என் மலர்
கோயம்புத்தூர்
- வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
- வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.
கோவை:
குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.
இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.
சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.
அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
- மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தாசம்பாளையத்தை சேர்ந்தவர் சுஜித்குமார் (வயது 30).
இவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் டையிங் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுஜித்குமாருக்கு தோலம்பாளையத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் நேரில் பார்த்து கொள்ளாமல் செல்போன் மூலம் பேசி பழகி வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபருடன் பேசுவதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுரை கூறினர்.
இதனையடுத்து இளம்பெண் தனது காதலனுடன் பேசுவதை தவிர்த்தார். ஆனால் சுஜித்குமார் அடிக்கடி செல்போன் மூலம் தொடர்பு கொள்ள முயன்றார். இளம்பெண் போனை எடுக்கவில்லை.
இந்தநிலையில் இளம்பெண்ணின் பெற்றோர் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி செல்போன் மூலமாக தங்களது மகளுக்கு வாலிபர் தொல்லை கொடுப்பதாக மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரையடுத்து சுஜித்குமாரை தொடர்பு கொண்ட போலீசார் விசாரணைக்கு நேரில் வருமாறு அழைத்தனர்.
இதனையடுத்து அவர் கடந்த 3-ந் தேதி பெங்களூரில் இருந்து தனது வீட்டிற்கு வந்தார். போலீசாரின் விசாரணைக்கு பயந்து அவர் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஜித்குமார் போலீஸ் விசாரணைக்கு பயந்து விஷத்தை குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக சிங்காநல்லூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சுஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது.
- புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும்.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா சமூக ஊடக செயல்வீரர்கள் கூட்டம் காளப்பட்டியில் நடந்தது. கூட்டத்துக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
சமூக வலைதளங்களின் வாயிலாக மக்களுக்கு எப்படி உதவலாம், நாம் செய்யும் உதவி எப்படி அவர்களை சென்றடைகிறது. அதன்பின் அவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மக்களிடம் பொத்தாம் பொதுவாக பேசக்கூடாது. புள்ளி விவரங்களின் அடிப்படையிலும், ஆதாரங்களை கொண்டும் உண்மையை தான் பேச வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்கு பல விஷயங்களை படிக்க வேண்டும். பார்க்க வேண்டும், கேட்க வேண்டும். அப்போது தான் நமக்கு தேசிய, மாநில, மாவட்ட, மாநகரம் வரை அனைத்து அரசியலையும் புள்ளி விவரமாக புரிந்து கொள்ள முடியும். அதை மக்களிடம் புட்டு, புட்டு வைக்க முடியும்.
அதற்கு தினமும் நாளிதழ்களை படிப்பதும், டி.வி.யில் செய்தியை கேட்பதையும் பழக்கமாக்கி கொள்ள வேண்டும். மொபைல் போனில் சமூக வலைதளங்களை முழுமையாக பார்த்து அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க.வினர் 50 ஆண்டு காலமாக மக்களிடம் சொல்லி வரும் பொய்கள், அவர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும். உண்மை நிலவரத்தை சுட்டிக்காட்டி அதை அவர்கள் மனதில் இருந்து களைய வேண்டும். அப்பணியை நம் தொண்டர்களும், செயல்வீரர்களும் மேற்கொள்ள வேண்டும். அதற்கான முயற்சிகளை இன்றே தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
- போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்
கோவை,
கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர்.
இவருக்கும், சிவகாசியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் 9 ஆண்டு களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் குமாருக்கு சிவகாசியை சேர்ந்த மற்றொரு பெண்ணு டன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்கா தலாக மாற 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டனர்.
இந்த விவகாரம் அவரது மனைவிக்கு தெரிய வரவே, அவர் கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கேட்காமல் கள்ளக்காதலை தொடர்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இள ம்பெண் சிவகாசி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் 2 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குமார் தனது மனைவியுடன் கோவைக்கு வந்து விட்டார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு குமாரின் கள்ளக்காதலி, கோவைக்கு வந்துள்ளார். பின்னர் குமாரை தொடர்பு கொண்டு அழைத்தார். 2 பேரும் சந்தித்து பேசினர்.
இந்த விவகாரம் குமாரின் மனைவிக்கு தெரியவரவே மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து கணவரிடம் கேட்டபோது, அவர் பெண்ணை தகாத வார்த்தை களால் திட்டியதுடன், தாக்கினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
இதுகுறித்து இளம்பெண் தனது மாமனாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் மகனுக்கு சாதகமாக பேசினார்.
இதையடுத்து இளம்பெண் சம்பவம் குறித்து ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் குமார் மற்றும் அவரது தந்தை பரமசிவம் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து இளம்பெண்ணின் கணவர் குமாரை கைது செய்தனர்.
இதற்கிடையே தனது மகனை, இளம்பெண்ணின் தந்தை மற்றும் சகோதரர் சேர்ந்து தகாத வார்த்தை களால் பேசி தாக்கியதாக குமாரின் தந்தை பரமசிவமும் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் இளம்பெண்ணின் தந்தை ஜெகநாதன், சகோதரர் தங்கபாண்டி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன.
