என் மலர்tooltip icon

    கடலூர்

    கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடந்தது.

    கடலூர்:

    சென்னை பொருளியல் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் டாக்டர் பிங்கி ஜோவல் தலைமையில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கடலூர் விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் கடலூரில் நடைபெற்றது இதற்கு கடலூர் மண்டல இணை இயக்குனர் ரவி முன்னிலை வகித்தார். இத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அதன் முக்கியத்துவத்தை குறித்து ஆணையர் பிங்கி ஜோவல் பேசினார். இதில் கூடுதல் இயக்குனர் திட்டம் ராமகிருஷ்ணன் நிர்வாகம் பாரதி ஆகியோர் பேசினர் இதில் கடலூர் மண்டலத்திற்கு உட்பட்ட துணை இயக்குனர்கள் கோட்டை புள்ளிகள் உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கடலூர் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர்- போலீஸ்காரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று காலை கடலூர் ரெட்டிச்சாவடி வழியாக சிதம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பெரிய கங்கணாங்குப்பம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் வாகனம் சென்ற பிறகு, போலீசார் அங்கு போக்குவரத்து நெரிசலை சரி செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது காலில் அடிபட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த போலீஸ்காரர் ஒருவரும் மிகவும் சோர்வுடன் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்கிடையே அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர், உடல் நலம் பாதிக்கப்பட்ட போலீஸ்காரரை எச்சரிக்கை செய்து ஒழுங்காக பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    அப்போது திடீரென்று நடுரோட்டில் இன்ஸ்பெக்டரும், போலீஸ்காரரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த போலீஸ்காரர் திடீரென்று சாலையில் விழுந்தார். அங்கிருந்த போலீசார் அதிர்ச்சி அடைந்து இருவரையும் சமாதானப் படுத்தினர். மேலும் அந்த போலீசார் திடீரென்று கீழே விழுந்ததற்கான காரணம் இன்ஸ்பெக்டர் தள்ளி விட்டதால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இருப்பினும் நடுரோட்டில் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பண்ருட்டி அருகே நள்ளிரவில் டீக்கடை தீப்பிடித்து எரிந்தது.
    • அக்கம் பக்கத்திலிருந்தவர்களின் உதவியோடு தண்ணீரை ஊற்றிதீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கடைவீதியில் காசி விசுவநாதர் கோவில் அருகே செந்தில் என்பவர் டீக்கடைநடத்திவருகிறார்.

    இந்த கடையில் நேற்று நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீசார் வைத்திய நாதன் ஆகியோர் அக்க–ம்பக்கத்திலி ருந்தவர்களின் உதவியோடு தண்ணீரை ஊற்றிதீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். கடையில் வேலை செய்யும் பண்டரகோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், பணபக்கத்தை சேர்ந்த பச்சைக்கிளி ஆகியோரை நேரில் வரவழைத்து கடையை திறந்து தீப்பிழம்புக்கு மிக அருகில் இருந்த இரண்டு சிலிண்டர்களை அப்புறப்படுத்தி மீண்டும் தண்ணீர் ஊற்றி தீயை முழுவதும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார்தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடலூர் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிக்கு பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு நடக்கிறது.
    • மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

    கடலூர்:

    தமிழகத்தில் ஜூலை மாதம் நடைபெற உள்ள பிரம்மாண்டமான 44-வது பைடு செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, மாவட்ட அளவிலான மாணவ- மாணவிகளுக்கு சதுரங்க போட்டி தேர்வு கடலூரில் ஆயிரவைசிய திருமண மண்டபத்தில் நாளை (18-ந் தேதி) 19-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதில் 15 வயதிற்குட்பட்ட மாணவமாணவிகள் பங்கு பெறலாம். இரண்டு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் எனமொத்தம் 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். போட்டியில் பங்கு பெறமுன்பதிவு அவசியம். ஆண்களுக்கு 25 பரிசுகளும், பெண்களுக்கு 25 பரிசுகளும்வழங்கப்பட உள்ளது.பதிவு செய்வதற்கான நடைமுறைhttps://prs.aicf.in/new-register https://forms.gle/vSoQM34D6TMtokUi9தங்கள் பதிவை உறுதி செய்ய 8012568392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

    • பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.
    • 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ.நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டார். ஒப்பந்தகாரர் அரசு விதிகளுக்கு உட்பட்டு இரும்பு மற்றும் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதால்தரமில்லாமல் கட்டப்படும் கட்டிங்களை கட்டப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் மகேஷ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிதம்பரத்தில் இன்று வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
    • 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    கடலூர்:

    சிதம்பரம் மேலவீதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவரும் காய் கனி மார்க்கெட்டின் முன்புறம் நகராட்சி இடத்தில் இயங்கிவரும் 72 கடைகளை மட்டும் உழவர் சந்தை இயங்கிவந்த அண்ணா கலையரங்கிற்கு மாற்றப்பட உள்ளது.

    எனவே நகராட்சியின் திட்டத்தை கைவிடக்கோரி முதல்கட்டமாக அண்ணா கலையரங்கத்தில் உழவர் சந்தை அமைத்து மக்கள் யாரும் செல்லவில்லை. தற்போது அங்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வேளாண் விற்பனை துறை அலுவலகம், வாடகை கார், வேன் நிறுத்தும் இடமாக உள்ளது.

