என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த மணல் லாரி-குழந்தை பலி
    X

    காட்டுமன்னார்கோவில் அருகே வீட்டுக்குள் புகுந்த மணல் லாரி-குழந்தை பலி

    • வீட்டில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர்.
    • மக்கள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே நெய்வாசல் கிராமத்தில் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை பணிக்கு மணல் ஏற்றி வந்த லாரி அதிவேகமாக வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்து கவிழ்ந்தது.

    அப்போது வீட்டில் டெலிவிஷன் பார்த்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் 10 மாத பெண்குழந்தை அஸ்விதா சம்பவ இடத்தில் இறந்ததது.

    இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் ஜே.சி.பி. எந்திரம் கொண்டு லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதி மக்கள் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸ் டி.எஸ்பி. சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். இதுகுறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குமராட்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×