- புகார் கொடுத்தால் மட்டுமே குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
கோவை,
கோவையில் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்தபடி உள்ளது. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் சைபர் கிரைம் குற்றப்புலனாய்வு பிரிவு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
அவர்கள் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் வங்கி கணக்குகளை முடக்குவது மட்டுமின்றி, பாதிக்கப்ப ட்டவர் இழந்த பணத்தையும் மீட்டு ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகி ன்றனர். அதேநேரத்தில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. எனவே சைபர் கிரைம் குற்றங்களின் வகைகள், குற்றவாளிகளிடம் இருந்து தப்புவது எப்படி, ஏமாந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடி க்கைகள் ஆகியவை தொடர்பாக மாநகர போலீசார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதில் இணையதள குற்றவாளிகள் எப்படி எல்லாம் ஏமாற்றுகின்றனர், பாதிக்கப்பட்டோர் செய்யக்கூடிய தவறுகள் என்னென்ன, பணத்தை இழந்தவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன? ஆகியவை குறித்த அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
இதுகுறித்து கோவை மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இணையத்தில் தினமும் புதுப்புது மோசடிகள் நடந்து வருகின்றன. இதில் படிக்காதவர் மட்டுமின்றி படித்தவர்களும் எளிதில் சிக்கி விடுகின்றனர். அப்போது பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக போலீசில் புகார் கொடுப்பது இல்லை. இதனால் குற்றவாளிகள் எளிதில் தப்பி விடுகின்றனர். கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் குற்ற வாளிகளை பிடிப்பத ற்காகவே தனிப்படை இயங்கி வருகிறது. எனவே ஆன்லைன் பணமோசடி, ஓ.டி.டி மூலம் பணம் இழந்தவர்கள், கிரெடிட் கார்டு மோசடி, இ-காமர்ஸ் மோசடி மற்றும் பல்வேறு அம்சங்கள் வாயிலாக பணம் இழந்தவர்கள் உடனடியாக கட்டணம் இல்லா தொலைபேசி எண்:1930 மூலம் தொடர்பு கொண்டு புகார் தரலாம். இதுதவிர www.cybercrime.gov.in இணையத்தளம் மூலமாகவும் புகாரை பதிவு செய்யலாம். இணைய த்தளமோசடியில் பணம் இழந்தவர்கள் எவ்வளவு சீக்கிரம் புகார் கொடுக்கிறா ர்களோ, அந்தளவுக்கு குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து பணத்தை மீட்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.
- உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது
- புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் பிளஸ்-2 படித்து முடித்து இருந்தார். மாணவிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனியை சேர்ந்த உறவினரான 22 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் அவர்களது காதலை வளர்த்து வந்தனர். இந்த காதல் விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அந்த வாலிபருடனான காதலை கைவிடுமாறு அறிவுரை கூறினார். ஆனால் மாணவி அவரது காதலை தொடர்ந்து வந்தார். பெற்றோர் பிரிந்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவி இருந்தார். எனவே அவர் தனது காதலனுடன் செல்வது என முடிவு செய்தார்.
சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த மாணவி தனது காதலனுடன் ஓட்டம் பிடித்தார். வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவியின் பெற்றோர் அவர் வீட்டில் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அவர்கள் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவி அவரது உறவினரான வாலிபருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. எனவே போலீசார் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- நண்பர்களுடன் கோட்டூர் ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார்
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கடலூரை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 23). இவர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று விடுமுறை என்பதால் அருள்முருகன் அவருடன் வேலை பார்க்கும் ராஜ்குமார், பால்ராஜ், சதீஷ், குணசீலன், மயி ல்சாமி, கர்ணன், கோவிந்த் ஆகி யோருடன் ஆலைம லைக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்தார்.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த அருள்முருகன் அவரது நண்பர்களுடன் கோட்டூர் ஆற்றுப்பாலத்தில் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றார். தடுப்பணையில் அவர் நண்பர்களுடன் ஜாலியாக குளித்துக்கொ ண்டு இருந்தார்.
அப்போது திடீரென அருள்முருகன் ஆழமான பகுதிக்கு சென்றார். அங்குள்ள சேற்றில் சிக்கி அவர் நீருக்குள் மூழ்கினார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அருள்மு ருகனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை.
பின்னர் இது குறித்து அவர்கள் ஆனைமலை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தடுப்பணையில் இறங்கி அருள்முருகனின் உடலை தேடினர். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவரது உடலை கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் இரவாகி விட்டதால் தேடுதல் பணியை தீயணைப்பு வீரர்கள் கைவிட்டனர்.
இன்று காலை 6 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் அருள்முருகனின் உடலை தேடினர். ஒரு மணி நேர தேடுதலுக்கு பின்னர் அவரது உடலை கைப்பற்றினர்.
பின்னர் போலீசார் தடுப்பணை சேற்றில் சிக்கி இறந்த அருள்முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்
- பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள அங்காலகுறிச்சியை சேர்ந்தவர் மனோகரன். டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி (வயது 38). சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் விடுதியில் தங்கி படிக்கும் மகனை பார்ப்பதற்காக மாெபட்டில் புறப்பட்டனர். மொபட்டை மனோகரன் ஓட்டிச் சென்றார்.