    தற்போது உள்ள மார்க்கெட் பின்புறம் சொந்த இடத்திலும்,வக்போர்டுக்கு சொந்தமான இடத்திலும் இயங்கும் சுமார் 100 கடைகளும் வழக்கம்போல் இயங்கும் நிலையில் முன்புறம் உள்ள சுமார் 50 கடைகளை மட்டும் மாற்றினால் இரு இடங்களில் மார்க்கெட் செயல்படுவதால் இரு இடங்களில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்.

    இதனால் பின்புறம் உள்ள கடைகளுக்கு லாரிகளில் வரும் பொருட்களை ஏற்றி இறக்க ஏற்படும் சிரமங்கள் உருவாகும். பொதுமக்கள் ஒரே இடத்தில் காய், கனி, பூ, மளிகை பொருட்களை பார்த்து வாங்க கூடிய நிலை இல்லாமல் ஆங்காங்கே அலையவேண்டிய நிலை இருக்கும். எனவே நகராட்சியின் இத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி இன்று முதல் கட்டமாக 24 மணிநேர கடையடைப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து பின்னர் காலவரையற்ற கடையடைப்பு போராட்ட மும் நடைபெறும் என காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

    அதன்படி இன்று சிதம்பரம் நகரில் கடை அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    • காணொளி மூலம் புதிய மகளிர் காவல் நிலையம் திட்டக்குடியில் திறந்து ைவக்கப்பட்டது.
    • டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம், திட்டக்குடி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட புதிய மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்-அமைச்சர் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். புதியதாக திறக்கப்பட்ட மகளிர் காவல் நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே.கணேசன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன் மற்றும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

    புதிய மகளிர் காவல் நிலையம் தொடங்கிய சிறிது நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ. கணேசன் மற்றும் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. பாண்டியன், கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன முன்னிலையில் திறக்கப்பட்டது.

    முதல் நாளில் பெண்ணாடம் அடுத்த முருகன்குடி கிராமத்தை சேர்ந்த அஞ்சலையம்மாள் என்ற பெண்ணியிடம் ரூ.1லட்சம் ஒருவர் பெற்றுக் கொண்டு திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாகவும், இது சம்பந்தமாக கடந்த 6 மாத காலமாக பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் புகார் மீது பெண்ணாடம் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி அமைச்சரிடம் அழுதபடியே புகார் மனுவை அளித்தார்.

    இதுகுறித்து டி.ஐ.ஜி. மற்றும் எஸ்பி ஆகியோர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தனர். நிகழ்ச்சியில் மங்களூர் யூனியன் தலைவர் சுகுணாசங்கர், நகராட்சி சேர்மன் வெண்ணிலாகோதண்டம், நகராட்சி துணை தலைவர் பரமகுரு ,ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், நகர இளைஞர் அணி அமைப்பாளர் சேதுராமன் மற்றும் தி.மு.க.

    கட்சி நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் நகராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டக்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    • புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் தற்போது மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தற்போது அனைத்து கிராமங்களிலும் புதிய குழாய் பதிப்பு நடைபெற்று வருகிறது. கீழ்ச்செருவாய் ஊராட்சியில் ஏற்கனவே ஊராட்சிமன்ற நீர்நிலை தேக்கதொட்டியிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது புதிய குழாயில் இணைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக குடிநீருக்கு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் எங்களுக்கு தண்ணீர் வரவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கடந்த ஒரு வாரமாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தொடர்ந்து திட்டக்குடி - ராமநத்தம் மாநில சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ண கொடி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பழுப்பு பதித்து குடிநீர் வழங்குப்படும் என தெரிவித்திருந்தனர்.

    தண்ணீர் வராததால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அவர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பேசிக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மிரட்டுவதாகவும் நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் தரப்பு ஆண்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிகாரிகள் தலையிட்டு சுமுகத் தீர்வு கண்டு தொடர்ந்து குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    • சிதம்பரத்தில் ஜவுளி-செருப்பு கடைகளை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டது.
    • வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம் பரம் மாலைகட்டி தெரு நகராட்சி நடுநிலை பள்ளி எதிரே வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் ஜவுளி மற்றும் செருப்புக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளது. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், கடை உரிமை யாளர்கள் தங்களது கடைகளை பூட்டிவிட்டு வீடுகளுக்கு சென்றனர். நள்ளிரவு நேரம் மர்ம நபர்கள் அங்கு வந்தனர். அவர்கள் ஜவுளிக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த துணிகளை திருடி சென்றனர். இேத போன்று செருப்புக் கடையை உடைத்து புகுந்த கொள்ளையர்கள் அங்கி ருந்த பணத்தை கொள்ளை யடித்து சென்ற–னர்.

