search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    உருக்குலைந்த சாலையால் தூசி மண்டலமாக காணப்படுவதை படத்தில் காணலாம்.

    கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதி

    • கடலூர் அருகே ஆமை வேக சாலை பணியால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
    • குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதிய சாலைகள் போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது கடலூர் மற்றும் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக வாய்க்கால் மற்றும் தார் சாலை போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களாக இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மற்றும் குறிப்பாக வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். இதனால் இந்த பாதிப்பு என்றால் புதிய தார் சாலை அமைக்கும் பணிக்காக ஏற்கனவே உள்ள சாலைகளை மறுசீரமைப்பின் போது ஏற்படும் விளைவுகளால் சாலைகளில் ஆங்காங்கே குண்டு குழியுமாகவும் மற்றும் குறிப்பாக அதிக நோய்களை பரப்பக்கூடிய வகையில் சாலைகளில் மேகமூட்டம் போல் வரக்கூடிய மாசடைந்த புகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமமாக உள்ளது.

    ஆங்காங்கே குண்டு குழியுமாக இருப்பதால் நடந்து செல்பவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் அபாயமும் உள்ளது. மேலும் இதனால் பெரும் பாதிப்பு என்றால் இந்த சாலையில் இருந்து வரும் மிகப்பெரிய மாசடைந்த புகையினால் மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்பவர்களின் கண்களிலும் அந்தப் புகையை சுவாசிப்பதனால் உடல்நலம் பெரும் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இந்த தூசியினால் விரைவாக உடல் நலப் பாதிப்பு ஏற்படும் வகையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

    Next Story
    ×