என் மலர்
கடலூர்
- கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.
- கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.
கடலூர்:
கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காலை திடீரென்று ராஜேந்திரன் கூரை வீட்டிலிருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் புகைமண்டலம் தீயாக மாறியது. இந்த தீ அருகாமையிலிருந்த சுப்பராயலு என்பவரின் இரண்டு கூரை வீட்டிலும் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிந்தததை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவில் வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் 3 கூரை வீடும் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.
- பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
- உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.
கடலூர்:
பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை இன்று காலை நடந்தது இதனை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.
பின்னர் மாடவீதி வீதி உலா நடைபெற்றது மாடவீதியில் பொதுமக்கள் திரண்டு இருந்து கருட சேவையை கண்டு களித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகவீடுவீடாகபக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள்வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வைகாசி மாத பவுர்ணமி கருடசேவை உற்சவதாரர் எஸ்விஜுவல்லர்ஸ் அதிபர்கள் பி.எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், ஏ.சண்முநிஷாந்த் ஆகியோர் செய்தனர்.
- விருத்தாசலத்தில் துணிகரம்: பஸ் அதிபர் வீட்டில் 45 பவுன் நகை, 10 கிலோ வெள்ளி கொள்ளையடிக்கப்பட்டது.
- இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63). பஸ் அதிபர். இவர் தனது குடும்பத்தி–னருடன் சென்னையில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க கடந்த 2 நாட்க–ளுக்கு முன்பு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இன்று அதிகாலை பஸ் அதிபர் ஜெயச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த–போது பொருட்கள் சிதறி கிடந்தன. இதனால் அவருக்கு மேலும் பதட்டம் அதிக–மானது.
பீரோவை பார்த்த–போது அதில் இருந்த 45 பவுன் தங்க ஆபரணங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்ப–ட்டிருந்தது. இதனால் பதறிபோன ஜெயச்சந்திரன் இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ளனர். கொள்ளை–யர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்க–ப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க–வில்லை. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க–ப்பட்டுள்ளது.
- நீர் வரத்து அடியோடு நின்றதால் வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாந–கரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த ஏரிக்கு பருவகால–ங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேக–மாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறை–க்கப்ப–ட்டது. தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தி–ருந்தனர்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும். ஆனால் மேட்டூர் அணை–யில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர்தே–வைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் தண்ணீர் எடுக்க முடியாது. இன்று காலை 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகருக்கு அனுப்ப–ப்படு–கிறது. தற்போது நிலவர–ப்படி நீர்மட்டம் 39.75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் குடிநீர் அனுப்பப்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை மிரட்டிய 10 பேர் கும்பல்
- கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை 10 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
கடலூர் தாலுகா சிலம்பி மங்கலம் கிராமத்தை சேர்ந்த நான் தற்போது கடலூர் கோண்டூர் மீராகிரு–ஷ்ணன் நகரில் தற்காலிக–மாக வசித்து வருகிறேன். எனது தந்தை, தாயும் தனியாக இருக்கும் போது, ராமநாத குப்பத்தை சேர்ந்த சுந்தரபாலு, மல்லிகா, திலகா உள்ளிட்ட 10 பேர் கும்பல் எனது தாய், தந்தை–யை வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்த நான் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோழி–பண்ணை வைத்திருப்ப–வர்கள் அந்த பகுதி யில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏராளமான நாய்கள் அந்த கழிவுகளை தின்ப தற்காக வருகின்றன.
இங்கு வரும் நாய்கள் அந்த பகுதியில் உள்ள கால்நடை களை கடிப்பதாகவும் கூறி எனது பெற்றோரை மிரட்டு–கின்ற னர். இதற்கு காரணம் அந்த பகுதியில் தனியார் கம்பணி உள்ளது. இங்கு திருட்டு செயலில் ஈடுபடும் கும்பலுக்கு எனது பெற்றோர் இடையூ–றாக இருப்பதாக கருதி பிரச்சினையை திசை–திருப்பி வருகிறார்கள். இதனால் எனது பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி புதுசத்திரம் போலீசில் புகார் தெரிவி–த்தும் எந்தவித நடவடிக்கை–யும் இல்லை. எனவே இது தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63).
- கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது.
விருத்தாசலம்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியார் நகர் ரோஜாபூ தெருவை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 63). பஸ் அதிபர்.
இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் நடந்த திருமணவிழாவில் பங்கேற்க கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை திறந்து அதில் இருந்த நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இன்று அதிகாலை பஸ் அதிபர் ஜெயச்சந்திரன் வீடு திரும்பினார். அப்போது கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன.
இதனால் அவருக்கு மேலும் பதட்டம் அதிகமானது. பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 45 பவுன் தங்க ஆபரணங்கள், ரூ.5 லட்சம் மதிப்பிலான வைர நகைகள், 10 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதனால் பதறிபோன ஜெயச்சந்திரன் இதுகுறித்து விருத்தாசலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் இதுபற்றி வழக்குபதிவு செய்துள்ளனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் கடலூரில் இருந்து வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
- மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.
- வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியும்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரியின் மூலம் 44,856 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை, மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும்.
கடந்த 2 மாதமாக கோடை வெயில் சுட்டெரித்ததால் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்பும் அளவு குறைக்கப்பட்டது.
தொடர்ந்து நீர்வரத்து குறைந்ததால் எப்போது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர்.
வழக்கமாக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதிதான் தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு முன்னதாகவே கடந்த மாதம் 27-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழணைக்கு வந்து சேரும். அங்கிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டுவரப்படும்.
ஆனால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்தும் இதுவரை கீழணைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. எனவே சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து 38 அடி வரை நீர்மட்டம் இருக்கும் வரைதான் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்ப முடியும். 38 அடிக்கு கீழ் ஏரியில் சேரும், சகதியுமாக காணப்படுவதால் தண்ணீர் எடுக்க முடியாது.
இன்று காலை 22 கனஅடி நீர் மட்டுமே சென்னை மாநகருக்கு அனுப்பப்படுகிறது. தற்போது நிலவரப்படி நீர்மட்டம் 39.75 ஆக உள்ளது. ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இன்னும் ஒரு வாரத்துக்குத்தான் குடிநீர் அனுப்பப்படும் என்று பொதுபணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
- என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.
எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- மருங்கூர் ஊத்துகாட்டு மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரி அம்மன் கோவில்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டிஅருகே மருங்கூர் கிராமத்தில் அமைந்துள்ளது ஊத்துகாட்டு மாரி அம்மன் கோவில்.இங்குஏராளமான பொருள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதில் இதனைமுன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான யாக சாலை யில்யாகசாலை வேள்விபூஜைகள் கடந்த 12ஆம் தேதி முதல் தொடங்கி விமர்சையாக நடைபெற்று வந்தது. இன்று காலை 6மணிக்கு 3வதுகால யாகசாலை வேள்விபூஜைகள் நடைபெற்று கலச நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மூலவர் கருவறை விமான கலசம் மீதுகலச நீர் ஊற்றி பூஜைகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம்நடந்தது.
தொடர்ந்து பரிவாரதெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் மகா அபிஷேகம், மகாதீபாராதனை ஆகியவைநடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஓம் சக்தி, ஓம்சக்தி என விண்ணதிர முழங்கினர். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் நந்த கோபால கிருஷ்ணன், வி.எம். கேஷியூஸ் அதிபர்விசுவாமித்திரன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர்,கிராம இளைஞர்கள்கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்தனர்.
- கடலூர் மாவட்டத்தில் இன்று 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன.
- தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர்.
கடலூர்:
தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழு வதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ கம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க–ப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்ப–ட்டன.
இதில் கடலூர் மாவட்ட–த்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங் கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் பள்ளிகளில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் உள்ளதா? என்பதனை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவமாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.
அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாண வர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்ப றைக்கு அழைத்துச் சென்ற தையும் காணமுடிந்தது. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் மட்டும் நடந்தது.
- லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் விபத்து
- வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
கடலூர்:
விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள அரிசி கடைக்கு சுமார் 50 டன் அரிசி லாரி ஏற்றி வந்தது. அப்போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறம் சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.
அப்போது வாகனங்களின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர். ஆலப்பாக்கம் பகுதியில் சென்ற போது வேனின் டயர் வெடித்தது.
இதில் தறிகெட்டு ஓடிய அந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற தங்கமணி (வயது 35), செல்வி (40), முத்தமிழ் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






