கடலூர் அருகே வீடு சூறை தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி ெகாலை மிரட்டல்: 7 பேர் கைது

நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர்.கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.
கடலூர் அருகே வீடு சூறை  தொழிலாளி மீது பெட்ரோல் ஊற்றி ெகாலை  மிரட்டல்:  7 பேர் கைது
Published on

கடலூர்:

கடலூர் அருகே தென்னம்பாக்கம் சேர்ந்தவர் சேதுபதி. இவருக்கும் கலையூர் சேர்ந்த ஜீவா என்பவருக்கும் கடந்த 15 -ந் தேதி பெட்ரோல் போடும்போது வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதன் காரணமாக இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்த நிலையில் நேற்று இரவு ஜீவா உள்பட 7 பேர் கொண்ட கும்பல் திடீரென்று சேதுபதி வீட்டிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அப்போது சேதுபதி அங்கு இல்லாததால் அவரது அண்ணன் பூபாலன், இவரது மனைவி பவித்ரா ஆகியோரை சரமாரியாக தாக்கினார்கள். மேலும் பவித்ராவை மானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது . மேலும் பூபாலன் மீது பெட்ரோலை ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததோடு வீட்டின் ஜன்னல், கதவு மற்றும் மோட்டார் சைக்கிளை உடைத்து சேதப்படுத்தினர்.

இதில் காயம் அடைந்த பூபாலன் மற்றும் அவரது மனைவி பவித்ரா ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பூபாலன் தூக்கணாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கலையூர் சேர்ந்த ஜீவா (வயது23), தூக்கணாம்பாக்கம் சேர்ந்த கணபதி 22, செல்லஞ்சேரி சேர்ந்த ரகு (22), கலையூர் சேர்ந்த சதீஷ்குமார் (26), புதுவை கல்மண்டபம் சேர்ந்த தினகரன் (24), புதுவை ஏம்பலம் சேர்ந்த யுவராஜ் (21), கலையூர் சேர்ந்த சூர்யா (21) ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com