    இந்த வணிகவளாகம் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இன்று காலை கடைகள் திறந்து இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுபற்றி உரியைாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த உரிமை யாளர்கள் கடைகளுக்கு விரைந்தனர். அப்போது ஜவுளிக்கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான துணிகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. இதுபற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறர்கள். சிதம்பரம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாகவே தொடர் கொள்ளை சம்ப–வங்கள் நடந்து வருகிறது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி யடைந்துள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

    • அனைத்து கட்சி சார்பில் ெரயில் மறியல் போராட்டம் வருகிற 28- ந்தேதி கடலூரில் நடக்கிறது.
    • கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாநகர அனைத்து அரசியல் கட்சிகள் குடியிருப்போர் சங்கங்கள் ஆலோசனை கூட்டம் கடலூர் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநில செய லாளர் வக்கீல் சந்திர சேகரன், கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், அமர்நாத், குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருத வாணன், தலைவர் வெங்கடேசன், மாநகராட்சி கவுன்சிலர் அருள்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் சுந்தர ராஜன், மீனவர் விடு தலை வேங்கை மாநில நிர்வாகிகள் வெங்க டேசன், ரமேஷ், வி. சி. க நகர செயலாளர் செந்தில், , விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில்கொரோனா ஊரடங்கு பிறகு இயக்கப்பட்ட கடலூர் திருப்பாப்புலியூர்ெரயில் நிலையத்தில் நின்று சென்ற மன்னார்குடி, காரைக்கால் விரைவு ரயில்கள் மீண்டும் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் உழவன் எக்ஸ்பிரஸ் இரண்டு வண்டிகளும் கடலூர் முதுநகர்ரயில் நிலை யத்தில் நின்று செல்வ தற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் -புதுச்சேரி இருப்புப்பாதை திட்டத்தை விரைந்து உருவாக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். விழுப்புரம் மயிலாடுதுறை அனைத்து பாசஞ்சர் ரயில்களை முழுமையாக இயக்கிட வேண்டும் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை மீண்டும் அளிக்க வேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்து கட்சியின் சார்பில் வருகிற ஜூன் 28 ந்தேதி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்துவது. இதற்கு அனைத்து பகுதி மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

    • விவசாயிகளுக்கு கடன் வழங்காத தேசிய மயமாக்கப்பட்ட வங்கியை கண்டித்து 26 -ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கரும்பு விவசாயிகள் அறிவித்துள்ளது.
    • தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது.

    கடலூர்:

    தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தனியார் சர்க்கரை ஆலை மட்ட கோரிக்கை மாநாடு நெல்லிக்குப்பத்தில் நடைபெற்றது. மாநாட்டில் அருள் ஜோதி ராமலிங்கம் கொடியேற்றி தொடங்கி வைத்தார். சங்க தலைவர் மணி தலைமை தாங்கினார். விவசாய சங்க தலைவர் சம்பத் வரவேற்றார். மாநாட்டில் விவசாய சங்க மாநில துணை செயலாளர் மாதவன் தொடங்கி வைத்து பேசினார். ஆலை மாவட்ட செயலாளர் தென்னரசு அறிக்கை வாசித்தார். மாவட்ட இணை செய லாளர் சரவணன் தீர்மானங்கள் வாசித்தார். இதில் மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், கரும்பு சங்க மாநில செயலாளர் இரவிச் சந்திரன், ம.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெ.ராம–லிங்கம், மாவட்ட பொரு–ளாளர் தட்சணாமூர்த்தி வாழ்த்துரை ஆற்றினார்கள். முடிவில் ராமானுஜம் நன்றி கூறினார். கூட்டத்தில் மத்திய அரசு கரும்பு டன்னுக்கு 4500 ரூபாய் விலை வழங்கிட வேண்டும். மாநில அரசு அறிவித்த எஸ்.ஏ.பி நிலுவைத் தொகை–யை உடனே வழங்கிட வேண்டும். தனியார் சர்க்கரை ஆலையில் எரிந்த கரும்புக்கு விவசாயிகளிடம் டன் 1-க்கு 100 ரூபாய் பிடித்தம் செய்த தொகையை உடனே விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்.

    கரும்பில் கழிவு பிடித்தம் செய்த ரூபாயை ஆலை நிர்வாகம் உடனடியாக வழங்க வேண்டும். ஆலை நிர்வாகம், அரசு, விவசாயி–கள் பங்கேற்கும் பழையபடி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கரும்புக்கு விலை நிர்ணயம் செய்திட வேண்டும். விவசாயிகளுக்கு கடன் வழங்காமல் அலை கழிப்பதை கண்டித்தும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு வருகிற 26-ஆம் தேதி தமிழ்நாடு கரும்பு விவசாயி–கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தேசிய அளவிலான சிலம்ப போட்டி பண்ருட்டி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

    கடலூர்:

    பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திதேசிய அளவிலான இளையோர் சிலம்பப் போட்டி அரியானாவில் கடந்த 4ந் தேதி 6ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.தங்கவென்ற மாணவன் துளசிதரன் நேற்று பண்ருட்டி திரும்பினார். பண்ருட்டியில் அவருக்கு சிலம்பம் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்தங்க வென்ற மாணவன் துளசிதரனை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பண்ருட்டி வீர தமிழர் தற்காப்பு கலை கூடபேரவை சிலம்பம் ஆசிரியர் சிகாமணி,முத்துலிங்கம் தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×