என் மலர்tooltip icon

    கடலூர்

    • சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடலூர் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர் மற்றும் கடும் பனி முடிவுக்கு வந்த நிலையில் சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்   இதேபோன்று சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  ந்நிலையில் கடும் குளிர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கடலூர் வாசிகள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களால் சரிவர பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.   குறிப்பாக அன்றாடம் கூலி வேலை பார்த்து சாப்பிடும் பாமர மக்கள் மற்றும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள்

    இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள வயதானவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் இந்த மர்ம காய்ச்சலை முற்றிலும் தடுக்க உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஆங்காங்கே சேரும் குப்பைகளை அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும்.   குறிப்பாக நீண்ட நாட்களாக மழை நீர் மற்றும் கழிவு நீரால் குட்டைகளில் பல மாதங்களாக தேங்கியி ருக்கும் அசுத்தமான நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • இந்திரா, ராஜலட்சுமி என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றுள்ளார்.
    • அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே திட்டுக்காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி இந்திரா (வயது 45). இவர் சிதம்பரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் வால்காரை பகுதியைச் சேர்ந்த வீராசாமி மனைவி ராஜலட்சுமி (29) என்பவரை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த அனைத்து மகளிர் போலீசார் இந்திராவை கையும் களவுமாக பிடித்து விசாரணை செய்ததில் ராஜலட்சுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்றது தெரியவந்தது. உடனே அனைத்து மகளிர் போலீசார் இந்திரா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர்.
    • எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.

    கடலூர்:

    விருத்தாசலம் ஆயியார்மடம் தெருவைச் சேர்ந்த தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் (வயது 18), காமராஜ் நகரை சேர்ந்த ராமதாஸ் மகன் சன்முகம் (18), ஜனார்த்தனன் (18) ஆகிய 3 பேரும் விருத்தாசலத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது மணலூர் என்ற இடத்தில் எருமனூர் பாலத்திலிருந்து வேப்பூர் செல்ல காரை திருப்பிய போது, எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.

    ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த சாலை வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து குறித்து மணலூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் வேகத்தடைகளோ, பேரிகார்டுகளோ அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருப்பதால் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • ராஜேஷ் கடலூர் அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார்.
    • பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை

    கடலூர்:

    பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பண்டரக்கோட்டை சிவாலயாகார்டன் முருகன் என்பவரது மகன்ராஜேஷ் (வயது19) இவர் கடலூர்அரசு கலைக் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வருகிறார். இவர் தனது வீட்டில் இருந்துபண்ருட்டி கொய்யாப்பழம் லோடு ஏற்றி விடுவதற்காக பகுதி நேர வேலையாக சென்றவர் இதுவரைவீடு திரும்பவில்லை பல இடங்களில்தேடிஎங்கும்கிடைக்காததால் புதுப்பேட்டைபோலீசில் புகார்கொடுத்தனர்.புதுப்பேட்டை போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குபதிவு செய்துகாணாமல் போன கல்லூரி மாணவரை தேடி வருகிறார்.

    • சக்திவேல் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார்.
    • சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்தார் பூமிகா.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காந்தி நகர் காலனியில் வசித்து வருபவர் சக்திவேல். இவர் ஆட்டோ டிரைவர். திருமணமான இவர், தட்டாஞ்சாவடி காளிகோ வில் சுடுகாடு பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதிநள்ளிரவு படுகொலை செய்யப்பட்டார். இன்ஸ்டாகிராம் காதலிபூமிகா என்பவரை பங்கு போட்டு கொள்வதில்ஆட்டோ டிரைவர்கள் சக்திவேல்சுமன்ஆகியஇருவருக்கும்இடையே மோதல்இருந்து வந்தது.சுமன் சக்திவேலை கொலை செய்ய சதி திட்டம்தீட்டி, சம்பவத்தன்று தனது கூட்டாளிகள் உதவியுடன் சக்திவேலை காளிகோவில் சுடுகாட்டுக்கு மதுபானம் அருந்த அழைத்து சென்று தீர்த்துக்கட்டியுள்ளனர்.

