search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karutasevai"

    • பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
    • உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

    கடலூர்:

    பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை இன்று காலை நடந்தது இதனை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

    பின்னர் மாடவீதி வீதி உலா நடைபெற்றது மாடவீதியில் பொதுமக்கள் திரண்டு இருந்து கருட சேவையை கண்டு களித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகவீடுவீடாகபக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள்வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வைகாசி மாத பவுர்ணமி கருடசேவை உற்சவதாரர் எஸ்விஜுவல்லர்ஸ் அதிபர்கள் பி.எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், ஏ.சண்முநிஷாந்த் ஆகியோர் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரத்தில் சவுரிராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திருத்தலங்களில் 17-வது தலமாக போற்றப்படுகிறது.

    ஆழ்வார்களால் மங்களா–சாசனம் செய்யப்பட்ட பெருமையுடைய இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி, வருகிற 9-ம் தேதி தங்க கருடசேவையும், 13-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், 14-ம் தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் சீனிவாசன், செயல் அலுவலர் மாதவன், ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×