என் மலர்
நீங்கள் தேடியது "Youth who sold drugs"
- கடலூர் நகருக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகள் வருவதாக மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது.
- பார்சலை பரிசோதனை செய்ததில் அதில் 600 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை முற்றிலும் தடை செய்வத ற்காக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின் பேரில் டெல்டா பிரிவு போலீசார் தீவிரமாக கடலூர் மாவட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தி வந்தனர் இந்நிலையில் கடலூர் நகருக்கு கூரியர் மூலம் போதை மாத்திரைகள் வருவதாக மாவட்ட எஸ்.பி. சக்திகணேசனுக்கு தகவல் கிடைத்தது. சம்பவத்தன்று டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான போ லீசார் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சங்கர நாயுடு தெருவில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்துக்கு 2 இளைஞர்கள் வந்தனர். அவர்கள் ஒரு பார்சலை வாங்கிக்கொண்டு புறப்பட முயன்றனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது ேபாலீசார் வருவதை கண்டு ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்றொருவரை போலீசார் பிடித்தனர். இதனையடுத்து பார்சலை பரிசோதனை செய்ததில் அதில் 600 போதை மாத்திரைகள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அது நீரிழிவு நோயாளி களுக்கான வலி நிவாரண மாத்தி ரைகள் என்பதும், அந்த மாத்திரைகளை நீரில் கலந்து குடித்தால் போதை ஏற்படும் என்பதும், குட்கா பொருள்கள் விற்பனை தடை செய்த நிலையில் தற்போது கடலூர் மாவட்டத்தில் போதை பொருள்கள் கிடைக்காததால் இளைஞர்கள் மிகத் தத்ரூபமாக போதை மாத்திரியை கூரியர் மூலம் ஹைதராபாத்தில் இருந்து வரவழைத்தது தெரியவந்தது. இவர்கள் இந்த கூரியர் மூலம் போதை மாத்திரை 3 மாத காலத்திற்கு மேலாக கடத்தி வந்து 3000 போதை மாத்திரைக்கும் மேல் விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் இவர்கள் இந்த மாத்திரைகளை ரூபாய் 50, 60 குறைந்த விலையில் வாங்கி நான்கு மடங்கு லாபம் வைத்து 250, 300 ரூபாய்க்கு விற்பனை செய்வது தெரியவந்தது. சில நாட்களுக்கு முன்பு இவர்கள் இதேபோன்று கூரியர் பார்சல் மூலம் போதை மாத்திரைகள் கடத்தி வந்தபோது பார்சலை பிரித்து சோதனை செய்யும் நேரத்தில் பார்சலை வேகமாக வாங்கி இளைஞர்கள் தப்பிச் சென்றது குறிப்பிடத்தக்கது மேலும் மாத்திரைகளை இளைஞர்கள், கல்லூரி மாணவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. பிடிபட்ட வாலிபர் கடலூர் பாதிரிக்குப்பம் செல்லமுத்து குமரன் நகரைச் சேர்ந்த கவியரசன்(வயது 23) எனத்தெரிய வந்தது. உடனே டெல்டா பிரிவு போலீசார் அந்த வாலிபரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர. அவர்கள் வழக்குபதிந்து கவியரசனை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடலூர் முதுநகரைச் சேர்ந்த ராகுலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






