என் மலர்
கடலூர்
- சின்னசேலம் பிளஸ்-2 மாணவி சாவு எதிரொலியாக வேப்பூர் அருகே கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தில் வசிக்கும் ராமலிங்கம் செல்வி மகள் ஸ்ரீமதி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதன் எதிரொலியாக இன்று வேப்பூர் அடுத்த தொண்டங்குறிச்சி எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டம் செய்தனர். இதனால் காலை 10 மணி முதல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. போலீசார் குவிக்கப்பட்டு சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் கலையாத பொதுமக்கள் போராட்டத்தை மீண்டும் வலுப்படுத்தி வருகின்றனர்.
- நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளரிடம் 3 பவுன் நகை மர்ம நபர்களால் பறிக்கப்பட்டது.
- நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
நெய்வேலி பிளாக் 29 சேர்ந்தவர் வெங்கடேசன். (வயது 40). இவர் அந்த பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று ஓட்டலில் மூடி விட்டு வெளியில் படுத்து தூங்கினார். பின்னர் எழுந்து பார்க்கும் போது கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் செயினை காணவில்லை. இதுகுறித்து நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் அருகே மனைவி சமைக்காததால் கணவன் தற்கொலை செய்துகொண்டார்.
- கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் அருகே அப்பியம் பேட்டை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). விவசாயி. இவரது மனைவி சுந்தராம்பாள் (வயது 52). சம்பவத்தன்று விவசாயி ஜெயபால் வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்து சாப்பாடு கேட்டுள்ளார். அப்போது சுந்தராம்பாள் சாப்பாடு செய்யவில்லை. இதனால் கணவன் மனைவிக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் கோபம் அடைந்த ஜெயபால் தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு இறந்தார். இதனை தொடர்ந்து இவரது உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளத்தில் பச்சிளம் பெண் குழந்தை பிணமாக மிதந்தது.
- பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லைகாளியம்மன் கோவில் எதிரே குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை பிறந்து 2 நாளே ஆன பச்சிளம் குழந்தை பிணம் மிதந்தது. இந்த குழந்தை உடல் குளத்தில் வடக்கு கரை ஓரம் கிடந்தது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சிதம்பரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விரைந்தனர். பெண்குழந்தை உடலை மீட்ட போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அந்த பெண் குழந்தையை வீசி சென்றது யார் ?பிறந்ததால் வீசி சென்றாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
- குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக வாய்க்கால் மற்றும் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பாதிப்பு என்றால் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே உள்ள சாலைகளை மறுசீரமைப்பின் போது ஏற்படும் விளைவுகளால் சாலைகளில் ஆங்காங்கே குண்டு குழியுமாகவும் மற்றும் குறிப்பாக அதிக நோய்களை பரப்பக்கூடிய வகையில் சாலைகளில் மேகமூட்டம் போல் வரக்கூடிய மாசடைந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.
ஆங்காங்கே குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது. மேலும் இதனால் பெரும் பாதிப்பு என்றால் இந்த சாலையில் இருந்து வரும் மிகப்பெரிய மாசடைந்த புகையினால் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களின் கண்களிலும் அந்தப் புகையை சுவாசிப்பதனால் உடல்நலம் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இந்த தூசியினால் விரைவாக உடல் நலப் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- கடலூர் பாடலீஸ்வரர் கோவில் தெப்பகுளத்தில் குப்பைகளை வீசுவதால் மாசு ஏற்படும் அவல நிலையில் உள்ளது.
- வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும்.
