என் மலர்tooltip icon

    கடலூர்

    • கடலூர் வண்டிப்பாளையம் சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாக வீதி உலா நடந்தது.
    • கடலூர் வண்டிப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவில் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் வண்டிப்பாளை யத்தில் பிரசித்தி பெற்ற வள்ளி தேவசேனா சிவசுப்ரமணிய கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வசந்த விழா உற்சவம் பத்து நாட்கள் நடைபெறுவது வழக்கம். இதனை யொட்டிகடந்த 3- ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வந்தது. இன்று வசந்த உற்சவ சிகர நிகழ்ச்சியான வைகாசி விசாகத்தை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்கா–ரத்தில் வள்ளி தேவசேனா சிவசுப்பிரமணிய சாமி வீதி உலா முக்கிய மாட வீதியில் சென்று வந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தி–யுடன் சாமி கும்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவ–லர்கள் மற்றும் செங்குந்தர் மரபினர்கள் செய்து வந்தனர்.

    • புவனகிரி அருகே பயங்கரம்: வீடு புகுந்து பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.
    • கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழ மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். அவரது மனைவி சீத்தா (வயது 45).

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள கீழ மணக்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல். அவரது மனைவி சீத்தா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு முத்துவேல் இறந்து போனார். எனவே சீத்தா தனியாக வசித்து வந்தார். தனது மகன், மகளுக்கு திருமணம் செய்துள்ளார். அவர்கள் தனி தனி வீட்டில் வசித்து வருகின்றனர்.

