என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிதைந்துபோன சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
    X
    சிதைந்துபோன சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    கடலூர் முதுநகர் பகுதியில் சிதைந்துபோன சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

    கடலூர் முதுநகர் முழுவதும் சாலை மோசமாக உள்ளதால் ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

    கடலூர்:

    ஆங்கிலேயர்கள் தென் தமிழகத்தில் கால் பதித்தபோது கடலூர் நகரை தலைநகராக கொண்டனர். அவர்கள் கடலூர் முதுநகர் துறைமுகப்பகுதி கடல் வழியாக போக்குவரத்து மேற்கொண்டனர். இந்த பகுதியைச் சுற்றி சுமார் 50 கிராமங்கள் உள்ளது.

    மேலும் கடலூர் முதுநகர் துறைமுகப்பகுதி மிகப்பெரிய மீன்பிடித்துறைமுக பகுதியாக இருப்பதால் இங்குள்ள மக்கள் பெரும்பாலும் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்பிடித் தொழில் செய்பவர்கள் அதிக அளவில் இருப்பதால் ஐஸ் கம்பெனி அதிகமாக துறைமுகப்பகுதியில் இருக்கிறது. இதனால் இந்த கடலூர் துறைமுக பகுதியில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

    ஆனால் இங்கு உள்ள சாலைகள் மிகவும் மோசமாக சிதைந்து இருப்பதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர். சாலைகளில் குண்டு குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைகின்றனர்.

    இதுபோன்ற குண்டும் குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி விபத்துக்குள்ளாகிறது. கடலூர் முதுநகர் பகுதியில் இருந்து தென் பகுதியான சிதம்பரம், விருத்தாசலம் நாகப்பட்டினம் போன்ற பல்வேறு இடங்களுக்கு செல்ல இது முக்கிய வழியாகும். பல்வேறு பகுதிகளுக்கு செல்ல கடலூர்முதுநகர் பகுதி வழியாகத்தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    ஆனால் கடலூர் முதுநகர் முழுவதும் சாலை மோசமாக உள்ளதால் ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இந்த சேதமான சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கழிவு நீராக மாறி அதில் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது.

    அவ்வப்போது சேதமான சாலையில் ரோடு முழுவதும் புழுதி, தூசி பறப்பதால் வாகனஓட்டிகள் அவதிபடுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு மோசமாக இருக்கும் சாலையை சரி செய்து தரும்படி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×