத்ததால் கடலூர் மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சேர்ந்தவர் தனசேகர். இவர் விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் சேர்ந்த காவியா ஆகியோர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நானும் காவியா என்பவரும் கடந்த 2 வருடமாக காதலித்து வந்தோம். இந்த நிலையில் பெற்றோர் எங்களின் காதலை ஏற்க மறுத்ததால் காவியாவை கடந்த மே 2-ந் தேதி எங்கள் பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டேன்.
இதனிடையில் காவியா பெற்றோர் மற்றும் உறவினர்களால் எங்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் எங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டிருந்தது.
Next Story