என் மலர்
உள்ளூர் செய்திகள்

தீயில் எரிந்து நாசமான டீ கடையை படத்தில் காணலாம்.
பண்ருட்டி அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த டீக்கடை
- பண்ருட்டி அருகே நள்ளிரவில் டீக்கடை தீப்பிடித்து எரிந்தது.
- அக்கம் பக்கத்திலிருந்தவர்களின் உதவியோடு தண்ணீரை ஊற்றிதீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே புதுப்பேட்டை கடைவீதியில் காசி விசுவநாதர் கோவில் அருகே செந்தில் என்பவர் டீக்கடைநடத்திவருகிறார்.
இந்த கடையில் நேற்று நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்த புதுப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம், போலீசார் வைத்திய நாதன் ஆகியோர் அக்க–ம்பக்கத்திலி ருந்தவர்களின் உதவியோடு தண்ணீரை ஊற்றிதீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். கடையில் வேலை செய்யும் பண்டரகோட்டையைச் சேர்ந்த விஜயகுமார், பணபக்கத்தை சேர்ந்த பச்சைக்கிளி ஆகியோரை நேரில் வரவழைத்து கடையை திறந்து தீப்பிழம்புக்கு மிக அருகில் இருந்த இரண்டு சிலிண்டர்களை அப்புறப்படுத்தி மீண்டும் தண்ணீர் ஊற்றி தீயை முழுவதும் அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்த குமார்தீவிபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.






