search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tiṭṭakudi"

    • திட்டக்குடி அருகே குடிநீர் வழங்காததை கண்டித்து ஊராட்சிமன்ற அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
    • புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வந்தது. கிராமப்புறங்களில் தற்போது மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்கும் வகையில் தற்போது அனைத்து கிராமங்களிலும் புதிய குழாய் பதிப்பு நடைபெற்று வருகிறது. கீழ்ச்செருவாய் ஊராட்சியில் ஏற்கனவே ஊராட்சிமன்ற நீர்நிலை தேக்கதொட்டியிலிருந்து வழங்கப்பட்டு வந்த குடிநீர் தற்போது புதிய குழாயில் இணைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்கின்றனர். ஆனால் புதிய குழாய், பழைய குழாய் இரண்டிலும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் கடந்த ஒரு வார காலமாக வழங்கப்படாமல் உள்ளது.

    கடந்த ஒரு வார காலமாக குடிநீருக்கு சிரமப்பட்டு வந்த பொதுமக்கள் எங்களுக்கு தண்ணீர் வரவில்லை என ஊராட்சி மன்ற தலைவரிடம் கடந்த ஒரு வாரமாக பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் ஒன்று சேர்ந்து இன்று காலை காலி குடங்களுடன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின் தொடர்ந்து திட்டக்குடி - ராமநத்தம் மாநில சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ண கொடி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொது மக்களுக்கு விரைவில் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி பெண்கள் கூறுகையில் மத்திய அரசின் புதிய ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் பழுப்பு பதித்து குடிநீர் வழங்குப்படும் என தெரிவித்திருந்தனர்.

    தண்ணீர் வராததால் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் கேட்டால் அவர்கள் முன்னுக்கும் பின்னுக்கும் முரணாக பேசிக்கொண்டு 10-க்கும் மேற்பட்ட ஆண்களை வைத்து மிரட்டுவதாகவும் நாங்கள் பெண்கள் என்பதால் எங்கள் தரப்பு ஆண்களுக்கும் அவர்களுக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவாகி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதிகாரிகள் தலையிட்டு சுமுகத் தீர்வு கண்டு தொடர்ந்து குடிநீர் முறையாக வழங்க கோரிக்கை விடுத்தனர்.

    ×