என் மலர்
கடலூர்
- கடலூரில் மாநகராட்சி வாகனத்தை சிறைபிடித்த அ.தி.மு.க நிர்வாகிகள் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர்.
கடலூர்:
அ.தி.மு.க. சார்பில் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்து கடலூர் மாநகராட்சி சாலை ஓரத்தில் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று கடலூர் மாநகராட்சி சார்பில் ஊழியர்கள் அனுமதி இல்லாமல் பேனர்கள் வைக்கப்பட்டதாக கூறி பேனரை அகற்றி வாகனத்தில் கொண்டு சென்றனர். அப்போது அ.தி.மு.க.வினர் வாகனத்தை மறித்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டன. இது குறித்து கடலூர் புதுநகர் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத் தலைவர் சேவல் குமார், பகுதி செயலாளர் வக்கீல் பாலகிருஷ்ணன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
- கடலூர் அருகே செல்போனில் ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
- கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கடலூர்:
கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர். கோட்டையம்மாள் (வயது 32). இந்த நிலையில் கணவர் ராமராஜனுக்கும், கோட்டை யம்மாளுக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக கோட்டையம்மாள் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரண்டு செல்போன் நம்பரில் இருந்து கோட்டையம்மாளுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் அசிங்கமாக பேசி மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கோட்டையம்மாள் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இது குறித்து கோட்டையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விருத்தாசலம் அருகே முன் விரோதத்தில் மர்ம நபர்களால் முயல் கழுத்தை அறுக்கப்பட்டது.
- காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராமச்சந்திரன் பேட்டை ராமன் தெருவை சேர்ந்த மணிமாறன் . இவர் வீட்டில் முயல், கோழி என இருபதிற்கும் மேற்பட்ட செல்ல பிராணிகள் வளர்த்து வந்தார். நேற்று இரவு மணிமாறன் மற்றும் அவரது மனைவி குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அவர் வீட்டில் வளர்க்கப்பட்ட முயல் மற்றும் கோழிகளின் கழுத்து அறுத்து போட்டுள்ளனர். காலையில் கண்விழித்த பிறகு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த செல்லபிராணிகளை பார்த்த மணிமாறன் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து மணிமாறன் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- விருத்தாசலம் அருகே வாகனம் மோதி பள்ளி காவலாளி பலியானார்.
- வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 60). இவர் குப்பநத்தம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இவர் இன்று காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் செல்லும்போது நெய்வே லியில் இருந்து விருத்தாசலம் நோக்கி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவர் மீது மோதிய டாட்டா ஏசி வாகனம் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது, வண்டியை ஓட்டி வந்த ஓட்டுநர் வண்டியை அங்கே யே விட்டுவிட்டு தப்பி ஓடினார். தகவலின் பேரில் அங்கு வந்த விருத்தாசலம் போலீ சார் ராஜலிங்கம் உடலை பிரேத பரிசோதனைக்காக விருத்தா சலம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பித்தனர்.இது குறித்து விருத்தா சலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
- வீட்டில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர்.
- மக்கள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நெய்வாசல் கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மணல் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது.
அப்போது வீட்டில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் 10 மாத பெண்குழந்தை அஸ்விதா சம்பவ இடத்தில் இறந்ததது.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் டி.எஸ்பி. சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசுவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
- கடலூர் அருகே கீற்று கொட்டகையில் வாலிபர் தூக்கில் பிணமாக தொங்கினார்.
- அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.
கடலூர்:
கடலூர் அருகே ரெட்டிசாவடி பெரிய காட்டு பாளையம் பகுதியில் கீற்றுக் கொட்டகை உள்ளது. இதில் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இறந்து கிடந்தார். அப்போது அவழியாக சென்ற பொதுமக்கள் ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த நிலையில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? எதற்காக இங்கு தூக்கு மாட்டி இறந்தார்? உள்ளிட்ட பல்வேறு கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூரில் பேனரை அகற்றியதால் பரபரப்பு மாநகராட்சி வாகனத்தை அ.தி.மு.க.வினர் சிறைபிடித்தனர்.
- கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.
கடலூர்:
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அ.தி.மு.க.வினர் தேர்ந்தெடுத்தனர். இதனை யொட்டி கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினர். மேலும் மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க வினர் ஆங்காங்கே எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து தெரிவித்த பேனர்கள் வைக்கப்பட்டன. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் உழவர் சந்தை அருகே இன்று காலை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டிருந்த அ.தி.மு.க. பேனரை அகற்றி மாநகராட்சி வாகனங்களில் கொண்டு சென்றனர்.
