என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் அருகே பரபரப்பு அனுமதி இன்றி செம்மண் எடுப்பதாக கூறி வாகனங்கள் சிறைபிடிப்பு.
    • கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்தப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொக்லைன் மற்றும் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் அங்குள்ள வர்களிடம் இங்கு எடுக்கப்படும் கூடிய செம்மண்ணுக்கு உரிய முறையில் அரசிடம் இருந்து அனுமதி பெற்று உள்ளீர்களா? என்பதனை கேட்டனர். அப்போது டிரைவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்றனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறைப்பிடித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் உரிய அனுமதியின்றி தினந்தோறும் செம்மண் கடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என கேட்ட போது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் உரிய அனுமதி பெற்று தான் செம்மண் குவாரி இயங்குகிறதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய அனுமதி யின்றி குவாரி நடைபெற வில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    • கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சாலை ஓரங்களில் வாகனங்களை நிறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் நகரத்தின் மையப் பகுதியாக திருப்பாதிரி ப்புலியூர் லாரன்ஸ் சாலை இருந்து வருகின்றது. இங்கு பஸ் நிலையம், பூ மார்க்கெட், வணிக வளாகம், துணிக்கடை, நகைக்கடை, பிரசித்தி பெற்ற கோவில்கள், ரயில் நிலையம் போன்றவற்றை இயங்கி வருகிறது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான வாகனங்களில் பொது மக்கள் இச்சாலையில் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் லாரன்ஸ் சாலையில் அதிக அளவில் கார், ஆட்டோ, ஷேர் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக அதிகளவில் சென்று வருவதாலும், பொருட்கள் வாங்குவதற்கும், கோவில்களுக்கு செல்லும் பொதுமக்கள் சாலை ஓரத்தில் வாகனங்களை வரிசையில் நிறுத்தாமல் ஆங்காங்கே நிறுத்திக் செல்வதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வந்தன. இந்த நிலையில் கடலூர் போக்குவரத்து போலீசார் சார்பில் லாரன்ஸ் அப்பகுதியில் தற்போது ஒலிபெருக்கி பொருத்தப்பட்டுள்ளது‌. இதன்மூலம் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் தலைமையில் போலீசார் லாரன்ஸ் சாலையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து வாகன ஓட்டிகளும் போலீசார் அறிவிக்கப்பட்டுள்ள இடத்தில் தங்களுடைய வாகனத்தை நிறுத்தி விட்டு செல்ல வேண்டும். மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செயல்படும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் பொது மக்கள் பாதிக்காத வகையில் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானேஸ்வரர் கோவில்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானே ஸ்வரர் கோவில். இது 5ஆயிரம் ஆண்டு களுக்குமுற்பட்டது. The procession to the Travancore Veerattaneswarar temple took place this morningஇங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம்சுவாதிதினத்தன்று10நாட்கள்பிரம்மோற்சவம்நடைபெறுவதுவழக்கம்.இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும்காலை மாலைஇருவேளையும் அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, யாக வேள்வி ஆகியவை நடைபெற்று சாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றுவீதிஉலா காட்சிநடைபெற்றுவந்தது. இன்று(11-ந் ) காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவானதேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிக்குஅதிகாலை 4:30 மணிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனை,விசேஷ பூஜைகள், நடைபெற்றது. திரிபுரசம்ஹாரமூர்த்தி சிறப்புமலர்அலங்காரத்தில்திருத்தேரில்எழுந்தருளினார். பின்னர் தேர் பூஜைகள் நடந்து 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரியதேரில் சம்கார மூர்த்திஎழுந்தருளினார். சின்ன தேரில் விநாயகர், முருகர்,சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார் தேர் புறப்பாடுநடைபெற்றதும்கூடியிருந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமசிவாயம், திருச்சிற்றம்பலம் என விண்ணதிரமுழங்கினர்நாதஸ்வரம்,கைலாயவாத்தியம், மேளதாளங்கள்சங்கொலி முழங்கமாடவீதியில் தேர் பவனி வந்தது.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன உற்சவ விழா 27-ந் தேதி தொடங்குகிறது.

