என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாயுடன் போராட்டம் செய்த முன்னாள் படை வீரர்
    X
    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாயுடன் போராட்டம் செய்த முன்னாள் படை வீரர்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தாயுடன் போராட்டம் செய்த முன்னாள் படை வீரர்

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு மு.க. ஸ்டாலின், கருணாநிதி படங்களை வைத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் படை வீரர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று காலை தனது தாயுடன் ஒரு நபர் கையில் முதல்அமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி படங்களை வைத்துக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அட்டையை வைத்துக் கொண்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், சிதம்பரம் கீழ் அனுவம்பட்டு ஊரை சேர்ந்தவர் சர்மா. முன்னாள் படைவீரர். நான்கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 2012 முதல் இரவு காவலர் தொகுப்பூதிய பணியை கடந்த 10 வருடமாக பணிபுரிந்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனக்கு பணி நிரந்தரம் தொடர்பாக மாவட்ட முன்னாள் படை வீரர் அலுவலகம், மனுநீதி முகாமிலும் பல முறை மனு வழங்கி உள்ளேன். ஆனால் இதுநாள் வரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகையால் எனக்கு இரவுக் காவலர் பணி நிரந்தரம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியதை தொடர்ந்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    Next Story
    ×