search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "1 interrogated"

    • போலீசாரிடம் துப்பாக்கி காட்டி மிரட்டிய வழக்கு மேலும் ஒருவரை பிடித்து விசாரணை
    • இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி அருகே உள்ள தொப்புளிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கமலம் இவர் தனது வீட்டில் வேலை செய்த குத்தண்டி ராஜேஸ்வரி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தையை தன்னுடைய மகள் மற்றும் மகனுடன் சேர்ந்து கொலை செய்தார். இது தொடர்பாக தெர்மல் போலீசார் கமலம் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.   இதனையடுத்து ஜாமினில் வெளிவந்த கமலம் கொலை வழக்கில் சாட்சி சொல்லாமல் இருக்க ராஜேஸ்வரி உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணம் கொடுப்பதாக கூறியிருந்தார். பின்னர் கமலம் பணம் தராததால் சம்பவத்தன்று கமலத்தை ராஜேஸ்வரி உறவினர்கள் கொலை செய்ய முயன்றனர் அப்போது அங்கு வந்த போலீசார் அந்த கும்பலை தடுத்த போது அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். தப்பி ஓடியவர்களை பிடிக்க போலீசார் 2 தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் நெய்வேலி மாற்று குடியிருப்பு பி2 இளங்கோவன் மனைவி சுந்தரி (வயது 33) வடலூர் அருகே கல்லுக்குழி காலணியை சேர்ந்த விஜய் (24) ஆகியோரை தெர்மல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போலீசார் பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர்  இந்நிலையில் வடலூர் பகுதியைச் சேர்ந்த வீரமுத்து என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்தனர். பிடிபட்ட மூன்று பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது.

    விசாரணையில் இவர்களிடம் சமூக வலை தளங்களில் விற்பனை செய்வோர் மூலம் ஏர்கான் துப்பாக்கியை வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் சம்பவம் நடந்த முன்தினம் நள்ளிரவு அந்தப் பகுதியில் மினிலாரி ஒன்று இரும்பு பொருட்களை ஏற்றி கொண்டு வந்தது. அந்த மினி லாரியை மடக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி இரும்பு பொருட்களுடன் மினி லாரியை தூக்கி சென்றதும் தெரிய வந்தது. அந்த மினி லாரியை இவர்கள் வடலூர் சந்தை பின்புறம் கொண்டு சென்று நிறுத்தி இருந்தனர். உடனே போலீசார் அங்கு சென்று பார்த்தபோது இரும்பு பொருட்கள் இல்லாமல் லாரி மட்டும் இருந்தது. இதன்பின்னர் மினி லாரியை ஓட்டி வந்த நபர் கொடுத்த புகாரின் பேரில் இதற்குப் பின்னால் சந்தேகத்தின்பேரில் 10 பேர் கொண்ட கும்பல் இருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் போலீசார் இதற்கு பின்னால் பலர் இருக்கக்கூடும் என்பதால் 3 நபர்களிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். 

    ×