    சீத்தா சிதம்பரம் தனியார் ஆஸ்பத்திரியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு வேலை முடிந்து சீத்தா வீட்டில் தூங்கினார். இன்று காலை நீண்டநேரம் கதவு திறக் கப்படவில்லை. சந்தேக மடைந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது சீத்தா ரத்த காயங்களுடன் கிடந்தார். இதுகுறித்து புவனகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க–ப்பட்டது. தகவல் அறிந்த சிதம்பரம் போலீஸ் டி.எஸ்.பி. ரமேஷ் ராஜா, புவனகிரி இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் சந்தோஷ் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது சீத்தா காயங்களுடன் பினமாக கிடந்தார். அவரது ஆடைகள் அலங்கோலமாக இருந்தது. எனவே சீத்தாவை மர்ம நபர்கள் கற்பழித்து கொலை செய்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோத னைக்காக முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். சீத்தாவை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? எங்கு பதுங்கி உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம் பக்திகோஷத்துடள் இன்று காலை நடந்தது.
    • கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீ–ஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்பு லியூரில் பிரசித்தி பாடல் பெற்ற ஸ்தலமாக பாடலீ–ஸ்வரர் கோவில் இருந்து வருகின்றது. இக்கோவிலில் வருடந்தோறும் வைகாசி பிரம்மோற்சவ விழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். கடந்த 5- ந்தேதி கொடி யேற்றத்துடன் வைகாசி பிரமோற்சவ விழா விமர்சி யாக தொடங்கியது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் சாமி காலை மற்றும் மாலையில் வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது. பின்னர் அதிகாரநந்தி 5-ம் நாள் விழாவில் கோபுர தரிசனம், மற்றும் மகாமேரு தெருவடைச்சான் விழா, 7-ம் நாள் திருவிழாவின் போது தாயாருடன் பாடலீஸ்வரர் கைலாச வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் கோவில் முன்பு எழுந்தருளி கோபுர தரிசனம், மாலை திருக்கல்யாண உற்சவம் மற்றும் வெள்ளி ரிஷப வீதி உலாவும் நடைபெற்றது உள்ளது. நேற்று காலை குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்தி–கள் வீதி உலாவும், பிச்சாண்ட–வர் வீதி உலாவும், தங்க கைலாய வாகனத்தில் சாமி வீதி புறப்பாடும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13- ந்தேதி) திருவிழாவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கா ர–த்தில் தாயாருடன் பாடலீஸ்வரர் எழுந்தருளி கோவில் வளாகத்திலிருந்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திருத்தேரில் கம்பீரமாக பக்தர்களுக்கு காட்சி அளித்து எழுந்தருளி னார்.இதனை தொடர்ந்து பூக்களால் அலங்கரிக்க–ப்பட்ட தேரை மாவட்ட கலெக்டர் பாலசுப்ர–மணியம் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கொடியசைத்து வைத்து வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, ஜி.ஆர்.கே.குழும நிர்வாக இயக்குனர் ஜி.ஆர்.துரைராஜ்,சுபஸ்ரீ வள்ளி விலாஸ் உரிமையாளர்கள் வி.பி.எஸ். கணேசன், வி.பி.எஸ். ரவிசங்கர், க.தீபக், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சி.கே. சுப்ரமணியன், வி.ஜி.கே. மருத்துவமனை டாக்டர் வி.கே கணபதி, அ.ம.மு.க மாவட்ட செயலாளர் ஆடிட்டர் சுந்தரமூர்த்தி, அ.தி.மு.க பகுதி செயலாளர் வெங்கட்ராமன்,மாதர் நலத் தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஸ்ரீமதி ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அங்கு திரண்டி ருந்த ஏராளமான பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா "ஓம் நமசிவாய ஓம் நமசிவாய" என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து முக்கிய மாடவீதியில் வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்ததது. அப்போது வரதராஜபெருமாள் கோவில் சார்பாக பட்டு மற்றும் மாலை சாத்துதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக திரளாக கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு தேரிலிருந்து மண்ட கப்படி பூஜை மற்றும் பஞ்சமூர்த்திகள் கோவில் வந்தடைய உள்ளது. 14 ந் தேதி 10-ம் நாள் திருவிழாவில் காலை ஸ்ரீநட ராஜர் தரிசனம் மற்றும் ஸ்ரீநடராஜர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடை பெற உள்ளது. அப்போது பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி யும், இரவு ராஜ வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 15- ந்தேதி (புதன்கிழமை) காலையில் அறுபத்துமூவர் தீபாராதனையும், தேரடி வீதியில் உள்ள திருஞான சம்பந்தர் தங்க தோடி கானாவில் திருக்குளத்தில் எழுந்தருளி ஞானப்பால் உண்ட ஐதீகம், பஞ்சமூர்த்திகள் ரிஷப வாகனங்களில் வீதி உலா, இரவு திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம் நடை பெற்று திருஞானசம்பந்தர் தங்கப் பல்லக்கிலும் பஞ்ச மூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனங்களிலும் வீதிஉலா நடைபெற உள்ளது.

    வருகிற 16-ந் தேதி கோவில் முன்பு உள்ள திருக்குளத்தில் மின்விளக்கு அலங்காரத்துடன் கூடிய தெப்பல் ஸ்ரீ முருகப்பெரு மான் வலம்வருதல் விழா மற்றும் பரதநாட்டிய விழா வும் நடைபெற உள்ளது. இரவு வெள்ளி ரிஷப வாக னத்தில் சண்டே–ஸ்வரர் வீதி உலா நடைபெற உள்ளது.

    பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி வருகிற 17-ஆம் தேதி வரை நடை பெற உள்ள நிலையில் கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு விழா–க்கோலம் பூண்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தினந்தோறும் ஆயிரக்க–ணக்கான மக்கள் கோவி லுக்கு வந்து செல்வதால் முன்னெச்சரிக்கை நடவ–டிக்கை பணிகள் கோவில் நிர்வாகம் சார்பில் நடை பெற்று வருகின்றன.

    இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் சந்திரன் தலைமையில் செயல் அலுவலர் சிவக்குமார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். பூஜைக்கான ஏற்பாடுகளை நாகராஜ் குருக்கள் தலை மையில் நடைபெற்று வருகின்றது.