    இந்த விஷயம் தொடர்பாகபண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டுசபியுல்லா,இன்ஸ்பெக்டர் நந்தகுமார்வழக்குப்பதிந்து சுமன், வசந்தகுமார், குணா ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். சக்திவேலின் கொலைக்குபிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்த பூமிகா தனது வீட்டை விட்டு வெளியேறிஓடும் பஸ்ஸில் விஷம் குடித்து மயங்கி ய நிலையில் உயிரிழந்தார். இந்த வழக்கில்தலை மறைவாக இருந்த 3 பேரை பிடிக்க பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா தலைமையிலான போலீசார் தேடி வந்தனர். இன்று காலை களத்துமேடு மகேஷ்,மணிகண்டன், கொக்கு பாளையம்அஜீத் ஆகிய 3 பேரை அதிரடியாக கைது செய்தனர். 

    • தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார்.
    • தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே திருவக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் தானிய ஸ்ரீ. இவர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில் தானிய ஸ்ரீ நேற்று கடைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். மீண்டும் இவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தானிய ஸ்ரீயை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கே தெடியும் தனியா ஸ்ரீ கிடைக்கவில்லை. இதனால் தந்தை ஆறுமுகம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கல்லூரி மாணவி தானிய ஸ்ரீ எங்கு சென்றார் என்ன ஆனார் யாரேனும் இவரை கடத்திச் சென்றனரா ? என்பது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது.
    • ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரின் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனை செய்வதை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருவதோடு வழக்கு பதிவு செய்து பலரை கைது செய்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் ராமாபுரம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்து போது தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து பார்த்த போது ஹான்ஸ், பான் மசாலா மற்றும் குட்கா பொருட்கள் சுமார் 183 கிலோ குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராமாபுரம் சேர்ந்த ஆளவந்தான், அனவரதன், வேத நாராயணன், சேட்டு ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் ஆள வந்தார், அனவரதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதே போல் பண்ருட்டி, விருதாச்சலம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பாதிரிப்புலியூர், மங்கலம்பேட்டை, பெண்ணாடம், முத்தாண்டிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதில் 8 பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.

    • நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.
    • கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே தென்னம்பாக்கம் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கும் கலையூர் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 15 -ந் தேதி பெட்ரோல் போடும்போது வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது சேதுபதி அங்கு இல்லாததால் அவரது அண்ணன் பூபாலன், இவரது மனைவி பவித்ரா ஆகியோரை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் பவித்ராவை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது . மேலும் பூபாலன் மீது பெட்ரோலை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

    இதில் காயம் அடைந்த பூபாலன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பூபாலன் தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலையூர் சேர்ந்த ஜீவா (வயது23), தூக்கணாம்பாக்கம் சேர்ந்த கணபதி 22, செல்லஞ்சேரி சேர்ந்த ரகு (22), கலையூர் சேர்ந்த சதீஷ்குமார் (26), புதுவை கல்மண்டபம் சேர்ந்த தினகரன் (24), புதுவை ஏம்பலம் சேர்ந்த யுவராஜ் (21), கலையூர் சேர்ந்த சூர்யா (21) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • இவர்கள் இருவரும் அரசு வீடு வேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர்.
    • பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே கீழ்மாம் பட்டுகிராமத்தை சேர்ந்தவர்ஜெயராமன். இவரது மனைவி வசந்தகுமாரி. ஊராட்சிமன்ற தலைவியாகஉள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர்சிகாமணி. இவரது மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் அரசு வீடுவேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு அரசு சார்பில் வீடுஒதுக்கப்பட வில்லை. இதனைஅறிந்து இவர்கள் ஊராட்சி ஒன் றிய அலுவலக மேனேஜரிடம்புகார் கூறினர்.

    பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர். அப்போது அங்கு வந்தபெண் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரியின் கணவர் ஜெயராமனை பார்த்ததும் ஆத்திரமடைந்து அவரை அசிங்கமாக திட்டி தாக்க முயன்றதாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து ஜெய ராமன் கொடுத்த புகாரின் பேரில்பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துசிகாமணி, ராஜசேகர் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

    • மொபைல் ஷாப் மற்றும் ஆயில் விற்பனை செய்யும் கடை, கார் ஒர்க்‌ஷாப் ஆகியவற்றின் பூட்டு உடைந்து கதவுகள் திறந்து கிடந்தன.
    • த்தியை காட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.

