என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெறும் காட்சி.
கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
- கடலூர் அருகே வளைகாப்பு கோஷ்டி வேன் கவிழ்ந்து 16 பேர் காயம் அடைந்தனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர்.
கடலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்ைட அருகே ஒல்லியான்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வளைகாப்புக்கான ஒரு வேனில் கடலூர் அருகே அரிராஜாபுரம் கிராமத்துக்கு இன்று காலை சென்றனர். ஆலப்பாக்கம் பகுதியில் சென்ற போது வேனின் டயர் வெடித்தது.
இதில் தறிகெட்டு ஓடிய அந்த வேன் சாலை ஓரம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனில் சென்ற தங்கமணி (வயது 35), செல்வி (40), முத்தமிழ் உள்பட 16 பேர் காயம் அடைந்தனர். வலியால் துடித்த அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






