கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசம்

கடலூர் அருகே 3 கூரை வீடுகள் எரிந்து நாசமானது.கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார்.
தீயில் எரிந்து நாசமான வீடுகளை படத்தில் காணலாம்.
தீயில் எரிந்து நாசமான வீடுகளை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் முதுநகர் அருகே வடுகப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் தனது குடும்பத்துடன் கூரை வீட்டில் வசித்து வருகின்றார். இன்று காலை திடீரென்று ராஜேந்திரன் கூரை வீட்டிலிருந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர் புகைமண்டலம் தீயாக மாறியது. இந்த தீ அருகாமையிலிருந்த சுப்பராயலு என்பவரின் இரண்டு கூரை வீட்டிலும் பரவி எரியத் தொடங்கியது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென பரவி எரிந்தததை தொடர்ந்து, தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவில் வந்து போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் 3 கூரை வீடும் முழுவதும் எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து தீக்கிரையானது. இதுகுறித்து கடலூர் முதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com