    • பண்ருட்டியில் போலீஸ் நிலையங்களில் தீவிரதூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
    • பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் தீவிர தூய்மை பணி இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பண்ருட்டி,புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டி குப்பம் காவல் நிலையங்களில் போலீசார் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் தீவிர தூய்மை பணி இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பண்ருட்டி,புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டி குப்பம் காவல் நிலையங்களில் போலீசார் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றி இருந்த புல் பூண்டுகள் புதர்களை அழித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய எழுத்தர்கள், குற்றப்பிரிவு போலீஸ்    நிலையம்,போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில்உள்ள அவரவரது அலுவலக அறைகளில் பதிவேடுகளை பாதுகாப்பாகவும், பார்ப்பதற்குஅழகான முறையில் அடுக்கி அழகு செய்தனர். நான் மிடுக்காக இருக்கிறேன் என வாசகம் சுவரில் எழுதி வைத்தனர் இதனால் காவல் நிலையங்கள் பளிச்சென காணப்பட்டது. காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.

    • கடலூரில் காதுகுத்து நிகழ்ச்சிக்கு சீர்வரிசை செய்யாததால் இரு தரப்பினர் மோதல்-10 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
    • கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை,

    கடலூர் : கடலூர் புதுப்பாளையம் சேர்ந்தவர் ஜமுனா (வயது 35). இவருடைய உறவினர் சின்னத்தாய். இந்தநிலையில் சின்னத்தாய் வீட்டு காதுகுத்து விசேஷத்திற்கு ஜமுனா நகை செய்யவேண்டும். ஆனால் நகை செய்யவில்லை என சின்னதாய் பல பேரிடம் பேசி வந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த ஜமுனா தனது தங்கை புவனாவுடன் சின்னதாய் வீட்டுக்கு நேரில் சென்று கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, புவனாவை கல்லால் தாக்கி மானபங்கப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகராறில் அம்மு என்பவருக்கும் காயம் ஏற்பட்டது. இதில் 2 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் ஜமுனா மற்றும் அம்மு கொடுத்த புகாரின் பேரில் தனித்தனியாக 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது. 

    • திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
    • தேரடிக்கு வந்த நடராஜருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    பண்ருட்டி :

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று வைகாசி பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது. இதனை தொடர்ந்து இன்று காலை தேரடிக்கு வந்த நடராஜர் தேரடியை சுற்றி பார்த்தார். அப்போது நடராஜருக்கு அங்கு சிறப்பு வழிபாடு நடந்தது இன்று மாலை மஞ்சள் நீராட்டு விழாவும், இன்று இரவு துவஜாஅவரோகனம் எனும் கொடி இறக்கமும் நடைபெறஉள்ளது.

    • திட்டக்குடி அருகே பஞ்சாயத்து அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
    • திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.

