என் மலர்
கடலூர்
- கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு சென்ற பண்ருட்டி இளம் பெண் மாயமானார்.
- கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.
கடலூர்:
பண்ருட்டி அருகே எஸ்.கே.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவரது மகள் வினிதா (19). இவர் பிளஸ்- 2 படித்துவிட்டு வீட்டில்இருந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடலூர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பி வரவில்லை.பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் இதுகுறித்து பண்ருட்டிபோலீசில் புகார் செய்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெ க்டர் சந்திரன் இதுகுறித்துவழக்கு பதிவு செய்து காணாமல் போன வினிதாவை தீவிரமாக தேடி வருகிறார்.
- கடலூரில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து மானபங்கப்படுத்திய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
- அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வச்சலா (வயது 27). அதே பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (வயது 25). சம்பவத்தன்று வச்சலா வீட்டில் இருந்து வெளியில் வந்தார். அப்போது அங்கு குடி போதையில் இருந்த சிவராஜ் திடீரென்று வச்சலா கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அதிர்ச்சி அடைந்த வச்சலா கையை உதறிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சித்த போது சிவராஜ் திடீரென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்து மானபங்கம் படுத்தியதாக கூறபடுகிறது. இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் சிவராஜ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.
- பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச் செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 60). கூலி தொழிலாளி. திருமணம் செய்து கொள்ளாமல் தனது அக்காள், தங்கையுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள பொன்னுசாமி என்ப வருக்கு சொந்தமான வயல்வெளி வழியாக இயற்கை உபாதை கழிக்க சென்றார். நேற்று மாலை திட்டக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து.
இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாப்பாத்தி உடல் கருகி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திட்ட–க்குடி அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர். மேலும் இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வயல்வெளியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் கிராமத்தில் சோக–த்தை ஏற்படுத்தி–யுள்ளது.
- பண்ருட்டி அருகே பழமையான கெண்டிமூக்கு பானை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
- சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள எனதிரிமங்கலம் பகுதி தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் மேற்புர களஆய்வு மேற்கொண்டானர்.
அப்போது சங்க காலத்தை சேர்ந்த 2000 ஆண்டுகள் முற்பட்ட பழமையான கெண்டி மூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு ஆகியவற்றை கண்டறிந்தனர்.
இதைகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:-
பண்ருட்டி பகுதி தென்பெண்ணையாற்றில் கடந்த சில மாதமாக மேற்புர களஆய்வு மேற்கொண்ட போது சங்ககால மக்கள் வாழ்ந்ததற்கான தொல்லியல் தடயங்கள் கிடைத்தது. இதை தொடர்ந்து எனதிரிமங்கலம் பகுதியில் களஆய்வு மேற்கொண்டபோது சங்ககால மக்கள் குடிநீர்க்காக பயன்படுத்திய கெண்டிமூக்கு பானை மற்றும் கெண்டிமூக்கு பகுதிகள் கண்டறியப்பட்டது.
இந்த பகுதியில் இதுபோல கெண்டிமூக்கு பானைகள் நிறைய இருந்து இருக்கலாம் அதற்கான தடயம் தான் உடைந்த கெண்டிமூக்குகள். இதுபோல கெண்டிமூக்கு பானைகள் தமிழகத்தில் தொல்லியல் துறையினர் நடத்திய அகழ்வாய்வில் கீழடி, கொற்கை , உறையூர் போன்ற பகுதிகளில் கிடைத்துள்ளது.
தற்போது எனதிரிமங் கலம் பகுதியில் கண்டறியப் பட்ட கெண்டிமூக்கு பானை யானது சங்ககாலத்தில் வாழ்ந்த மக்கள் குடிநீர் அருந்துவதற்காக பயன்ப டுத்திய பானை ஆகும்.
இதன் மூலம் பண்ருட்டி பகுதி தென்பெண்யாற்றில் சங்ககால மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என்று அறியமுடிகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- விளைச்சல் அதிகரிப்பால் பலாப்பழங்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் கடும் நஷ்டத்தில் வியாபாரிகள் மூழ்கியுள்ளனர்.
- பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
கடலூர்:
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும்.இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும்சா லையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டி கள்,பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம்என்பதால்இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபி ள்ளையார்குப்ப ம்பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.
விலைகுறைந்ததால்வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.
- கடலூரில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற 120 வீரர்களுக்கு சான்றிதழை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் வழங்கினார்
- கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.
கடலூர்:
கடலுார் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் கடந்த 1-ம் தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது. இதில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 120 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு கிரிக்கெட் சங்க பயிற்சியாளர் ராகுல் பயிற்சி அளித்தார். பயிற்சியில் பங்கேற்ற வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்டத் தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி னார். மாவட்ட விளையாட்டு அதிகாரி சிவா முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை சங்க மாவட்ட செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.
