என் மலர்
கடலூர்
பா.ம.க.வின் ஒருங்கிணைந்த கடலுார் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. இதில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இளைஞர்கள் ஆற்ற வேண்டிய கடமை குறித்து சிறப்புரையாற்றினார். அப்போது நெய்வேலி சட்டமன்றத் தொகுதி புதுப்பாளையத்தை சார்ந்த தி.மு.க.வைச் சார்ந்த 20 இளைஞர்கள், அதில் இருந்து விலகி, புதுப்பாளையத்தைச் சார்ந்த பா.ம.க. இளைஞரணி முன்னாள் துணைச்செயலாளர் ரஞ்சித் குமார் தலைமையில், முன்னாள் இளைஞரணி துணைச் செயலாளர் சிறுதொண்டமாதேவி பாலகுரு முன்னிலையில் சிவசங்கர், சிவா, சரவணன், தமிழ்ச்செல்வம், செல்வகணபதி, கோகுல், ராஜ்குமார், மாயவேல் உள்ளிட்டோர் பா.ம.க.வில் இணைந்துள்ளனர்.
அவர்கள் மரியாதை நிமித்தமாக முன்னாள் மாவட்ட செயலாளர் வடக்குத்து கோ.ஜெகனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்களுக்கு பா.ம.க. சார்பில் சால்வை அணிவித்தும், 10.5 சதவிகித உள்ஒதுக்கீடு விளக்க கையேட்டினையும், வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் மகன் சதீஷ் வயது (20).
இவர் நள்ளிரவு 1 மணி அளவில் வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டிருந்த வேலையில் வீட்டிலிருந்த எலி பேஸ்டை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை இன்று வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சதீஷ் இறந்தார்.
இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் அருகே ரெட்டிச்சாவடி செல்லஞ்சேரி சேர்ந்தவர் பர்குணம் (வயது 32). இவரது மனைவி பிரக்தி ( 24). இவர்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்கு அட்சயா என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த 5 மாதத்திற்கு முன்பு பிரக்தி தனது கணவர் பர்குணம் மீது கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வரதட்சணை தொடர்பாக புகார் அளித்தார்.
அப்போது போலீசார் விசாரணை நடத்தியதில் கணவர் பர்குணம் மீது எந்தவித தவறும் இல்லை என கூறி புகார் அளித்த பிரக்தியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பிரக்தி வீட்டை விட்டு வெளியில் சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. மேலும் பிரக்தியை எங்கு தெரியும் கிடைக்கவில்லை.
இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசில் கணவர் பர்குணம், எனது மாமியாரின் தூண்டுதலின் பேரில் எனது மனைவி பிரக்தி காணவில்லை என கொடுத்த புகாரின் பேரில் பிரக்தியை போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, விளையாட்டு வீரர்கள் விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், இனிவருங்காலங்களில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியாக ஆடுகளம் பதிவேற்றம் செய்து பயன்படுத்திட வேண்டும். விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் (தனிநபர்) (குழு) மற்றும் பயிற்றுநர்கள் பதிவு செய்து பயன்பெறலாம்.
இந்த செயலியினை பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரர்களின் இமெயில் முகவரி, மொபைல் எண், பிறந்த தேதி மற்றும் ஆதார் எண் ஆகிய விபரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும். இனிவருங்காலங்களில் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்பவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.
எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் விளையாட்டு சங்கங்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுள்ள பொதுமக்கள் அனைவரும் உடனடியாக ஆடுகள செயலியை பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் சான்றோர் பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46). கூலி வேலை செய்து வந்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு புஷ்பராஜ்க்கு விபத்து ஏற்பட்டதில் தலையில் அடிபட்டு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி தனது வீட்டில் திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறை கேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித்தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் மாவட்ட மாவட்ட கலெக்டரிடம் நேரில் அளித்தனர்.
மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மொத்தம் 420 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த இம்மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டும் மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும், மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வுகாண வேண்டும்.
பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதி முறை களுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவினை முன்னிட்டு சிறப்பு பள்ளிகளுக்கிடையே நடத்தப்பட்ட விளையாட்டு, குறள் ஒப்பித்தல், நாடகம், நடனம், பேச்சு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று முதல் இடத்தில் வெற்றி பெற்ற 5 மாணவ-மாணவி்களுக்கு கலெக்டர் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கிட சிறப்பாக பணிபுரிந்த சிறப்பாசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு கலெக்டர் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் ரஞ்சித் சிங் கற்பகம், உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் 5வது தெருவை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது40). இவரும் பண்ருட்டி வேதபுரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் குமார்(44 என்பவரும் நண்பர்கள். லோகேஷ்குமார், நண்பர் ஜெயபிரகாஷிடம் ரூ.35000 பணம் வாங்கி உள்ளார்.
சம்பவத்தன்று அங்கு செட்டிபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டு இருந்த லோகேஷ்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டபோது இனிமேல் உனக்கு பணம் தர முடியாது என்று ஆபாசமாக திட்டினார். இதனால் இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அப்போது லோகேஷ் குமாரும் அவருடைய மனைவி சவிதா ஆகியோர் கத்தி மற்றும் கல்லால் தாக்கினர்.
இந்த மோதலில் ஜெயப்பிரகாஷ், லோகேஷ் குமார் ஆகியோர் காயம் அடைந்தனர். காயமடைந்த இருவரும் பண்ருட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே சின்ன பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி கடன் சங்கம் சார்பில் திருத்துறையூரில் மகளிர் அங்காடி உள்ளது.
இந்த மகளிர் அங்காடி மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.இந்த மகளிர் அங்காடி மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் செயலாளராக ஜெய கோபி என்பவர் இருந்து வருகிறார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வரும் இந்த மகளிர் அங்காடி அரசு ரேசன் கடையாக மாற்றி தர வேண்டும் என்று ஒரு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார், பண்ருட்டி வட்ட வழங்கல் அலுவலர் மோகன், மற்றும் கூட்டுறவு அலுவலர்கள் இன்று திருத்துறையூர் கிராமத்திற்கு நேரில் வருகை தந்து மகளிர் அங்காடியில் பொதுமக்களிடம் விசாரித்தனர்
இதனைத் தொடர்ந்து திருத்துறையூர் 2 தரப்பை சேர்ந்த கிராம மக்கள் அங்கு திரண்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.
தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் . இவரது மனைவி பிரியா (வயது 29). இவர் இன்று காலை வக்கீல் நாகமுத்துவுடன் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நானும் எனது கணவரும் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் நானும் எனது கணவரும் வசித்து வந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 16ந் தேதி அவரது தம்பி மனைவி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளதாக கூறிவிட்டு மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
பின்னர் 23ந் தேதி திருவாரூருக்கு செல்கிறேன் என தனது உறவினர்களிடம் தெரிவித்து விட்டு சென்றவர் இதுநாள்வரை வீட்டிற்கு வரவில்லை. பின்னர் நானும் எனது உறவினர்களும் எனது கணவரை தேடினேன். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால் எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.