    கடலூர்:  திட்டக்குடி அருகே கொடிக்களம் ஊராட்சியில் பழைய கொடிக்களத்தைச் சேர்ந்த அருந்ததியர் சமூக மக்களுக்காக தனி மயானம் உள்ளது. இதில் தனிநபர் ஒருவர் பன்றி வளர்க்கும் கொட்டகை அமைத்துள்ளார்.  இதுகுறித்து பொது மக்கள் புகார் தெரிவித்தும் ஊராட்சி மன்ற தலைவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கடந்த 7-ந் தேதி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்ட–த்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் மாயவேல் 8-ந் தேதியே ஆக்கிரமிப்பை அகற்ற படும் என உறுதியளித்தார். ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பு அகற்றப்பட வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் நேற்று மதியம் கொடிக்களம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஆவினங்குடி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் வரும் 12 ம் தேதி இன்று மாலை 6 மணிக்குள் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எழுத்துப்பூர்வமாக ஊராட்சி மன்ற தலைவர் உறுதி அளித்தார். இதை யேற்று போராட்டக் காரர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்ற னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கலை தடுக்க 98 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது.
    • கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணிக்கப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்திரவின்பேரில் கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பனை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு மேற்பாற்வையில் இன்ஸ்பெக்டர்கள், தலைமையில் 37 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது. கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் திருப்பாதிரிபுலியூர் , குப்பங்குளம் , சாலக்கரை , தூக்கணாம்பாக்கம் , கடலூர் பெண்ணையாறு கரையோரம் , சுண்ணாம்புகார தெரு . புதுப்பாளையம் , ரயில் நிலையம் , தைக்கால் ஆகிய இடங்களில் சோதணை மேற்கொள்ளப்பட்டது . சிதம்பரம் ஆலப்பாக்கம் ரயில்வே கேட் , புதுச்சத்திரம் ரயில்வேகேட் , வில்லியனூர் பண்ருட்டி காடாம்புலியூர் , பெரியகாட்டுசாகை , மாளிகம்பட்டு . ஆண்டிக்குப்பம் , நெல்லிக்குப்பம் , பி.என். பாளையம் , நெல்லிகுப்பம் , மேல்பட்டாம்பாக்கம் . நடுவீரப்பட்டு பேருந்து நிலையம் , சி.என்.பாளையம் , பாலூர், விருத்தாச்சலம் பாலக்கரை , பெண்ணாடம் , ரயில்வே ஜங்ஷன் , பழையபட்டினம் கீரனூர் , சோழன் நகர், சேத்தியாத்தோப்பு கீழ்புளியங்குடி , சந்தைதோப்பு , லால்பேட்டை , கோட்டைமேடு , அய்யன்குடி , திட்டக்குடி பேருந்துநிலையம் , ஆவினங்குடி , சிறுமங்கலம் , ராமநத்தம், , நல்லூர் , சிறுபாக்கம் , மங்களுர் உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை.

    • நெல்லிக்குப்பம் நகராட்சியில் 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    கடலூர்:

    கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கடலூர் மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. அதன்படி நெல்லிக்குப்பத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி முகாம் நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் நடைபெற்றது. முகாமிற்கு நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கி தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார். துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனை உள்ளிட்ட 5 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் தடுப்பூசி போடாத நபர்களை கண்டறிந்து தடுப்பூசி போடுவதற்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நகராட்சி கவுன்சிலர்கள் சத்யா, பாரூக், இளநிலை உதவியாளர் பாபு, டாக்டர் சக்தி கவுதம் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    கடலூர்: கடலூர் அருகே காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூய்மைப் பள்ளிகள் இயக்கத்தினையும் மற்றும் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட வலியுறுத்தி சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்து பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வரவேற்று தெரிவித்ததாவது:- அரசுப் பள்ளிகள் நமது சொத்தாகும், நமது பள்ளியின் பெருமையினை நாம் உணர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளில் சேர்வதற்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு, பெண்கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி மாணவர்கள் நல் ஒழுக்கத்தோடு பெற வேண்டிய கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து ஆலோசனை தெரிவிக்க அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.
    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலை–யத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர். இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரி–களின் ஆய்வுக்கு எந்தவித ஒத்து–ழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப் பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:- சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணைய ரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோ–ச–னைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி–முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்க–லாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
    • சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவிலில் அறநிலையத்துறை உத்தரவின் பேரில் கண்காணிப்பு குழுவினர் கடந்த வாரம் 2 நாட்கள் ஆய்வு செய்ய சென்றனர்.

    இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அவர்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தனிக்குழு அமைத்தால் தான் ஒத்துழைப்பு தருவோம் என்று பொது தீட்சிதர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

    இந்த நிலையில் கோவில் நிர்வாகம் குறித்து கருத்து தெரிவிக்க ஆலோசனை வழங்கலாம் என இந்துசமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள துணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    சிதம்பரம் நடராஜர் கோவில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம் கோவில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை வருகிற 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் 3 மணிவரை நேரில் தெரிவிக்கலாம். அதோடு மின் அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×