என் மலர்
கடலூர்
- போலீசாரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு மேலும் ஒருவரை பிடித்து விசாரணை
- இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
கடலூர்:
நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம் இவர் தனது வீட்டில் வேலை செய்த குத்தண்டி ராஜேஸ்வரி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தையை தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த கமலம் கொலை வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க ராஜேஸ்வரி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். பின்னர் கமலம் பணம் தராததால் சம்பவத்தன்று கமலத்தை ராஜேஸ்வரி உறவினர்கள் கொலை செய்ய முயன்றனர் அப்போது அங்கு வந்த போலீசார் அந்த கும்பலை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் நெய்வேலி மாற்று குடியிருப்பு பி2 இளங்கோவன் மனைவி சுந்தரி (வயது 33) வடலூர் அருகே கல்லுக்குழி காலணியை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர் இந்நிலையில் வடலூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.
விசாரணையில் இவர்களிடம் சமூக வலை தளங்களில் விற்பனை செய்வோர் மூலம் ஏர்கான் துப்பாக்கியை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த முன்தினம் நள்ளிரவு அந்தப் பகுதியில் மினிலாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு வந்தது. அந்த மினி லாரியை மடக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி இரும்பு பொருட்களுடன் மினி லாரியை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. அந்த மினி லாரியை இவர்கள் வடலூர் சந்தை பின்புறம் கொண்டு சென்று நிறுத்தி இருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரும்பு பொருட்கள் இல்லாமல் லாரி மட்டும் இருந்தது. இதன்பின்னர் மினி லாரியை ஓட்டி வந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இதற்குப் பின்னால் சந்தேகத்தின்பேரில் 10 பேர் கொண்ட கும்பல் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இதற்கு பின்னால் பலர் இருக்கக்கூடும் என்பதால் 3 நபர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
- கடலூர் மத்திய சிறைச்சாலையில் கைதி திடீர் சாவு
- இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலை மத்திய சிறைச்சாலையில் கள்ளக்குறிச்சி வேங்கைவாடி சேர்ந்தவர் குருசாமி (வயது 43).இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தன் மனைவி கொலை செய்த வழக்கில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை குருசாமிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதன் காரணமாக குருசாமியை உடனடியாக சிறை மருத்துவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது குருசாமிக்கு முதலுதவி செய்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது குருசாமியை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது.
- மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வசிக்கும் சாமிகண்ணு. இவரது மனைவி மலர்கொடி வயது 46, தினகூலி தொழிலாளி. இன்று காலை திட்டக்குடி பொன்னுசாமி நகரில் 3-வது கிராசில் உள்ள ஆசைத்தம்பி வீட்டின் மேல் பகுதியில் வீடு கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம் போல் பணிக்கு வந்த மலர்கொடி மற்றும் கூலி தொழிலாளர்களுடன் சாப்பிட்டுவிட்டு பின் சாப்பிட்ட பாத்திரத்தை கழுவி வீட்டு மாடியில் பின்புறம் தண்ணீரை ஊற்றினார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார கம்பி மீது மலர் கொடியின் கை பட்டது. இதில் மின்சாரம் தாக்கியதில் மலர்கொடி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். அப்போது பயங்கர சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் திட்டக்குடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மே ற்கொண்டு வருகின்றனர். இறந்து போன மலர்கொ டியின் உடலை பார்த்து கூலித் தொழிலாளிகள் கதறி அழுததால் அப்போதில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.
- தனது பெட்டிக்கடையில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்விற்பனை செய்து வந்தார்.
- அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்,
கடலூர்:
பண்ருட்டி, புதுப்பேட்டை பகுதியில் டிஎஸ்பி சபியுல்லா உத்தரவின் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் போலீசார் நேற்று தீவிரரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த கீழ் காவனூர் தெய்வசிகாமணி (28)என்பவர் தனது பெட்டிக்கடையில்தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள்விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அவரிடம் இருந்து ஹான்ஸ் பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து இது குறித்து வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்
- கடலூர் நகருக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகள் வருவதாக மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது.
- பார்சலை பரிசோதனை செய்ததில் அதில் 600 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடை செய்வத ற்காக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீசார் தீவிரமாக கடலூர் மாவட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வந்தனர் இந்நிலையில் கடலூர் நகருக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகள் வருவதாக மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போ லீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சங்கர நாயுடு தெருவில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்துக்கு 2 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஒரு பார்சலை வாங்கிக்கொண்டு புறப்பட முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது ேபாலீசார் வருவதை கண்டு ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து பார்சலை பரிசோதனை செய்ததில் அதில் 600 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அது நீரிழிவு நோயாளி களுக்கான வலி நிவாரண மாத்தி ரைகள் என்பதும், அந்த மாத்திரைகளை நீரில் கலந்து குடித்தால் போதை ஏற்படும் என்பதும், குட்கா பொருள்கள் விற்பனை தடை செய்த நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் போதை பொருள்கள் கிடைக்காததால் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக போதை மாத்திரியை கூரியர் மூலம் ஹைதராபாத்தில் இருந்து வரவழைத்தது தெரியவந்தது. இவர்கள் இந்த கூரியர் மூலம் போதை மாத்திரை 3 மாத காலத்திற்கு மேலாக கடத்தி வந்து 3000 போதை மாத்திரைக்கும் மேல் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இந்த மாத்திரைகளை ரூபாய் 50, 60 குறைந்த விலையில் வாங்கி நான்கு மடங்கு லாபம் வைத்து 250, 300 ரூபாய்க்கு விற்பனை செய்வது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இதேபோன்று கூரியர் பார்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்தபோது பார்சலை பிரித்து சோதனை செய்யும் நேரத்தில் பார்சலை வேகமாக வாங்கி இளைஞர்கள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது மேலும் மாத்திரைகளை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபர் கடலூர் பாதிரிக்குப்பம் செல்லமுத்து குமரன் நகரைச் சேர்ந்த கவியரசன்(வயது 23) எனத்தெரிய வந்தது. உடனே டெல்டா பிரிவு போலீசார் அந்த வாலிபரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர. அவர்கள் வழக்குபதிந்து கவியரசனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடலூர் முதுநகரைச் சேர்ந்த ராகுலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
- வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளது
- மானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலூர்:
திட்டக்குடி அருகே ராமநத்தம் அருகே திருச்சி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமார் 2 வயது மதிக்கத்தக்க பெண் மான் அடிபட்டு கிடந்துள்ளது. இது குறித்து ராமநத்தம் காவல்துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர்.
