search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு:   2,180 பள்ளிகளில்  தூய்மைப் பணிகள்  தீவிரம்
    X

    நாளை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தூய்மை பணி நடந்தது.

    கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

    • கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி 2,180 பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுகிறது.

    கடலூர்: கடலூர் அருகே காரைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் தூய்மைப் பள்ளிகள் இயக்கத்தினையும் மற்றும் காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்திட வலியுறுத்தி சேர்க்கை விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பாலசுப்ரமணியம் தொடங்கிவைத்து பேசியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 245 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், 1188 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், 282 நிதி உதவி பெறும் பள்ளிகள், 465 தனியார் பள்ளிகள் ஆகமொத்தம் 2180 பள்ளிகள் 13.6.2022 அன்று 1 முதல் 10-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதை தொடர்ந்து அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பள்ளிகள் இயக்கம் தொடங்கப்பட்டு தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள், பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக்குழு, தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒத்துழைப்புடன் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பள்ளிகளில் வகுப்பறைகள், வளாகங்கள் மற்றும் கழிவறைகள் உள்ளிட்டவற்றை தூய்மைப்படுத்தியும், குடிநீர் வசதி, மின் வசதி மற்றும் சத்துணவு கூடங்களை நல்ல முறையில் பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடித்திடவும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து காரைக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கி சால்வை அணிவித்து வரவேற்று தெரிவித்ததாவது:- அரசுப் பள்ளிகள் நமது சொத்தாகும், நமது பள்ளியின் பெருமையினை நாம் உணர்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பொறியியல் மற்றும் மருத்துவ உயர்படிப்புகளில் சேர்வதற்கு வழங்கப்பட்டு வரும் 7.5% இட ஒதுக்கீடு, பெண்கல்வி ஊக்கத்தொகை ஆகியவற்றினை பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனவும், மேலும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 14 வகையான நலத்திட்ட உதவிகளை எடுத்துக்கூறி மாணவர்கள் நல் ஒழுக்கத்தோடு பெற வேண்டிய கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பின் முக்கியத்துவம் ஆகியன குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாற்றாக மஞ்சப்பை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தினையும் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)பவன்குமார் ஜி.கிரியப்பனவர், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×