search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple Therottam"

    • அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
    • திருக்கல்யாணம் நடைபெற்றது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து நேற்று காலை காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து வெடி வெடித்தும் , மேள தாளங்கள் முழங்க அருள்மிகு மாரியம்மன் சாமியை திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு திருஷ்டி பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.

    கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது.விழாவின் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த எசனையில் பிரசித்தி பெற்ற செங்கமல வல்லித்தாயார் சமேத வேணுகோபாலசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் இரவில் அன்னம், சிம்மம், அனுமந்தர், சந்திரன், கருடன், யானை, நாகபாஷம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும், சக்கரத்தாழ்வார் திருவீதி உலாவும் நடந்தது.

    இதையடுத்து, கடந்த 16-ந் தேதி திருக்கல்யாண உற்சவமும், இரவில் பூப்பல்லக்கில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. நேற்று முன்தினம் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது.

    தேரோட்டம் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 21 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் வேணுகோபாலசுவாமி- பாமா, ருக்மணி காலை 11 மணியளவில் எழுந்தருளினர். பின்னர் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

    இந்த தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாலை 5 மணியளவில் கோவில் நிலையை வந்தடைந்தது. இந்த விழாவில் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள் ஹரிஹரசுப்ரமணியன் (மலைக்கோட்டை), லட்சுமணன் (திருச்சி), கோவில்ஆய்வாளர் வினோத்குமார், கோவில் செயல் அலுவலர் தேவி, கோவில் தக்காருமான ஹேமாவதி உள்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேணுகோபாலசுவாமி சூரியவாகனத்தில் வீதியுலா வருகிறார்கள். நாளை (திங்கட்கிழமை) புன்னை மர வாகனத்திலும், 21-ந்தேதி மட்டையடி மற்றும் ஊஞ்சல் உற்சவமும், 22-ந்தேதி விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தேரோட்ட ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் தேரோட்டம் இன்று காலை நடந்தது.
    • கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானேஸ்வரர் கோவில்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது பெரியநாயகி உடனுறைவீரட்டானே ஸ்வரர் கோவில். இது 5ஆயிரம் ஆண்டு களுக்குமுற்பட்டது. The procession to the Travancore Veerattaneswarar temple took place this morningஇங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதம்சுவாதிதினத்தன்று10நாட்கள்பிரம்மோற்சவம்நடைபெறுவதுவழக்கம்.இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவவிழா கடந்த 3-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும்காலை மாலைஇருவேளையும் அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, யாக வேள்வி ஆகியவை நடைபெற்று சாமி, அம்பாள், பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றுவீதிஉலா காட்சிநடைபெற்றுவந்தது. இன்று(11-ந் ) காலை பிரம்மோற்சவத்தின் முக்கிய திருவிழாவானதேரோட்டம் நடைபெற்றது. இதனையொட்டி திரிபுர சம்ஹாரமூர்த்தி சுவாமிக்குஅதிகாலை 4:30 மணிக்கு சிறப்புஅபிஷேகம், ஆராதனை,விசேஷ பூஜைகள், நடைபெற்றது. திரிபுரசம்ஹாரமூர்த்தி சிறப்புமலர்அலங்காரத்தில்திருத்தேரில்எழுந்தருளினார். பின்னர் தேர் பூஜைகள் நடந்து 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெரியதேரில் சம்கார மூர்த்திஎழுந்தருளினார். சின்ன தேரில் விநாயகர், முருகர்,சண்டிகேஸ்வரர் எழுந்தருளினார் தேர் புறப்பாடுநடைபெற்றதும்கூடியிருந்தஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹரஹர மகாதேவா, ஓம் நமசிவாயம், திருச்சிற்றம்பலம் என விண்ணதிரமுழங்கினர்நாதஸ்வரம்,கைலாயவாத்தியம், மேளதாளங்கள்சங்கொலி முழங்கமாடவீதியில் தேர் பவனி வந்தது.

    • அம்மன் சிரசு பொருத்தம்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா கடந்த 31-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. 2-ம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன.

    மூன்றாம் திரு நாளில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்தது. 4-வது நாள் துர்க்கை அலங்காரத்தில் அம்மன் உற்சவம் நடைபெற்றது.

    5-வது நாள் சரஸ்வதி அலங்கார உற்சவம் 6-வது நாள் ஈஸ்வர பூஜை அலங்கார உற்சவம், 7-வது நாள் மகிடாசூர சம்மார அலங்கார உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று இரவு புஷ்ப பல்லக்கில் கெங்கை அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இன்று அதிகாலை கெங்கை அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் விஸ்வரூப காட்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கெங்கை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி சத்துவாச்சாரி பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது. சிறுவர்க ளுக்கான பொழுதுபோக்கு ராட்டினங்கள் பல விதமாக கடைகள் கோவில் வளாகத்தில் களை கட்டுகிறது. ஏராளமான பொதுமக்கள் இன்று காலை கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

    கோவில் வளாகம் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலை, ஆர்.டி.ஓ. அலுவலக சாலை, பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் நீர்மோர் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் இருந்து வந்த வாகனங்கள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் வழியாக திருப்பி விடப்பட்டன.

    இதேபோல வேலூர் கலெக்டர் அலுவலகம் மேம்பாலத்தின் அருகே சர்வீஸ் சாலையில் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.

    ×