கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை மிரட்டிய 10 பேர் கும்பல்

கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை மிரட்டிய 10 பேர் கும்பல்கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை 10 பேர் கொண்ட கும்பல் மிரட்டியது.
கடலூர் அருகே வீடு புகுந்து முதியவரை மிரட்டிய 10 பேர் கும்பல்
Published on

கடலூர்:

கடலூர் அருகே உள்ள சிலம்பி மங்கலத்தை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

கடலூர் தாலுகா சிலம்பி மங்கலம் கிராமத்தை சேர்ந்த நான் தற்போது கடலூர் கோண்டூர் மீராகிரு–ஷ்ணன் நகரில் தற்காலிக–மாக வசித்து வருகிறேன். எனது தந்தை, தாயும் தனியாக இருக்கும் போது, ராமநாத குப்பத்தை சேர்ந்த சுந்தரபாலு, மல்லிகா, திலகா உள்ளிட்ட 10 பேர் கும்பல் எனது தாய், தந்தை–யை வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி அறிந்த நான் விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோழி–பண்ணை வைத்திருப்ப–வர்கள் அந்த பகுதி யில் கோழி இறைச்சி கழிவுகளை கொட்டுகிறார்கள். இதனால் ஏராளமான நாய்கள் அந்த கழிவுகளை தின்ப தற்காக வருகின்றன.

இங்கு வரும் நாய்கள் அந்த பகுதியில் உள்ள கால்நடை களை கடிப்பதாகவும் கூறி எனது பெற்றோரை மிரட்டு–கின்ற னர். இதற்கு காரணம் அந்த பகுதியில் தனியார் கம்பணி உள்ளது. இங்கு திருட்டு செயலில் ஈடுபடும் கும்பலுக்கு எனது பெற்றோர் இடையூ–றாக இருப்பதாக கருதி பிரச்சினையை திசை–திருப்பி வருகிறார்கள். இதனால் எனது பெற்றோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது பற்றி புதுசத்திரம் போலீசில் புகார் தெரிவி–த்தும் எந்தவித நடவடிக்கை–யும் இல்லை. எனவே இது தொடர்பாக தாங்கள் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com