தகவல் சம்பவர் இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த விருத்தாச்சலம் வன சரக்கத்தில் இருந்து வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் மானைக் கைப்பற்றி அடிபட்ட மானுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
- இலக்கியா (வயது 21). இவர் வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.
- பல்வேறு இடங்களில் மகளைத் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை
கடலூர்:
சேலம் அருகே உள்ள தலைவாசல் சீனிவாசன் நகரை சேர்ந்தவர் ராஜராஜன். அவரது மகள் இலக்கியா (வயது 21). இவர் சிதம்பரம் அருகே வடக்கிருப்பு கிராமத்தில் வீடு எடுத்து தங்கி அண்ணாமலை பல்கலைகழக வேளாண் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் ஊருக்கு செல்லவில்லை. இது பற்றி அறிந்த ராஜராஜன் தனது மகளை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த ராஜராஜன் இதுபற்றி அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குபதிந்து இலக்கியாவை தேடி வருகிறார்கள். சிதம்பரம் அருகே உள்ள திருக்கழிபாளையத்தை சேர்ந்தவர் பாலதண்டாயுதம். தச்சு தொழிலாளி. இவர் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பதறி போன அவரது மனைவி ராணி இதுபற்றி அண்ணாமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் பாலதண்டாயுதத்தை தேடி வருகிறார்கள்.
- வள்ளி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார்.
- மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வடுகபாளையத்தை சேர்ந்தவர் பொன்னம்பலம். அவரது மனைவி வள்ளி (வயது 32). அவரது மகன் பிரதீப் (5). கடந்த 4 நாட்களுக்கு முன்பு வள்ளி தனது கணவரிடம் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறி மகனை அழைத்து சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பொன்னம்பலம் தனது மனைவி மற்றும் மகனை பல்வேறு இடங்களில் தேடினார். எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பண்ரு ட்டி போலீசில் பொன்னம்பலம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிந்து வள்ளி மற்றும் குழந்தையை தேடி வந்தனர்.குழந்தையுடன் காணாமல் போன வள்ளியை பண்ருட்டி போலீசார் தேடி கண்டுபிடித்து கணவன் மற்றும் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்
- கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார்.
- பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் கோபால் இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடந்த 24ம் தேதி பிற்பகல் 3 மணி அளவில் திடீரென மாயமானார். இவரை பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர். இவரை பாளையம் தர்கா கோவில் தெருவை சேர்ந்த சூர்யா (20) கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
- செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர்.
- 16 வயது சிறுவனை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் கூத்தப்பாக்கம் வங்கி நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பா (வயது 75) மூதாட்டி. இன்று காலை கூத்தப்பாக்கம் முருகன் கோவில் பகுதியில் நடந்து சென்றார். அப்போது மூதாட்டி புஷ்பா பின்னால் 2 வாலிபர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர். திடீரென்று அந்த வாலிபர்கள் மூதாட்டியிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பித்து ஓடினர். இதனை எதிர்பாராத மூதாட்டி அதிர்ச்சியடைந்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். அப்போது அந்த வழியாக வந்த பொதுமக்கள் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றனர். அவர்களில் ஒருவர் ஆட்டோவில் ஏறி தப்பித்து ஓடினர்.
மற்றொரு வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியிடம் செல்போன் பறித்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. மேலும் தப்பி சென்ற வாலிபரும் அதே பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்தது. இதன்பின்னர் போலீசார் வழக்கு பதிவு செய்து 16 வயது சிறுவனை கைது செய்தனர். மேலும் தப்பி சென்ற சிறுவனை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதேபோன்று கடலூர் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் வாகனங்களில் செல்லக்கூடிய நபர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கி செல்போன் பறிப்பு சம்பவத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இதில் நேற்று 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். தற்போது கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான மக்கள் விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருவதால் நகை மற்றும் பணம் பறிக்கும் சம்பவத்தை விட செல்போன்களை பறிக்கும் சம்பவம் அதிகரித்து வருவதால் போலீசார் கூடுதல் ரோந்து பணியில் ஈடுபடுவதோடு, புது நபர்கள் குறிப்பாக இளைஞர்கள் அதிக அளவில் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதால் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துகிறது. இதனால் போலீசார் இந்த செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதி பெரும் பரபரப்பாக உள்ளது.
- கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
- நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சன்னியாசி பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 35) மனைவி சத்தியவாணி (24) சம்பவத்தன்று முருகன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் கரண்டியால் தனது மனைவி சத்தியவாணியை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் சத்தியவாணி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார்.
- அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த 23 வயது இளம்பெண் கடலூர் முதுநகரில் உள்ள தனியார் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வழக்கம் போல் அந்த பெண் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர் அவரை எல்லா இடத்திலும் தேடினர். ஆனால் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.