மொபட் சமத்தூர் மணல்மேடு அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களை மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் கண்இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த மகாலட்சுமி இது குறித்து காட்டூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவருடன் மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் சென்ற வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
- விரக்தியில் கிமாஞ்சு பிளேடால் தலையில் வெட்டி கொண்டுள்ளார்
- புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
உத்தர பிரதேச மாநிலம் மிர்சாகூரை சேர்ந்தவர் கிமாஞ்சு (வயது 24). இவர் கோவை சின்னவேடம்பட்டியில் தனது உறவினரான ரஞ்சித் என்பவருடன் தங்கி இருந்தார். அருகிலுள்ள தனியார் ரப்பர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித்தை தொடர்பு கொண்டு கிமாஞ்சு ஏன் சரிவர வேலை செய்வதில்லை என கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ரஞ்சித், கிமாஞ்சு மன அழுத்தத்தில் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது விரக்தியில் கிமாஞ்சு பிளேடால் தலையில் வெட்டி கொண்டுள்ளார். பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.
சம்பவத்தன்று கிமாஞ்சு வேலைக்கு செல்லாமல் அறையிலேயே இருந்துள்ளார். காலையில் வேலை முடித்து ரஞ்சித் அறைக்கு வந்துள்ளார். அப்போது கிமாஞ்சு வாழ்க்கையில் விரக்தி அடைந்து அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஆட்டோவில் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் பேச்சிமுத்து. இவரது மகன் கார்த்திக் (27). இவர் வார விடுமுறையை ஒட்டி நேற்று நண்பர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது திடீரென கார்த்திக் மயங்கி விழுந்து சரிந்தார். உடனடியாக அவரை ஆட்டோவில் அருகிலுள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த வாலிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்து போன சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இந்த ஊருக்கு அழிவு காலம் வரப்போகிறது என கூறி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
- நெஞ்சு வலிப்பதாக கூறியதால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள மூலக் குரும்ப பாளையம் உள்ளது. இந்த ஊரில் ஸ்ரீ அண்ணமார் கோவில், பட்டத்தரசி அம்மன் கோவில் ஆகியவை உள்ளன. இந்த கோவில்களில் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 55) என்பவர் பூசாரியாக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இவர் வழக்கம் போல பூஜைகள் முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலுக்குள் நுழைந்த மர்மநபர் ஸ்ரீ அண்ணமார் கோவிலுக்கு சென்று முன்புறம் இருந்த சிமெண்டிலான சிலையின் கழுத்து பகுதியை சேதப்படுத்தினார். குதிரையுடன் கூடிய காவல் தெய்வம் சிலை, பாம்பட்டி அய்யனார் சிலை, நாகர் சிலைகளை அடித்து உடைத்தார். பின்னர் 7 இரும்பு வேல்களையும் கீழே சாய்த்து போட்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் எதற்காக இப்படி செய்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு அந்த மர்மநபர் அப்படிதான் உடைப்பேன். இந்த ஊருக்கு அழிவு காலம் வரப்போகிறது என கூறி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.பொதுமக்கள் இது குறித்து கோவில் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவிலுக்கு விரைந்து சென்றார். அங்கு சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் பூசாரி சண்முகம் இது குறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கோவில் சிலைகளை உடைத்தது அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் (40) என்பது தெரிய வந்தது. அவர் குடிபோதையில் கோவில் சிலைகளை உடைத்தது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் அவரை கைது செய்வதற்காக அவரது வீட்டிற்கு சென்றனர். அப்போது சுரேஷ்குமாருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் 108 ஆம்புலன்சு மூலமாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கண்காணித்து வருகின்றனர்.
இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது
- கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அன்னூர்,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே பிள்ளையப்பம்பாளையத்தில் தனியார் செயின் தொழிற்சாலை உள்ளது.
இங்கு வடமாநில தொழி லாளர்கள் அதிகளவில் வேலை பார்த்து வருகிறார்கள்.
வடமாநில தொழிலா ளர்கள் தங்குவதற்கு தொழிற்சாலையின் எதிர்புறமும் விடும் உள்ளது.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த ஒரு அறையில் திடீரென கியாஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது.
இதில் வடமாநில தொழிலாளர்களான உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங், தன்ஜெய் சிங், மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா, தரம்வீர், மகாதேவ் சிங் ஆகிய 5 பேர் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இதை பார்த்த சக தொழிலாளர்கள் ஓடி வந்து 5 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை மற்றும் கோவில்பாளை யத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டு வந்தது. கடந்த 16-ந் தேதி உத்தரபிரதேசத்தை சேர்ந்த அனுராக் சிங் மற்றும், தன்ஜெய் சிங் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை கோவில்பாளையம் ஆஸ்பத்திரியில் சிகிச்ைச பெற்று வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த வீரேந்திரஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் கியாஸ் தீ விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.
தரம்வீர், மகாதேவ் ஆகியோர் கோவில்பாளையம் தனியார் ஆஸ்பத்திரி யில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.