    கடலூர்:

    பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவ விழா ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. 28-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகன வீதிஉலா, 29-ந் தேதி தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 30-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதிஉலா, ஜூலை 1-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 2-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதிஉலா, 3-ந் தேதி தங்க கைலாச வாகன வீதிஉலா, 4-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதிஉலாவும் நடைபெறுகிறது. 5-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஜூலை 6-ந் தேதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும்,ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 7-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    விருத்தாசலம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே முகுந்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. விவசாயி. இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம்மீண்டும் வலி ஏற்பட் டது. மனமுடைந்த அவர்இருந்தவீட்டில்மருந்தைபூச்சிகுடித்தார். அவரை மீட்டு, விருத் தாசலம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். மேல்சிகிசைக்கு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    திட்டக்குடி அருகே போலீசாரை கண்டதும் மணல் ெகாள்ளையர்கள் தப்பி ஓடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே இடைச்செருவாய் கிராமத்தில் உள்ள வெள்ளாற்றில் அரசு அனுமதியின்றி தினந்தோறும் நள்ளிரவில் மணல் கொள்ளை நடைபெற்று வருவதாக திட்டக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வெள்ளாற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த மணல் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். மணல் கொள்ளையர்களிடமிருந்து 2 டிப்பர் லாரிகள், பொக்ந்திலைன் எந்தி ரம், 1 டிராக்டர் டிப்பர் மற்றும் இனோவா கார் உட்பட 2 கார்கள் பறிமுதல் செய்து திட்டக்குடி போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். மேலும் தப்பி ஓடிய மணல் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மீன்பிடி தடைக்காலம் 3 நாட்களில் முடிவடைந்ததால் கடலுக்கு செல்ல கடலூர் மாவட்ட மீனவர்கள் தயாரானார்கள்.

    கடலூர்:

    தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடற்பகுதிகளில் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்க காலமாக, மத்திய அமைச்சகம் மீன்வளத்துறை கண்டறிந்துள்ளது.

    இந்த நாட்களில் மீன் வளத்தை பெருக்கும் நோக்கில் இந்த கால கட்டத்தில் ஆண்டுதோறும் 61 விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் மீன்பிடித் தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ல் தொடங்கியது.

    தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்று ம்இழுவை ப்படகுகள்கடற்கரை பகுதிகளில் நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், மீன்பிடி தடைக்காலம் வருகிற 14-ந் தேதியுடன் முடிகிறது. எனவே கடலூர் மாவட்ட த்தை சேர்ந்த மீனவர்கள் தங்களது படகு களை பழுது நீக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்வது, படகுமுழுவதும் வர்ணம் பூசுவது, புதிய வலைகளை நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல்போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் படகுகளின் இயக்கம் சீராக உள்ளதா? என துறைமுக பகுதிகளில்வெள்ளோட்டம் பார்த்து வருகின்றனர்.

    மீன்பிடி துறைமுகத்தின் கரை பகுதிக்கு கொண்டு வந்து வெல்டிங் செய்தல், படகு முழுவதும் வர்ணம் பூசுதல், புதிய வலைகள் நெய்தல், பழைய வலைகளை சீரமைத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சீரமைத்த படகுகள் நன்றாக இயங்குகிறதா? என்று துறைமுகம் பகுதியில் வெள்ளோட்டமும் பார்த்து வருகிறார்கள்.

    • ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர்.

    கடலூர் :

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதையடுத்து நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர். பார்க்காமல் காதல், கடிதம் மூலம் காதல், இணைய வழி காதல் என்று இருக்கும் நிலையில் கடலூர் என்ஜினீயர், கடல் கடந்து லண்டன் பெண்ணை காதலித்து இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பூ வாங்கி சென்றபோது தங்க நகையை தவறவிட்டனர்
    • துப்புரவு பணியாளர் ஒருவர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது

    பண்ருட்டி, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கரும்பூரை சேர்ந்தவர் சத்தியவாணி (வயது45)இவர். இவரது குடும்பத்துடன் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காரில் பண்ருட்டி வந்தார். பண்ருட்டி 4 முனை சந்திப்பு காந்தி பூங்கா அருகில் காரை நிறுத்திவிட்டு பூ வாங்கிக்கொண்டு சென்றார். அப்போது அவரது தங்கநகையை தவறவிட்டார்.

    சிறிது தூரம் சென்றபின் நகை தவறி விட்டது தெரியவந்தது.  இதுபற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர், போலீசார் சுரேஷ் , அன்பரசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

    கண்காணிப்பு கேமராவில் காரில் வந்தவர் தவறவிட்ட தங்க நகையை  முதியவர் ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி தெரிய வந்தது. உடனடியாக துரிதமாக செயல்பட்ட போலீசார் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய நபரை தேட ஆரம்பித்தனர் . பண்ருட்டி நகராட்சியின் நெல்லிக்குப்பம் நகராட்சி ஆகிய இடங்களில் விசாரித்தனர். 