கடலூர்:
கடலூரில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமானது பாடலீஸ்வரர் கோவில். இந்த புகழ் மிக்க பாடலீஸ்வரர் தளத்தில் தான் இறைவி தவம் செய்து தன் மணவாளனை கரம்பற்றிய தலம் இத்தலமாகும். மேலும் இந்த கோவிலின் முன்புறம் தெப்பக்குளம் உள்ளது. இந்த குளத்தில் தான் சிவன் சித்தராக இருந்து விளையாடினார். மேலும் இந்த குளம் சிவகரை தீர்த்தமானது. இதில் கங்கையின் ஒரு கூறு கலந்துள்ளது. மேலும் இந்த குளத்தில் தான் புலிக்கால் முனிவர் அப்பர் அகத்தியர் வியாக்ரபாதத் மன்க்கானமுனிவர் உபமன்னியர் ஆதிராசன் ஆகியோர்களால் பூஜித்து பேரு பெற்ற தலமாகும். அப்படிப்பட்ட இந்தப் பாடலீஸ்வரர் புனித குளம் தற்போது தண்ணீர் படிப்படியாக குறைந்து குளத்தை சரிவர பராமரிக்காமல் குளத்திற்குள் ஆங்காங்கே குப்பைகள் கிடக்கிறது. மேலும் இந்த குளத்தி ல் உள்ள தண்ணீரை சரிவர பராமரிக்காமல் குளம் முழுவதும் மாசு அடைந்து பச்சை நிறத்தில் காணப்படுகிறது.
இதனால் இந்த குளத்தில் உள்ள மீன்களுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் பொதுமக்கள் பிஸ்கட் பொறி போன்றவற்றை அப்படியே பிஸ்கட் கவருடன் வீசுகிறார்கள். இதனால் குளம் முழுவதும் மாசடைந்து வருகிறது. மேலும் மக்காத பிளாஸ்டிக் தாள்களையும் குலத்திற்குள் போடுவதால் குளம் முழுவதும் மாசடைந்து துர்நாற்றம் வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த குளத்தில் வாழும் மீன்கள் அழியும் வகையில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற 1008 சிவதலங்களில் ஒன்றான பாடலீஸ்வரர் கோவிலில் உள்ள குளம் மாசடைந்து வருவது கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே மன வேதனையை ஏற்படுத்துகிறது.
எனவே உயர் அதிகாரிகள் இதில் கவனத்தை செலுத்தி வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் குளத்தை சரிவர பராமரிப்பு செய்து மாசடைந்த நீரை அப்புறப்படுத்த வேண்டும். தற்போது மழை இல்லாத காரணத்தால் மோட்டார் மூலம் நல்ல நீரை குளத்தில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை தெரிவிக்கின்றனர்.
- சிதம்பரத்தில் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.
- வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார்.
கடலூர்:
சிதம்பரம் இளமையாக்கினார் கோயில்தெருவை சேர்ந்தசெந்தில் என்பவர்சிதம்பரம் புறவழிச்சாலையில் வெடிபொருள் தயார் செய்துவிற்பனை செய்வதற்கு உரிமம் பெற்றுள்ளார். கடந்த 2021ம்ஆண்டு தேர்தல் நேரத்தில் பறக்கும் படை அதிகாரி கள் இந்த குடோனில் திடீர் சோதனை செய்தபோது அனுமதித்த அளவுக்கு அதிகமாக வெடி பொருள்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அதிகாரிகளின் தொடர் விசாரணையில் கடலூர் மாவட்ட கூடுதல் ஆட்சியரால் இந்த உரிமம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிநேற்று மாலை இந்த வெடிமருந்து குடோனில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது ஆவணங்கள் சரிபார்க்கப் பட்டதில் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் வெடிபொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தயார் நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 582 வானவெடிகள், 35 நாட்டு சணல் வெடிகுண்டு,7 கிலோ கரி, 250 கிராம் சல்பர், 300 கிராம் பொட்டாசியம், வெடி மருந்து 1800 கிராம் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து சிதம்பரம் கோட்டாட்சியர் ரவிஅந்த வெடிமருந்து குடோனுக்கு சீல் வைத்தார். பின்னர் வெடி மருந்து குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதுகுறித்து கோட்டாட்சியர் ரவி, கடலூர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அனுப்பினார்.
