search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "additional building"

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
    • அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    தாராபுரம், அக்.21-

    தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வெ.கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் தவச்செல்வன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ.ஆய்வு
    • 50 படுக்கைகள் கொண்டது

    வந்தவாசி:

    வந்தவாசி அரசு மருத்துவமனையில் கூடுதலாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டப்பட்டு வ ருகிறது. இந்த கட்டிடத்தில் 50 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை மையம், ஸ்கேன் செய்யும் அறை, இடம்பெற உள்ளது.

    இந்த நிலையில் கட்டிடப் பணிகளை அம்பேத்குமார் எம்.எல்.ஏ., மற்றும் திமுக மாவட்ட கழக செயலாளர் எம் எஸ் தரணி வேந்தன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    பின்னர் கட்டிட பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

    ஆய்வின்போது மாவட்ட இணை இயக்குனர் பாபுஜி, மருத்துவர்கள் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

    • பண்ருட்டியில் தரமில்லாமல் கட்டிடம் கட்டும் பணி வேல்முருகன் எம்.எல்.ஏ.வின் அதிரடி நடவடிக்கையால் நிறுத்தப்பட்டது.
    • 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை வேல்முருகன் எம்.எல்.ஏ.நேற்று ஆய்வு செய்தார்.

    அப்போது பண்ருட்டி டைவர்ஷன் ரோட்டில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் ரூ. 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் குளிர்பதன கிடங்கு பணி மற்றும் தட்டாஞ்சாவடியில் உள்ள உழவர் சந்தைக்கு கூடுதல் கட்டிடம் கட்டும் பணியினை நேரில்பார்வையிட்டார்.

    கட்டிடம் கட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரும்பு மற்றும் கட்டுமான பொருட்கள் தரம் இல்லாமல் இருப்பது குறித்து கேட்டார். ஒப்பந்தகாரர் அரசு விதிகளுக்கு உட்பட்டு இரும்பு மற்றும் கட்டுமான பொருள்கள் பயன்படுத்தவில்லை என்பதால்தரமில்லாமல் கட்டப்படும் கட்டிங்களை கட்டப்படுவதை நிறுத்த உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், ஆணையாளர் மகேஷ்வரி, துணை தலைவர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

    முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் 11 ஊர்களில், நீதிமன்றங்களுக்கு கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும் என்றார். #edappadipalanisamy #tnassembly

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    நீதி நிருவாகம் துறையின் மூலம் செயல்படுத்த உள்ள பின்வரும் அறிவிப்புகளை இப்பேரவையில் அறிவிக்கின்றேன்.

    கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 4 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப் பீட்டில் கட்டப்படும்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதி மன்றக்கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 6 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடத்தின் மேல் தளங்களில் சார்பு நீதிமன்றம், கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு கூடுதலாக இரண்டு நீதிமன்ற அறைகள் மற்றும் அலுவலகங்கள், 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்களுக்கு உணவகம், இருசக்கர வாகன நிறுத்தத்துடன் கூடிய ஒருங்கிணைந்த கட்டடம் மற்றும் வாகன நிறுத்தத்துடன் கூடிய இரண்டு குடியிருப்புகள், 6 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றக் கட்டடம், சைக்கிள் நிறுத்தம், வாகன நிறுத்தம், உணவகம், பொது கழிப்பிடம் மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய குடியிருப்பு, 8 கோடியே 29 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடம் மற்றும் குடியிருப்புகள், 5 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

    தருமபுரி மாவட்டம் அரூரில் சார்பு நீதிபதி, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், ஒரு கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்பு நீதிபதி குடியிருப்பு கட்டப்படும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 நீதிபதிகளுக்கான குடியிருப்புகள், 3 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும். விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கான குடியிருப்பு கட்டப்படும்.

    கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #edappadipalanisamy #tnassembly 

    ×