என் மலர்
நீங்கள் தேடியது "Capturing vehicles"
- கடலூர் அருகே பரபரப்பு அனுமதி இன்றி செம்மண் எடுப்பதாக கூறி வாகனங்கள் சிறைபிடிப்பு.
- கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்தப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொக்லைன் மற்றும் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் அங்குள்ள வர்களிடம் இங்கு எடுக்கப்படும் கூடிய செம்மண்ணுக்கு உரிய முறையில் அரசிடம் இருந்து அனுமதி பெற்று உள்ளீர்களா? என்பதனை கேட்டனர். அப்போது டிரைவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்றனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறைப்பிடித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் உரிய அனுமதியின்றி தினந்தோறும் செம்மண் கடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என கேட்ட போது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் உரிய அனுமதி பெற்று தான் செம்மண் குவாரி இயங்குகிறதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய அனுமதி யின்றி குவாரி நடைபெற வில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






