என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீஸ் நிலையம் அருகே  கடையை சூறையாடி கொள்ளையடித்த  கும்பல்
    X

     மர்ம கும்பல் சூறையாடிய செல்போன் கடையை படத்தில் காணலாம். 

    போலீஸ் நிலையம் அருகே கடையை சூறையாடி கொள்ளையடித்த கும்பல்

    போலீஸ் நிலையம் அருகே கடையை சூறையாடி கொள்ளையடித்தனர். திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் தொழுதூர் ராமநத்தம் சாலையோரம் அஜிஷா மொபைல் சேல்ஸ்சர்வீஸ் செல்போன் கடை உள்ளது.

    திட்டக்குடி:

    திட்டக்குடி அருகே ராமநத்தத்தில் தொழுதூர் ராமநத்தம் சாலையோரம் அஜிஷா மொபைல் சேல்ஸ்சர்வீஸ் செல்போன் கடை நடத்தி வருபவர் ஜான்பாஷா. இந்த கடை போலீஸ் நிலையம் அருகே உள்ளது.

    இவரதுகடை முன்பு நேற்று தொழுதூரை சேர்ந்த ரமேஷ் (50), தொழு தூரைச்சேர்ந்த பாண்டியன் (39), அதே ஊரை சேர்ந்த பிரபாகரன் (30) ஆகியோர் 2 கார்களையும் செல் செல்போன் கடை போன் கடை முன்பு நிறுத்தி உள்ளனர்

    நீண்ட நேரமாக அதே இடத்தில் கார் நிற்பதால் கடைக்கு யாரும் வர முடி யாத சூழ்நிலை உள்ளதை கண்டு இதை பார்த்த ஜான்பாஷா, நிசாத் ஆகி யோர் கார்களை வேறு இடத்தில் நிறுத்துமாறு ரமேஷ் என்பவரிடம் கூறியுள்ளனர்.

    ஆத்திரமடைந்த 3 பேரும் செல்போன் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அடித்து நொறுக்கி சூறையாடினர். மேலும் நிசாத்தின் கணவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டி கடையில் இருந்த 8 செல்போன்கள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

    எனவே கடையை அடித்து நொறுக்கி கொலை மிரட்டல் விடுத்தது குறித்து நிஷாத் ராமநத்தம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் வழக்குப் பதிவு செய்து செல்போன் கடையை அடித்து நொறுக்கி சூறை யாடி 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    Next Story
    ×