என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  கடலூர் முதுநகரில் வீட்டில் மயங்கி விழுந்த கூலி தொழிலாளி மரணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கடலூர் முதுநகரில் வீட்டில் மயங்கி விழுந்த கூலி தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  கடலூர்:

  கடலூர் முதுநகர் சான்றோர் பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 46). கூலி வேலை செய்து வந்தார்.கடந்த 2018 ஆம் ஆண்டு புஷ்பராஜ்க்கு விபத்து ஏற்பட்டதில் தலையில் அடிபட்டு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு வந்தது.

  கடந்த ஏப்ரல் மாதம் 25ந் தேதி தனது வீட்டில் திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். பின்னர் சிகிச்சைக்காக இவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

  ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை புஷ்பராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×