search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில்  2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன
    X

    கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவிகள் பிரார்த்தனை செய்த காட்சி..

    கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன

    • கடலூர் மாவட்டத்தில் இன்று 2,180 பள்ளிகள் திறக்கப்பட்டன.
    • தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர்.

    கடலூர்:

    தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஏப்ரல் மற்றும் மே மாதம் வரை முழு ஆண்டு மற்றும் பொதுத் தேர்வுகள் முடிந்து விடுமுறையில் இருந்து வந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழு வதும் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை தமிழ கம் முழுவதும் இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்க–ப்படும் என தமிழக அரசு அறிவித்ததை தொடர்ந்து இன்று பள்ளிகள் திறக்கப்ப–ட்டன.

    இதில் கடலூர் மாவட்ட–த்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் இன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. முன்னதாக அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங் கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் பள்ளிகளில் கட்டிட வசதிகள், அடிப்படை வசதிகள் போன்றவற்றை சரியான முறையில் உள்ளதா? என்பதனை அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் ஆய்வு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவமாணவிகள் பள்ளி சீருடையில் மகிழ்ச்சியாக பள்ளிகளுக்கு வந்தனர்.

    அப்போது ஒரு சில மாணவ மாணவிகள் பள்ளியில் விட்டுச்சென்ற தனது பெற்றோர்களிடமிருந்து பள்ளிக்கு செல்லாமல் அழுததையும் காண முடிந்தது. இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாண வர்களை அன்புடன் வரவேற்று பள்ளி வகுப்ப றைக்கு அழைத்துச் சென்ற தையும் காணமுடிந்தது. இன்று முதல் நாள் என்பதால் பெரும்பாலான பள்ளிகள் அரைநாள் மட்டும் நடந்தது.

    Next Story
    ×