தகவல் அறிந்த மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் தலைமையில் ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர்கள் வெங்கட்ராமன், கெமிக்கல் மாதவன், நிர்வாகிகள் ஏழுமலை, முத்து, செந்தில்குமார், நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் அண்ணாப்பாலம் அருகே சென்று கொண்டிருந்த மாநகராட்சி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அ.தி.மு.க. வினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அ.தி.மு.க.வினர் கூறுகையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் பேனர்கள் வைக்க கூடாது. அதனை மீறி வைத்ததால் பேனர்கள் அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அ.தி.மு.க. பேனர் மட்டும் அகற்ற வேண்டும் என தனிப்பட்ட முறையில் யாரேனும் உத்தரவு பிற்படுத்த உள்ளார்களா? மேலும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பல்வேறு கட்சியினர், அமைப்புனர்கள் பேனர் வைத்துள்ளனர்.
அதனை அகற்றாமல் அதிமுக பேனர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அகற்றுவது யார் தூண்டுதலின் பேரில் நடக்கிறது. மேலும் எங்கள் கட்சி பேனர் மற்றும் அகற்றாமல் மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பேனர்களையும் நாங்களே அகற்றி தங்களிடம் ஒப்படைக்கிறோம் என தெரிவித்தனர். அப்போது போலீசார் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்கிறோம் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
- வேப்பூர் அருகே அரசுபள்ளியில் குடிநீர் இல்லாததை கண்டித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
- சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர்
கடலூர்
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே ஐவதுகுடி பகுதியில் அரசு மாதிரி பள்ளி இயங்கி வருகிறது இப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக பள்ளிக்கு குடிநீர் வராத காரணத்தால் பள்ளி மாணவர்கள் மாணவிகள் இன்று காலை சுமார் 9 மணி முதல் 9. 30 வரை சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பேசி குடிநீர் வழங்கப்படும் என்று கூறியதால் மாணவர்கள் கலைந்து சென்றனர் இதனால் சுமார் அரைமணி நேரம் சென்னை திருச்சி மற்றும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சா லையில் போக்கு வரத்து பாதிக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
- திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
- கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆராமுது அம்பாள் சமேத ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. கிராமத்தில் இந்த கோவிலை புரணமைப்பு செய்ய வேண்டும் என கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு முதல் ஆலய திருப்பணிகள் தொடங்கியது. மீண்டும் ஊர் பொதுமக்கள் கூடி வீட்டிற்கு வீடு வரி வசூல் செய்து கோவிலின் திருப்பணியானது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலயத்தின் முன்பு புதிதாக மண்டபம் அமைப்பதற்காக நேற்று காலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.
அப்போது கோயிலின் வலது பக்கத்தில் முதல் பள்ளத்தில் ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அம்மன் சிலையை பார்ப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் குவிந்தனர். அம்மன் சிலை கோவில் கருவிழி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்அல்லது வேறு ஏதும் உலோகத்தால் ஆனதா என ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அம்மன் சிலை கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- கடலூரில் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்திய வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
- புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார் கம்மியம்பேட்டை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாமல் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். போலீசாரை கண்டதும், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் அதில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கடலூர் தூக்கணா ம்பாக்கத்தை சேர்ந்த திருகுமரன் (வயது 24) என்பதும், தப்பி ஓடியது புதுச்சேரி மாநிலம் குருவிநத்தத்தை சேர்ந்த தவமுருகன் என்பதும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பாலித்தீன் பைகளில் 60 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததும் தெரி யவந்தது. இதையடுத்து மோட்டார் சைக்கிளுடன் 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து திருகுமரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய தவமுருகனை தேடி வருகின்றனர்.
- திட்டக்குடி அருகே வீட்டில் பதுக்கிய 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வாகையூர் மூப்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 80)கூலித் தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்கள் இவரது வீட்டில் 4-டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்துள்ளனர். இதை வீட்டில் அருகே இருந்தவர்கள் பார்த்து தகவல் தெரிவித்தனர். குடிமை பொருள் மற்றும் ராம்நத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மர்ம நபர்களால் பதுக்கி வைத்திருந்த 4 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதே போன்று ராமநத்தம் அருகே உள்ள கண்டமத்தான் கிராமத்தில் ஒரு வீட்டில் 3 டன் ரேஷன் அரிசி இதேபோன்று பதுக்கி வைத்திருந்தது தெரிய வரவே உடனே போலீசார் அதனையும் பறிமுதல் செய்தனர். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்களை போலீசார் தொலைபேசி தேடி வருகின்றனர். 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்தது அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