- பண்ருட்டி அருகே போலீசாருக்கு தெரியாமல் மாணவி உடல் எரிக்கப்பட்டது.
- இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர். தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் இவரது மகள் ரக்ஷிதா (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பொது தேர்வு முடிந்து தேர்வு முடிவுக்காக காத்திருந்தார்.
இதற்கிடையில் நேற்று திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உறவினர்கள் போலீசுக்கு தெரியாமல்இவரது உடலை எரித்துவிட்டனர்.
தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார் தொடர்ந்து முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலிருந்து மருத்துவர் குழுவினர் பண்ருட்டி தாசில்தார்சிவா கார்த்திகேயன், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் முன்னிலையில்பிணம் எரிக்கப்பட்ட இடத்திற்கு சென்று அங்கிருந்த எலும்புகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
- சிதம்பரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வடக்கு மாங்குடி நேதாஜி தெருவை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. அவரது மனைவி சுலோசனா. இவர் கடந்த 10-ந் தேதி அன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள தனது தாய் ஊருக்கு திருவிழாவை பார்க்க சென்றார்
மீண்டும் 13ம் தேதி அன்று மாலை தனது வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். வீட்டின் உள்ள இரும்பு பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 18 பவுன் நகைகள் (செயின்,தோடு,மோதிரம் என) காணாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டின் பின்பக்க கதவை மர்மநபர்கள் யாரோ உடைத்து திருடிச் சென்றுள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அண்ணா மலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- நெய்வேலியில் ரூ.4,400 கோடி மதிப்பில் பழுப்பு நிலக்கரியில் மெத்தனால் உற்பத்தி ஆலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டது.
- அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது.
கடலூர்:
பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திரவத்தை பழுப்பு நிலக்கரியிலிருந்து உற்பத்தி செய்வதற்கான ஆய்வுப் பணிகளை, எள்எல்சி இந்திய நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதற்கானஆய்வு அறிக்கைக்கு அந்நிறு–வனத்தின் இயக்குனர் குழுவால் ஒப்புதல் வழங்கப்ப–ட்டுள்ளது.
அதன் அடுத்த கட்டமாக, திளமும் 1200 டன் அளவிற்கு மெத்தனால் திரவம் தயாரிக்கும். ஆண்டொ–ன்றுக்கு 4 லட்சம் டன் திறன்கொண்ட ஆலையை ரூ. 4 ஆயிரத்து 400 கோடி செலவில் அமைக்கும் பணிகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் மேற்கொள்ளவிருக்கிறது. நாட்டில் முதல் முறை சுரங்கம் மற்றும் மின்னுற்பத்தி பணிகள் மட்டுமின்றி. பல்வேறு துறைகளில் தனது வர்த்த–கத்தை விரிவுபடுத்த வேண்டுமென்ற நோக்க–த்தில், என்.எல்.சி. இந்தியா அமைக்கப்படவிருக்கும் புதிய முயற்சியாகும். வரும் 2027-ம் ஆண்டில் இந்த புதிய ஆலையில் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.
மேலாளண்மைப் பணிகள்இந்நிலையில் இத்திட்டத்தை நிறைவேற்று வதற்கான மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள, ETCHETEUA இந்தியா நிறுவனத்திற்கு ஆலோச னைகள் வழங்கும் பொருட்டு மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமை–ச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இன்ஜினீயர்ஸ் இந்தியா நிறுவனத்தை. என்எல்சி. இந்தியா நிறுவனம் பணி யமர்த்தியுள்ளது.
நிதிஆயோக்பரிந்துரை மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிதி ஆயோக் அமைப்பு. இத்திட்டத்தினை பல்வேறு கட்டங்களாக ஆய்வு செய்து திருப்தியடைந்து, மிக விரைவாக இதனை நிறைவேற்றப் பரிந்துரைத்து–ள்ளது குறிப்பிடத்தக்கது. ஊக்கத்தொகைஇத் திட்டத்தினை, உற்பத்திக்கு ஏற்ற ஊக்கத்தொகை வழங்கும் திட்டங்களுக்கான பட்டியலில் இணைக்குமாறு, என்.எல்.சி. இந்தியா நிறு–வனம் மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.
அதன்படி இங்கு தயாரித்து விற்பனை செய்யப்படும் மெத்தனால் திரவத்திற்கு டன்னிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையைமத்திய அரசு ஊக்கத் தொகையாக வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.
- தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.
பண்ருட்டி:
பண்ருட்டி என்றாலே நினைவுக்கு வருவது முந்திரி, பலா ஆகும். இங்கு செம்மண் நிறைந்த பகுதி காணப்படுவதால் இங்கு விளையும் பலாப்பழம் சுவை மிகுந்ததாக இருக்கும். இதனால் பண்ருட்டி பலாப் பழத்தை அனைவரும் விரும்பி வாங்குவார்கள்.
