பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

பண்ருட்டி அருகே 17 வயது சிறுமி கடத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.
பண்ருட்டி அருகே  17 வயது சிறுமி கடத்திய வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒரவர் திருத்துறையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை புதுப்பேட்டை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வாணியம்பாளையம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கடத்தல் வழக்காக பதிவு செய்து விசுவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com