என் மலர்
நீங்கள் தேடியது "தீவிரதூய்மைப் பணி"
- பண்ருட்டியில் போலீஸ் நிலையங்களில் தீவிரதூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
- பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் தீவிர தூய்மை பணி இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பண்ருட்டி,புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டி குப்பம் காவல் நிலையங்களில் போலீசார் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி: பண்ருட்டி போலீஸ் நிலையங்களில் தீவிர தூய்மை பணி இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், பண்ருட்டி,புதுப்பேட்டை, காடாம்புலியூர், முத்தாண்டி குப்பம் காவல் நிலையங்களில் போலீசார் தீவிர தூய்மை பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய வளாகத்தை சுற்றி இருந்த புல் பூண்டுகள் புதர்களை அழித்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், நிலைய எழுத்தர்கள், குற்றப்பிரிவு போலீஸ் நிலையம்,போக்குவரத்து போலீஸ் நிலையம் ஆகிய இடங்களில்உள்ள அவரவரது அலுவலக அறைகளில் பதிவேடுகளை பாதுகாப்பாகவும், பார்ப்பதற்குஅழகான முறையில் அடுக்கி அழகு செய்தனர். நான் மிடுக்காக இருக்கிறேன் என வாசகம் சுவரில் எழுதி வைத்தனர் இதனால் காவல் நிலையங்கள் பளிச்சென காணப்பட்டது. காவல் நிலையத்திற்கு வந்தவர்கள் மகிழ்ச்சியுடன் பார்த்தனர்.