- விருத்தாசலத்தில் விபசார வழக்கில் வக்கீல் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கடலுார்:
கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- புதுச்சத்திரம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானார்.
- கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள சிலம்பிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். அவரது பவானி (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகின்றன.2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14-ந் தேதி அன்று தனது கணவருடன் ஏற்பட்ட குடும்ப சண்டையில் கோபித்துக் கொண்டு புவனகிரி அருகே மணிக்கொல்லையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு தங்கி இருந்த பவானி 2 மகள்களுடன் மாயமானார்.அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பவானி மற்றும் குழந்தைகளை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனவேஇதுகுறித்து புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் தாயார் சாந்தி புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பவானி மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள்.
- அரிசி ஆலை- கடைகள் இன்று மூடியதால் கடலூர் மாவட்டத்தில் ரூ. 1 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது.
கடலூர்:
பொது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அரிசிக்கு மத்திய அரசு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரிவிதித்து உள்ளது. இந்த வரி விதிப்பினால் அரிசி விலை கணிசமாக உயரும். எனவே இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லை என்றால் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அரிசி ஆலை அதிபர்கள் அறிவித்து இருந்தனர். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் அரிசி ஆலை அதிபர்கள், அரிசி கடை உரிமையாளர்கள் போராட்டம் செய்தனர். கடலூர் மாவட்டத்தில் 250 அரிசி கடைகள், 30 அரிசி ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகள் மற்றும் கடைகள் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மூடினர். அதன்பின்னர் கடைகள் முன்பு 5 சதவீத ஜி.எஸ்.டி.யை பரிசீலனை செய்ய கோரி பதாகைகள் வைத்திருந்தனர். இந்த போராட்டம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.1 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது
கடலூர்:
திண்டிவனத்தில் இருந்து ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கடலூருக்கு வந்தது. பின்னர் கடலூர் - சிதம்பரம் சாலையில் நடைபெறும் கட்டிட பணிக்காக சாலை ஓரத்தில் டிரைவர் லாரியை நிறுத்தினார். இந்த நிலையில் சாலையில் ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி, வடிகால் வாய்க்கால் உடைந்து கவிழ்ந்தது. அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து சிறிது நேரம் நின்றனர். பின்னர் லாரி சாலை ஓரமாக நின்றிருந்ததால் பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் வடிகால் வாய்க்கால் உடைந்து லாரி ஒரு பகுதி முழுவதும் கவிழ்ந்ததால் லாரிலிருந்து ஜல்லிக்கற்களை உடனடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.மேலும் லாரி அருகே வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் பாதுகாத்துக் கொண்டு இருந்தனர். இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.
- கடலூர் அருகே தனியார் கம்பெனியில் 1/2 டன் இரும்பு திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர்.
கடலூர்:
கடலூர் அருகே பெரியகுப்பத்தில் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. இங்கு தானே புயல் தாக்கிய பிறகு கம்பெனி இயங்காததால் டன் கணக்கில் ஏற்கனவே இரும்பு பொருட்கள் ஏராளமானோர் திருடி சென்றனர். இந்த நிலையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் போலீசார் கடும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அடுத்த காரைக்காடு பகுதியில் உள்ள இரும்பு கடையில் இரும்பு பொருட்கள் திருடி வந்து வைத்திருப்பதாக தனியார் கம்பெனி ஊழியர் கண்ணன் மற்றும் அவருடன் பணிபுரியும் சாமிநாதன் என்பவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது தனியார் கம்பெனிக்கு சொந்தமான இரும்பு பொருட்கள் 1/2 டன் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் கஜா, பெரிய காரைக்காடு சேர்ந்தவர் முருகானந்தம், அணுகம்பட்டு ஈச்சங்காடு சேர்ந்தவர்கள் நடராஜன், எழிலரசன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து கஜா என்பவரை தவிர்த்து மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.






