என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்து
சிதம்பரம் அருகே அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலி
சிதம்பரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே அதிமுக பிரமுகர் பலியானார்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அரிய கோஷ்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம், (வயது 47) அ.தி.மு.க., பிரமுகர்.
இவர், நேற்றிரவு அரிய கோஷ்டியில் இருந்து, சிதம்பரத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். சிதம்பரம் அருகே முட்லுார் மண்டபம் அருகே சென்ற போது, பின்னால் வந்த அரசு விரைவு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், நிலை தடுமாறி சிவப்பிரகாசம் கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து கிள்ளை போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
Next Story