    கடலூர்:

    கடலூர் அருகே காராமணிக் குப்பம் காளி கோவில் அருகே கடைகள் உள்ளன. நேற்று இரவு வழக்கம் போல் அனைத்து கடைகளையும் பூட்டிவிட்டு சென்றனர். இன்று காலை மீண்டும் கடைகள் திறப்பதற்கு நேரில் வந்தனர். அப்போது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பகுதில் உள்ள மருந்து கடை , மொபைல் ஷாப் மற்றும் ஆயில் விற்பனை செய்யும் கடை, கார் ஒர்க்ஷாப் ஆகியவற்றின் பூட்டு உடைந்து கதவுகள் திறந்து கிடந்தன. இதனை தொடர்ந்து ஒவ்வொரு கடையாக உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தன. இதனைத் தொடர்ந்து நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் முகமூடி கொள்ளையர்கள் கார் ஒர்க் ஷாப்பில் பாதுகாப்பு கருதி போடப்பட்டிருந்த கேமரா முழுவதும் உடைத்து உள்ளனர்.

    மேலும் மருந்து கடையில் ஹார்லிக்ஸ் மற்றும் மாத்திரைகள், செல்போன் கடையில் செல்போன்கள், சார்ஜர், ஹெட்செட், ஆயில் கடையில் 4 ஆயிரம் பணம் திருடு போயிருப்பது முதற் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கடலூர் பகுதியில் கடந்த சில தினங்களாக கடையை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் திருட்டு, சாலையில் சென்ற மக்களை வழிமறித்து கத்தியை காட்டி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது. நெல்லிக்குப்பத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவிலில் பூட்டை உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க தாலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த நிலையில் சாலை ஓரத்தில் உள்ள 4 கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • சிதம்பரம் அருகே மணல் லாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
    • இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கடலூர்:

    சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்த விரிவாக்க பணிகளுக்காக கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் வட்டம், மாமங்கலம் ஊராட்சி ஆண்டிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள புத்தேரியில் எடுக்கப்படும் செம்மண் மணல் கற்களை லாரியில் ஏற்றி செல்கிறார்கள்.  தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் மாமங்கலம் கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கக்கூடிய சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுவரை 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும், அவ்வழியே செல்லும் பள்ளி, கல்லூரி பேருந்துகளும், மோட்டார் சைக்கிளில் செல்லும் பொதுமக்களும் அவதிக்குள்ளாகின்றனர்.

    இது தொடர்பாக பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டும் இதன் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த மா.மங்கலம் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சோழத்தரம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அங்கு காரில் வந்த ஒப்பந்தராரரின் பணியாட்கள் பொது மக்கள் மீது காரை ஏற்றுவது போல வந்தனர். இதனால் ஆவேசமடைந்த பொது மக்கள் போலீசார் மற்றும் ஒப்பந்ததாரரின் பணியாட்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தியாத்போதோப்பு டி.எஸ்.பி. ரூபன்குமார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இச்சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்படுகிறது.

    • பண்ருட்டியில் தனியார் ஆஸ்பத்திரி நர்ஸ் உதவியாளர் மாயமானார்.
    • ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது.

    கடலூார்:

    சிதம்பரம் அருகே வையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்செந்தில்குமார். அவரது மகள் சுபத்திரா (வயது 21)இவர் பி.எஸ்.சி. விலங்கியல் படித்து போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சிங் உதவியாளராக பணிபுரித்து வருகிறார். பொங்கல் விடுமு றைக்காக மருங்கூரில் உள்ள பெரியம்மா வளர்மதி வீட்டுக்கு வந்து தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை முதல் காணாமல் போனார்.

    இது குறித்து முத்தாண்டிகுப்பம்போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. புகாரில் ராணிப்பேட்டை மாவட்டம் காட்பாடி சந்திரகுமார் இவரை கடத்தி யதாக கூறப்படுகிறது. இதுபற்றி காடாம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன தனியார் மருத்துவ கல்லூரி பெண் ஊழியரை தேடி வருகின்றனர். 

    ×