என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயக்கமடைந்த பெண்
    X
    மயக்கமடைந்த பெண்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள்-போலீசார் தள்ளுமுள்ளு: பெண் மயக்கமடைந்ததால் பரபரப்பு

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென்று திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனடியாக அவரிடம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாருக்கும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பெண் திடீரென்று மயங்கி விழுந்தார். பின்னர் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலையோரத்தில் கொண்டுவந்தனர்.

    அப்போது சாலையில் மயங்கி விழுந்த பெண்ணை உடன் இருந்தவர்கள் மீட்டு சாலையில் அமர வைத்தனர். இதனை தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கூறுகையில் சிதம்பரம் குரு நமச்சிவாயர் இடத்தில் கடந்த 90 வருடங்களாக வசித்து வருகின்றோம். நாங்கள் இடத்தை ஆக்கிரமிப்பு செய்யவில்லை. அதற்கு மாறாக வாடகை தாரர்கள் வாடகை தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தோம்.

    மேலும் நகராட்சி சார்பில் நாங்கள் வசித்து வரும் வீடுகளை பூட்டி சீல் வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரியவந்தது. மேலும் வீடுகளுக்கு சீல் வைக்க நிறுத்த வேண்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். இது சம்பந்தமாக ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனைத்தொடர்ந்து போலீசார் உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து உரிய தீர்வை ஏற்படுத்த வேண்டும். இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என கடும் எச்சரிக்கை விடுத்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. மேலும் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×