என் மலர்
நீங்கள் தேடியது "வாகனங்கள் சிறைபிடிப்பு"
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்க ளுக்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
- கோழிப் பண்ணைக்கு தண்ணீர் எடுத்து சென்ற லாரி மற்றும் டிராக்டர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் எர்ரபையனஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கொங்காளம் காடு பகுதியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அங்கிருந்து தினந்தோறும் லாரிகள் மற்றும் டிராக்டர் கள் மூலம் தண்ணீரை எச்சனஹள்ளி ஊராட்சி யில் உள்ள ஒரு தனியார் கோழிப்பண்ணைக்கு தினந்தோறும் அதிக அளவில் எடுத்து செல்வதாக கூறப்படுகிறது.
இந்த ஆழ்துளை கிணறுகள் உள்ள பகுதியிலேயே ஊராட்சிக்கு சொந்த மான இரண்டு ஆழ்துளை கிணறுகள் உள்ளது. அதன் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இருப்பி னும் தனியார் கோழிப் பண்ணை நிறுவனத்திற்கு தினந்தோறும் லாரிகளில் பல்லாயிரக் கணக்கான லிட்டர்கள் அளவில் தண்ணீர் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்க்கு சென்றதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ஊராட்சி மக்களுக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை கொங்காளங்காடு பகுதி சாலையில் கோழிப் பண்ணைக்கு தண்ணீர் எடுத்து சென்ற லாரி மற்றும் டிராக்டர்களை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்பொழுது குடிநீர் தேவைக்கே தண்ணீர் இல்லாதபோது கோழி பண்ணைக்காக தினந்தோறும் அதிக அளவில் ஆழ்துளை கிணறுகளில் உறிஞ்சப்பட்டு தண்ணீர் கொண்டு செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்தனர். பின்னர் சிறை பிடிக்கப்பட்ட வாகனத்தை பொதுமக்கள் விடுவித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் அருகே பரபரப்பு அனுமதி இன்றி செம்மண் எடுப்பதாக கூறி வாகனங்கள் சிறைபிடிப்பு.
- கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்தப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே சான்றோர் பாளையம் பகுதியில் தனியார் இடத்தில் உரிய அனுமதியின்றி செம்மண் குவாரி நடத்தப்பட்டு, அதன் மூலம் செம்மண் கடத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொக்லைன் மற்றும் லாரியை சிறைபிடித்தனர். பின்னர் அங்குள்ள வர்களிடம் இங்கு எடுக்கப்படும் கூடிய செம்மண்ணுக்கு உரிய முறையில் அரசிடம் இருந்து அனுமதி பெற்று உள்ளீர்களா? என்பதனை கேட்டனர். அப்போது டிரைவர்கள் உடனடியாக அங்கிருந்து சென்றனர். தகவல் அறிந்த கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறைப்பிடித்த பொதுமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் உரிய அனுமதியின்றி தினந்தோறும் செம்மண் கடத்தப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அவர்களிடம் உரிய ஆவணம் உள்ளதா? என கேட்ட போது எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. மேலும் உரிய அனுமதி பெற்று தான் செம்மண் குவாரி இயங்குகிறதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரிய அனுமதி யின்றி குவாரி நடைபெற வில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர். இதனை தொடர்ந்து கடலூர் முதுநகர் போலீசார் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.






