திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திட்டக்குடி அருகே மின்சாரம் தாக்கி மூதாட்டி பலியானார்.பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது.
மின்சாரம் தாக்கி பலியான பாப்பாத்தியின் உடல்.
மின்சாரம் தாக்கி பலியான பாப்பாத்தியின் உடல்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த இடைச் செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பாத்தி (வயது 60). கூலி தொழிலாளி. திருமணம் செய்து கொள்ளாமல் தனது அக்காள், தங்கையுடன் சேர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் உள்ள பொன்னுசாமி என்ப வருக்கு சொந்தமான வயல்வெளி வழியாக இயற்கை உபாதை கழிக்க சென்றார். நேற்று மாலை திட்டக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து.

இதன் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது வயலுக்கு மேல்பகுதியில் செல்லும் மின் கம்பி அறுந்து தொங்கியது. இதனை அறியாத பாப்பாத்தி அவ்வழியே வயலில் நடந்து சென்றபோது கீழே அறுந்து தொங்கிய மின்கம்பியில் கை பட்டு மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே பாப்பாத்தி உடல் கருகி பலியானார்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திட்டக்குடி போலீசார் பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திட்ட–க்குடி அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்த–னர். மேலும் இது குறித்து திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். வயல்வெளியில் மின்சாரம் தாக்கி மூதாட்டி இறந்த சம்பவம் கிராமத்தில் சோக–த்தை ஏற்படுத்தி–யுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com