    விசாரணையில் நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்ந்த துப்புரவு பணியாளர் நகையை எடுத்துச் சென்றது தெரியவந்தது. உடனடியாக அவரை விசாரித்தனர். விசாரணையில் கீழே கிடந்ததால் எடுத்துச் சென்றதாக கூறிய அவர், அந்த நகையை போலீசாரிடம் கொடுத்தார். போலீசாரின் துரித நடவடிக்கையால் நகை மீட்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீசாரின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். 

    • கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே கீழ் அருங்குணம் கிராமம் கெடிலம் ஆற்றில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி, 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இதனை தொடர்ந்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தார்.

    இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், "நீர்நிலைகளில் குளிக்கச் செல்லும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். வந்தபின் தவிப்பதை விட வருமுன் பாதுகாக்க வேண்டும்.

    நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துக்களை சிறுவர், சிறுமியர், இளைஞர்களுக்கு எடுத்துக்கூற வேண்டும், காக்க ஆழமான ஆறு, குளம் அருகே எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்" என, மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினார்.

    அதன்படி கடலூர் மாவட்டத்தில் ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணை உள்ளிட்ட நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்கும்படியும், சிறுவர்களையும் உரிய முறையில் பெற்றோர் கண்காணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    கடலூர் மாவட்டத்தில் ஆபத்தான நீர்நிலை பகுதிகளில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை பலகை வைக்க, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில், மாவட்டம் முழுவதும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டு வருகிறது. 7 பேர் பலியான சம்பவம் நடந்த கெடிலம் பண்ருட்டி முதல் கடலூர் வரையில் தண்ணீர் தேங்கியுள்ள 4 இடங்களிலும், பெண்ணையாற்றில் கண்டரக்கோட்டை பகுதியில் இருந்து கடலுார் மஞ்சக்குப்பம் வரையில் நெல்லிக்குப்பம், சாவடி, செம்மண்டலம் உள்ளிட்ட 5 இடங்களிலும் முதல் கட்டமாக எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது.

    எச்சரிக்கை பலகைவைப்பதுடன், போலீசார் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தினால், இனி மாவட்டத்தில் நீர்நிலை உயிரிழப்புகளை முற்றிலும் தடுக்க முடியும்

    போலீஸ் நிலையம் அருகே கடையை சூறையாடி கொள்ளையடித்தனர். திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் தொழுதூர் ராமநத்தம் சாலையோரம் அஜிஷா மொபைல் சேல்ஸ்சர்வீஸ் செல்போன் கடை உள்ளது.

    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் தொழுதூர் ராமநத்தம் சாலையோரம் அஜிஷா மொபைல் சேல்ஸ்சர்வீஸ் செல்போன் கடை நடத்தி வருபவர் ஜான்பாஷா. இந்த கடை போலீஸ் நிலையம் அருகே உள்ளது.

    இவரதுகடை முன்பு நேற்று தொழுதூரை சேர்ந்த ரமேஷ் (50), தொழு தூரைச்சேர்ந்த பாண்டியன் (39), அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (30) ஆகியோர் 2 கார்களையும் செல் செல்போன் கடை போன் கடை முன்பு நிறுத்தி உள்ளனர்

    நீண்ட நேரமாக அதே இடத்தில் கார் நிற்பதால் கடைக்கு யாரும் வர முடி யாத சூழ்நிலை உள்ளதை கண்டு இதை பார்த்த ஜான்பாஷா, நிசாத் ஆகி யோர் கார்களை வேறு இடத்தில் நிறுத்துமாறு ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளனர்.

    ஆத்திரமடைந்த 3 பேரும் செல்போன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் நிசாத்தின் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டி கடையில் இருந்த 8 செல்போன்கள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    எனவே கடையை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து நிஷாத் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்போன் கடையை அடித்து நொறுக்கி சூறை யாடி 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். 

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந்தேதி நடக்கிறது.
    • ஆனி திருமஞ்சன தரிசனம் 6-ந்தேதி நடைபெறுகிறது.

    சிதம்பரத்தில் உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பஞ்சபூத தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலில் ஆண்டுதோறும் 6 மகாஅபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் சிறப்பு வாய்ந்தது மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் வரும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த 2 திருவிழாக்களையும் காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் ஒன்று திரண்டு நடராஜரை தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன விழா வருகிற 27-ந்தேதி(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது.

    அடுத்த மாதம்(ஜூலை) 1-ந் தேதி தெருவடைச்சான் உற்சவமும், விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதியும், ஆனி திருமஞ்சன தரிசனம் 6-ந் தேதியும் நடைபெறுகிறது. விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதி வளாகத்தில், பந்தல் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    ×