search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "crowds in hospitals"

    • சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
    • கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    கடலூர் :

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிந்து குளிர் மற்றும் கடும் பனி முடிவுக்கு வந்த நிலையில் சென்னை நகர் பகுதிகளில் தற்போது புதிதாக ப்ளூ என்ற மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலால் சிறியவர் முதல் பெரியவர் வரை பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்   இதேபோன்று சென்னை மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலூர் பகுதிகளில் இந்த காய்ச்சலால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  ந்நிலையில் கடும் குளிர் பாதிப்பில் இருந்து மீண்டு வந்த கடலூர் வாசிகள் தற்போது மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு அவர்களால் சரிவர பள்ளி கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை.   குறிப்பாக அன்றாடம் கூலி வேலை பார்த்து சாப்பிடும் பாமர மக்கள் மற்றும் அலுவலகத்திற்கு வேலைக்கு செல்பவர்கள்

    இந்த மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சரிவர வேலைக்கு செல்ல முடியாமல் அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ளது. மேலும் வீட்டில் உள்ள வயதானவர்களும் இதனால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் கூட்டம் அலைமோதி வருகிறது. எனவே பொதுமக்கள் மத்தியில் பரவி வரும் இந்த மர்ம காய்ச்சலை முற்றிலும் தடுக்க உரிய அதிகாரிகள் இதில் தலையிட்டு தூய்மை பணியாளர்கள் மூலம் தெருக்கள் மற்றும் வீதிகளில் ஆங்காங்கே சேரும் குப்பைகளை அகற்றி கொசு மருந்து அடிக்க வேண்டும்.   குறிப்பாக நீண்ட நாட்களாக மழை நீர் மற்றும் கழிவு நீரால் குட்டைகளில் பல மாதங்களாக தேங்கியி ருக்கும் அசுத்தமான நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×