என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேர்வு
  X
  தேர்வு

  கடலூர் மாவட்டத்தில் 32,591 மாணவ-மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  கடலூர்:

  கொரோனா தொற்று தாக்கத்தால் இந்த கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில் பொதுத்தேர்வுகளுக்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி கடந்த 5ந் தேதியில் பிளஸ் 2 தேர்வு நடைபெற்றது.

  மேலும் பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 30ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிளஸ் 1 தேர்வு இன்று தொடங்கியது. கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதுவதற்கு மாணவ-மாணவிகள் காலை முதலே பள்ளிக்கு வந்தனர். இதில் இன்று காலை முதல் பெய்த திடீர் மழையினால் மாணவ-மாணவிகள் நனைந்தபடியும் குடை பிடித்தபடியும் பள்ளிக்கு வந்தனர்.

  கடலூர் மாவட்டத்தில் 245 பள்ளிகளிலிருந்து 16,416 மாணவர்கள், 16,175 மாணவிகள் என மொத்தம் 32,591 பேர் எழுதுகின்றனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 8 பறக்கும் படைகளில் 223 நபர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

  Next Story
  ×