பண்ருட்டியை சுற்றியுள்ள காடாம்புலியூர், பலாப்பட்டு, நடுவீரப்பட்டு, கீழ்மாம்பட்டு, பணிக்கன் குப்பம், தாழம்பட்டு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் பலா சாகுபடி நடைபெற்று வருகிறது.
தற்போது சீசன் தொடங்கி உள்ளது. எனவே தினமும் 10, 20 லாரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட டன்கள் பலாப்பழங்கள் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பண்ருட்டியில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில்பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குவியல்குவியலாய்லாக பலப்பழங்கள் வைத்து நூற்றுக்கணக்கானோர் விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனை அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பலாபழங்களைவாங்கி செல்கின்றனர்.
இந்த ஆண்டு பலாபழவிளைச்சல் அதிகம் என்பதால் இதன் விலை குறைந்துள்ளது . ஒரு பலா பழம் 100 ரூபாய்க்குதான் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டு ரூ. 300 வரை விலை போனது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் பலா காயை பறிப்பதற்கான கூலி, அதை மார்க்கெட்டுக்கு கொண்டு செல்வதற்கான வாகனச் செலவுக்கு ஈடான தொகை கூட கிடைக்கவில்லை. இதனால் பல இடங்களில் விவசாயிகள் பலா காயை பறிக்காமல் மரங்களிலேயே உள்ளோம் என்றனர்.
இதுகுறித்து பண்ருட்டி மண்டி உரிமையாளர் நடுபிள்ளையார் குப்பம் பாலமுருகன் கூறுகையில் இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதால் இதன் விலை போகவில்லை. தினசரி ஏராளமான பழங்கள் வெடித்து வீணாகிறது.
விலைகுறைந்ததால் வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரே நேரத்தில் பலா பழம் வரத்து அதிகம் உள்ளதால் விற்க முடியவில்லை. வெளியூர்களுக்கு லோடு அனுப்பினாலும் அதை விட பலாப்பழ வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பலாப்பழத்தை யாரும் வாங்குவார் இல்லை. இதனால்தான் விலை வீழ்ச்சியை பலாப்பழம் கண்டு உள்ளது.
எனவே தமிழ்நாடு அரசு பண்ருட்டி பகுதியில் பலாப் பழம் பதனிடும் தொழிற்சாலை அமைத்திட வேண்டும் என்றார்.
- திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
- சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருவதிகை வீரட்டா னேஸ்வரர் கோவிலில் பவுர்ணமிகிரிவலம், ஊஞ்சல் உற்சவம் நடை பெற்றது.
இதனை முன்னிட்டு மாலை 4 மணிக்கு மூலவ–ர்சாமி, அம்பாள், உறசவர் பெரியநாயகி அம்பாள்ஆகியோருக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு, பஞ்சா மிர்தம் மற்றும் மூலிகை திரவியங்கள், மூலிகை பொடி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் சாமி மூலவர் வெள்ளி நாகாபரண அலங்காரத்திலும் அம்பாள் பெரியநாயகி மூலவர் வெள்ளி அங்கி அலங்கார–த்திலும் அங்காரம் செய்யப்பட்டு, வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலரகளால் அர்ச்சனை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறை வேறவும், நேர்த்திகடனுக்காகவும் கிரிவலம் வந்து சாமி தரி சனம் செய்தனர்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடை–பெற்றது. இதனை முன்னிட்டு அம்பாள் பெரிய நாயகி ஊஞ்சலில் எழுந்த ருளி சேவை சாதித்தார் பவுர்ணமி உற்சவதாரர் ஏ. வி. குமரன்மற்றும் சிவனடி யா–ர்கள், சிவதொ–ண்டர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
அப்பர் இல்ல அறக்க–ட்டளை சார்பில் ஆன்மீக சொற்பொழிவு, பரத நாட்டியம் ஆகியவை நடந்தது. இரவு 12 மணிக்கு பவுர்ணமி சிறப்பு பூஜை மற்றும் அர்த்தசாம பூஜை ஆகியவை நடைபெற்றது.
பவுர்ணமியை முன் னிட்டு பக்தர்களுக்கு மருத்து வம், சுகாதாரம்,குடிநீர், உணவு, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.
- மாமனார் இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் திட்டியதை பதிவு செய்து வைத்திருப்பதாக மருமகள் தகவல்
- மாமனாருடன் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் சேர்ந்து மிரட்டுகின்றனர்.
கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர்வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணி போல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன்என்று மிரட்டினார்.
இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான்என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
இது சம்மந்தமாக கடந்த 08-04-2022 அன்று 08.04.௨௦௨௨காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும், அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.
எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டு மிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தை களையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






