பண்ருட்டி அருகே பெண் பஞ்சாயத்து தலைவர் கணவருக்கு கொலை மிரட்டல்:தந்தை, மகனுக்கு வலை வீச்சு

இவர்கள் இருவரும் அரசு வீடு வேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர். பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர்.
பண்ருட்டி அருகே  பெண் பஞ்சாயத்து தலைவர்  கணவருக்கு கொலை மிரட்டல்:தந்தை, மகனுக்கு வலை வீச்சு
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே கீழ்மாம் பட்டுகிராமத்தை சேர்ந்தவர்ஜெயராமன். இவரது மனைவி வசந்தகுமாரி. ஊராட்சிமன்ற தலைவியாகஉள்ளார். இதே கிராமத்தை சேர்ந்தவர்சிகாமணி. இவரது மகன் ராஜசேகர். இவர்கள் இருவரும் அரசு வீடுவேண்டும்என்று பண் ருட்டிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்பதிவுசெய்திருந்தனர். ஆனால் இவர்களுக்கு அரசு சார்பில் வீடுஒதுக்கப்பட வில்லை. இதனைஅறிந்து இவர்கள் ஊராட்சி ஒன் றிய அலுவலக மேனேஜரிடம்புகார் கூறினர்.

பஞ்சாயத்து தலைவியின் கணவர் வேண்டுமென்றே எங்களுக்கு வீடு ஒதுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார் என்று முறையிட்டனர். அப்போது அங்கு வந்தபெண் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தகுமாரியின் கணவர் ஜெயராமனை பார்த்ததும் ஆத்திரமடைந்து அவரை அசிங்கமாக திட்டி தாக்க முயன்றதாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததனர். இதுகுறித்து ஜெய ராமன் கொடுத்த புகாரின் பேரில்பண்ருட்டிபோலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்துசிகாமணி, ராஜசேகர் ஆகிய 2 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com